SHARE
image_pdfPRINT

தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு அருகில் வாளுடன் நடமாடிய இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ். மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீதியில் பயணித்த வேளை யூனியன் கல்லூரிக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த இளைஞன் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான்.

அதனை அடுத்து இளைஞனை துரத்தி சென்று பொலிஸார் மடக்கி பிடித்து சோதனையிட்ட போது வாள் ஒன்றினை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டனர்.

அதனை தொடர்ந்து இளைஞனை கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.