SHARE
image_pdfPRINT

மல்லாகம் சந்தியில் உள்ள காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருகோணமலையை சேர்ந்த என்.நஸிர் (வயது 25) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே தற்கொலை செய்து கொண்டவராவார்.

குறித்த உத்தியோகஸ்தர் இன்று காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென தனது AK 47 ரக துப்பாக்கியால் நெஞ்சு பகுதியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.