தெய்வீக சுகானுபவம்
இந்தியாவின் பிரபல பரதநாட்டியக்கலைஞர் கலைமாமணி,நிருத்திய சூடாமணி,நாட்டிய இளவரசி ஸ்ரீமதி ஊர்மிளா சத்தியநாராயணன் அவர்களும் அவரது குழுவினரும் இணைந்து வழங்கும் பரதநாட்டிய நடன அளிக்கை யாழில். நடைபெறவுள்ளது.
இந்தியாவின் பிரபல பரதநாட்டியக்கலைஞர் கலைமாமணி,நிருத்திய சூடாமணி,நாட்டிய இளவரசி ஸ்ரீமதி ஊர்மிளா சத்தியநாராயணன் அவர்களும் அவரது குழுவினரும் இணைந்து வழங்கும் பரதநாட்டிய நடன அளிக்கை யாழில். நடைபெறவுள்ளது.
நல்லூர் ஆலய சூழலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த எரிவாயு கொள்கலன் (காஸ் சிலிண்டர்) வெடித்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
கிளிநொச்சி பொலிசார் இலஞ்சம் வாங்குவதாக தெரிவித்து முதியவர் ஒருவர் நீதி அமைச்சர் , பிரதம நீதியரசர் ஆகியோருக்கு முன்னால் மரத்தில் ஏறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தினார்.
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த வேளை மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
தமிழின அழிப்புக்கு நீதி கோரிய ஐ.நா.வை நோக்கி ஈருருளிப்பயணம் 82 மைல்களைக் கடந்து 2 ஆவது நாளான இன்று Harwich international port துறைமுகத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று (2) இரவே கடல் வழியாக நெதர்லாந்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும் குழுவினர் நாளை நெதர்லாந்தை அடைந்து அங்கிருந்து ஐ.நா.வை நோக்கி தமது பயணத்தை தொடரவுள்ளனர்.
தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதியை கோரியும் இலங்கை அரசு பொறுப்புகூறலிலிருந்து விலகிச்செல்கின்றமை மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றமை உள்ளிட்ட விடயங்களிற்கு நீதி கோரியும் ஐ.நா.வை நோக்கிய மாபெரும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்று பிரித்தானியாவிலிருந்து ஆரம்பமானது.
தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த நாடுகளைக்கடந்த ஐ.நா. நோக்கிய இம் மாபெரும் ஈருருளிப்பயணம் முதல் நாளான நேற்று பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தல முன்றலிலிருந்து ஆரம்பமாகி 38 மைல்கள் கடந்து Chelmsford எனும் இடத்தை சென்றடைந்தது.
இந்நிலையில் 2 ஆவது நாளான இன்று குறித்த இடத்திலிருந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்த செயற்பாட்டாளர்கள் 44 மைல்கள் பயணித்து மாலை Harwich international port துறைமுகத்தை சென்றடைந்தனர்.
இதனையடுத்து இன்று இரவே கடல் வழியாக படகின் மூலம் பயணத்தை தொடரவுள்ள குழுவினர் நாளை நெதர்லாந்து சென்றடைந்து அங்கு தயார் நிலையிலுள்ள பயணக்குழுவினருடன் இணைந்து ஐ.நா. நோக்கிய பயணத்தை தொடரவுள்ளனர்.
குறித்த பயணம் நெதர்லாந்து பெல்ஜியம் லக்சம்பெர்க் செருமணி பிரான்ஸ் ஆகிய பலணப்பாதையூடாக சென்று இறுதியாக சுவிஸை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனக்குழப்பத்தில் இருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மனக்குழப்பத்தை நீக்கி சரியான பதில் ஒன்றை தெரிவிப்பாராக இருந்தால், அதன் பின்னர் அடுத்த மாகாணசபை தேர்தல் குறித்து கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பருத்துறையில் உள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம்
அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்தே கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. நேற்று முன்தினம் முதலமைச்சர் உரையாற்றும்போது தன் முன் மூன்று தெரிவுகள் முன்னர் இருந்ததாகவும், தற்போது நான்கு தெரிவுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆகவே நாட்கள் செல்ல.. செல்ல.. தெரிவுகளின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புக்கள் உள்ளது. அவருடைய மனக்குழப்பங்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல.
ஆகவே அவர் தனது மனக்குழப்பம் தெளிந்து, தெளிவான ஒரு தெரிவினை கூறியதன் பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.
நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் முதலமைச்சர் தான் சார்ந்த கட்சிக்கு எதிராக செயற்பட்டதனை வெளிப்படையாக கண்டித்தவன் நான். அப்போது நான் பேசியது தவறு என கூறியவர்கள் இப்போது நான் கூறியது அனைத்தும் சரியென கூறுகிறார்கள்.
மாகாணசபை தேர்தல் காலத்தில் தான் போட்டியிடும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என கேட்ட முதலமைச்சர் நாடாளுமன்ற தேர்தலில் வீட்டைவிட்டு வெளியேறி வாக்களியுங்கள் என கூறியவர் இனியும் கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர். எனவே தமிழ் மக்களுடைய சுயமரியாதைக்காக போராடும் கட்சி தனது சுயமரியாதையை இழக்க முடியாது. என மேலும் தெரிவித்தார்.
சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை. ஊடகங்கள் பொய்யுரைத்து உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று சனிக்கிழமை பருத்துறையில் அமைந்துள்ள தமிழ்தேசிய கூ ட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சமஸ்டி அரசியலமைப்பு எமக்கு தேவையில்லை. என நான் காலியில் பேசியதாக இன்றைய தினம பல ஊடகங்களில் தலைப்பு செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து சில பத்திரிகைகள் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் அப்படி பேசியிருக்க மாட்டீர்களே
என விளக்கம் கேட்டார்கள். அவர்கள் எனது விளக்கத்துடன் இன்று செய்தியை வெளியிட்டி ருக்கின்றார்கள்.
ஆனாலும் பல ஊடகங்கள் என்னை கேட்காமல் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். தமிழரசு கட்சியின் அடிப்படைக் கொள்கையே சமஸ்டியாகும்.
இந்நிலையில் சமஸ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு தேவையில்லை. என நான் கூறிய தாக செய்திகளை வெளியிட்டிருக்கும் பத்திரிகைகள் என்னை தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம்.
புதிய அரசியலமைப்பு குறித்து மக்களை தெளிவுபடுத்தும் கூட்டங்கள் தெற்கில் இடம்பெற்று வருகின்றன. இதில் 7வது கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலி மாவட்டத்தில் இடம்பெற்றது.
இது குறித்து தமிழ் மக்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் தமிழ் ஊடகங்கள் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த கூட்டங்கள் புதிய அரசியலமைப்பு இந்த நாட்டுக்கு எந்தளவு தூரம் அவசியமானது என்பதை மக்களிடம் தெளிவுபடுத்தி மக்களுடைய ஆதரவுடன் அதனை வெற்றி பெறச் செய்வதை நோக்கமாக கொண்டது.
இதனை பழைய இடதுசாரி கட்சிகள் சில முன்னெடுக்கின்றன. இதில் அரசியல் கட்சிகளாக தமிழ்தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் சில இடங்களில் ஐக்கியதேசிய கட்சியும் பங்களிக்கிறது.
இந்த கூட்டங்களில் பிரதமானமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களை பேசி வருகிறோம். மக்கள் விடுதலை முன்னணி 20வது திருத்தச் சட்டத்தை முன்வைத்துள்ளபோதும்
தமது முன்னுரிமை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் எனவும் அது உருவாக்கப்பட்டால் 20வது திருத்தச்சட்டத்தை தாங்கள் கைவிடுவதாகவும் கூறியுள்ளது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தளவில் 20வது திருத்தச்சட்டத்தை நாம் ஆதரித்தாலும் எங்களுடைய கொள்கையின் படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்ப டவேண்டும். ஆனால் அது மட்டும் செய்தால் இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்.
அதற்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். இதனை நாம் கூறுவதுடன் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைபில் நிபுணர்களால் மாதிரி வரைபாக கூறியுள்ள விடயங்களையும் நாங்கள் கூறியே வருகிறோம். அதிலும் சமஸ்டி என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை
அதேபோல் ஒற்றையாட்சி என்ற சொல்லும் இடம்பெற்றிருக்கவில்லை. இது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதனை தமிழ் பிரதேசங்களில் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் நான் கூறிவந்திருக்கிறேன்.
புதிய அரசியலமைப்பில் சமஸ்டிக்கான 2 குணாம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது மாதிரி வரைபிலும் உள்ளது. ஆனால் சமஸ்டி என்ற பெயர்பலகை அல்லது சொல்லாடல் இருக்க கூடாது என்பதுடன், புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பாகவும் இருக்ககூடாது. இது எங்களுடைய நிலைப்பாடு.
வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம்,
மற்றும் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் வந்த சந்திரிக்கா அம்மையாருடைய தீர்வு திட்டம் உள்ளிட்டவற்றிலும் சமஸ்டி பெயர்பலகை அல்லது சொல்லாடல் இல்லை. அதேபோல் ஒற்றையாட்சி பெயர்பலகை அல்லது சொல்லாடல் இல்லை.
ஆகவே அந்தமாதிரியான ஒரு ஒழுங்குமுறை ஊடாகவே நாங்கள் நகர்ந்து கொண்டிருக் கிறோம். புதிய அரசியலமைப்பு சம்மந்தமான பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது 2015.01.19ம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றில் உரையாற்றுகையில்,
சமஷ்டி என்றால் தெற்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஒற்றையாட்சி என்றால் வடக்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் அர சியலமைப்பு மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படகூடாது. அவ்வாறான ஆவணமாக அது இருக்ககூடாது.
எனவே நவீன அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் அந்த கருத்து இடைக்கால வரைபில் அப்படியே கூறப்பட்டுள்ளது. ஆகவே பெயர்பலகையில் அல்லது சொற்களில் தங்கியிருந்து குழப்பங்களை விளைவிக்காமல், புதிய அரசியலமைப்பு முயற்சிகளை தோற்கடிக்காமல் இருக்க. நாம் பெயர்பலகை அல்லது சொல்லாடலை தவிர்த்து உள்ளடக்கத்தில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு ஒன்றை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
இதனை நான் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்கும் தெளிவாக கூறிவருகிறேன். இரத்தினபுரி பகுதியில் உரையாற்றும்
போது இந்த நாடு ஒரு நாடாக இருக்கவேண்டுமானால் புதிய அரசியலமைப்பு தேவை. இது வரை தமிழ் மக்கள் ஒரு நாட்டுக்குள் இணக்கமாக வாழ்வதற்கான இணக்கப்பாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை. ஆகவே இந்த சமூக ஒப்பந்தம் அவசிய மானது.
இந்த ஒரு நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழ்வதற்கான இணைக்கப்பாட்டை நாங்கள் தெரிவிப்பதற்கான நிபந்தனையாக அர்தமுள்ள அதிகார பகிர்வு இடம்பெறவேண்டும். என கூறினேன்.
அதேபோல் காலியில் நடைபெற்ற கூட்டத்திலும் சமஸ்டி குறித்து பல விடயங்களை கூறியிருந்தேன். கூட்டத்தின் நிறைவில் என்னுடைய உரையை அடிப்படையாக கொண்டு என்னை நோக்கி விசேடமான கேள்வி ஒன்று எழுப்பபட்டது. அந்த கேள்வி சமஸ்டியை மட்டும்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
என அமைந்திருந்தது. அப்போதும் நான் வழக்கமாக கூறுவதைபோல் சமஸ்டி பெயர்பலகை அல்லது. சொல்லாடல் எமக்கு தேவையில்லை. என்றே கூறினேன்.
அதனை சமஸ்டி தேவையில்லை. என நான் கூறியதாக ஊடகங்கள் தலைப்பு செய்திகளை வெளியிட்டிருக்கின்
இலங்கையுடனானா ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற கோரிக்கையை ஏற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் றொசினா அலீன்-கான் நாடாளுமன்ற விவாத முன்பிரேரணைக்கு (Early Day Motion) ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
ரூட்டிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவரை சந்தித்து செயற்பாட்டாளர்களான யோகராஜா இக்னேஸ்வரன் கிருஸ்ணமூர்த்தி உமாராஜ் வாசீகன் தங்கவேல் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அசாந்தன் தியாகராஜா ஆகியோர் குறித்த முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்கக்கோரிய போதே மேற்படி அவர் உறுதியளித்துள்ளார்.
ஐ.நா ஆயுதவர்த்தக ஒப்பந்தத்தில் மனித உரிமைகளை மீறும் நாடுகளுக்கு ஆயுத விற்பனைகளை செய்வதில்லையென கைச்சாத்திட்ட பிரித்தானியாஇ தமிழினப்படுகொலை செய்த பேரினவாத இலங்கை அரசுக்கு தொடர்ச்சியாக ஆயுதவிற்பனை செய்துவருகின்றது.
அந்தவகையில் இதனை தடுத்துநிறுத்தும் முயற்சியில் தமிழ் தகவல் நடுவத்துடன் இணைந்து பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் சுமார் 6 மாத காலங்களைக்கடந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகி;றனர்.
இதன் பலனாக குறித்த விவகாரம் பாராளுமன்ற விவாதத்திற்குட்படுத்தும் முன்பிரேணைக்கான (EDM) வாக்குகோரும் தளம் ஒன்று பாராளுமன்ற இணையத்தளத்தில் இணைக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு ஆயத விற்பனைக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் பிரித்தானியாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையிலேயே மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் றொசினா அலீன்-கானை சந்தித்த குழுவினர் பிரித்தானியாவிடமிருந்து ஆயுதத்திரனை கொள்வனவு செய்யும் இலங்கை அரசு அதனை கொண்டு தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை தொடர்ந்தும் செய்து வருகிறது என எடுத்து விளக்கினர்.
இதனையடுத்து குழுவினர்களின் கோரிக்கைகளை நன்கு கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
முன்பிரேரணைக்கான கையொப்ப தளத்தில் (EDM) இதுவரையில் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதனை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில் ஆட்களை வைத்து நாளிதழ்களின் பிரதிகளை தீயிட்டெரிப்பதும் அதனை பொதுவெளியில் பகிர்வதும் அப்பட்டமான ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டுவதுடன் ஊடக சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்பதை யாழ்.ஊடக அமையம் வன்மையாக பதிவு செய்கின்றது.
இன்றைய தினமான சனிக்கிழமை யாழ்.நகரில் வைத்து பத்திற்கும் குறைவான நபர்களை கொண்ட சிறு அணியொன்று வலம்புரி பத்திரிகையின் இன்றைய பதிப்பின் மாதிரியினை தீக்கிரையாக்கியுள்ளது.
யுத்தம் அதனால் ஏற்பட்ட மனக்கசப்புக்கள் மாறி மீண்டும் நட்புறவு பூக்கள் பூத்துவிடுமென்ற நம்பிக்கையினை மத அடையாளங்களை முன்னிறுத்தி மேற்கொள்ளும் இத்தகைய செயல்கள் சிதைவடையச்செய்துவிடுமென்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டுமெனவும் என யாழ்.ஊடக அமையம் கேட்டுக்கொள்கின்றது.
இதுவொரு சிறுகுழுவின் செயற்பாடென பலரும் வியாக்கியானம் செய்தாலும் இத்தகைய போக்குகள் மீண்டும் ஆராக்கியான சூழல் ஒன்று உருவாகிவருதை நிச்சயமாக பாதிக்கவே செய்யுமெனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமது மலின அரசியலுக்கு ஆர்ப்பணிப்புக்கள்,தியாகங்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டு , செயற்பட்டுவருகின்ற ஊடகங்களை கேலிக்குரியதாக்கும் எத்தகைய நடவடிக்கைகளினையும் யாழ்.ஊடக அமையம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்
தாம் வெளிப்படுத்தும் கருத்துக்களை விழுங்கி தனிநபர் அரசியல் நலன்கருதி வாந்தியெடுக்கும் சாதனங்களாக ஊடககங்களை இத்தகைய தீமூட்டல்களின் பின்னாலுள்ள நபர்கள் கருதுவார்களெனில் அது அவர்களது அறியாமையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஊடகமொன்று வெளியிடும் கருத்திற்கு தமது தரப்பு கருத்தை ஊடகப்பரப்பில் வெளிப்படுத்துவது மக்கள் பிரதிநிதிகளிற்கு கடினமானதொன்றல்ல.அது அவர்களிற்கு நாம் சொல்லிதான் தெரியவேண்டியதொன்றுமல்ல.
தமக்குள்ள சிறப்புரிமைகளின் கீழ் பதுங்கிக்கொண்டு சேறுபூசல்களை மேற்கொள்வதும் அதனை கேள்விக்குள்ளாக்குமிடத்து கும்பலாக கடித்துக்குதறுவதும் தமிழ் ஊடகங்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் புதியவிடயமல்ல.அது தொன்று தொட்டு தொடரும் பாரம்பரியமாகவேயிருந்து வருகின்றது.
வெறுமனே இன நல்லிணக்கம்,மத நல்லிண்ணக்கம் பற்றி கூடியிருந்து கதைப்பதனை விடுத்து இத்தகைய நல்லிணக்கத்தை பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் கவனத்திலெடுக்க மத தலைவர்கள்,சமூக பெரியோர் மற்றும் புத்திஜீவிகள் அனைவரையும் யாழ்.ஊடக அமையம் வேண்டிநிற்கின்றது.
வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஆயூப் அஸ்மீனின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது அங்கு கருத்து தெரிவித்த அஸ்மீன் , ” மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மாறாக இருந்தாலும் , விடுதலைப்புலிகள் போல் செயற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் சில தீர்மானங்களை அப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்து இருந்தார்கள். அவை மக்கள் ஆட்சிக்கு புறம்பாக இருந்தாலும் , அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைபடுகின்றது.” என தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில் இன்றைய தினம் சனிக்கிழமை வலம்புரி பத்திரிகை “முஸ்லீம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது. முறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார் அஸ்மீன் ” என தலைப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தது.
குறித்த செய்தியினால் பெருமளவான முஸ்லீம் மக்கள் மத்தியில் மாகாண சபை உறுப்பினர் அஸ்மீனுக்கு எதிரான தோற்றம் பெற ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ்.நகரில் உள்ள ஜீம்மா பள்ளி வாசலுக்கு முன்பாக கூடிய அச்மீனின் ஆதரவாளர்கள் சிலர் வலம்புரி பத்திரிக்கைக்கு எதிராக கோசங்களை எழுப்பி இன்றைய பத்திரிக்கையை தீயிட்டு கொளுத்தினார்கள்.
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் நோக்கிய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து இன்று ஆரம்பமானது.
பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தல முன்றலிருந்து இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமான மேற்படி ஈருளிப்பயணம் ஜரோப்பிய நாடுகளினூடாக பயணித்து இறுதியாக எதிர்வரும் 17 ஆம் திகதி ஜெனீவாவில் முருகதாசன் திடலை சென்றடையவுள்ளது.
இந்நிலையில் இன்று பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னாள் ஈருளிப்பயணத்துக்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றது. குறித்த பயணத்தில் பங்கேற்கும் செயற்பாட்டாளர்களும் அவர்களுக்கு உற்சாகமளிக்க ஒன்றுகூடிய மக்களும் கைகளில் ஈகைச்சுடரினை ஏந்தி மாவீர்ரகளையும் போராட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலித்தனர்.
இதனையடுத்து பயணத்தில் பங்கேற்கும் செயற்பாட்டாளர்கள் தயாரானதும் மக்கடளின் உற்சாக கரகோசத்துடன் ஐ.நா. நோக்கிய பயணம் ஆரம்பமானது.
இம்மாதம் ஐ.நா. கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்துள்ள இந் நீதிகோரிய நாடுகள் கடந்த பயணத்தில் சுமார் 10 க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் ஜெனிவா நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் “புனிதம் காப்போம்” என மும்மொழிகளில் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்த பதாகைகளை இனம் தெரியாத நபர்கள் அறுத்து சென்றுள்ளனர்.
நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கால பகுதியில் , நினைவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிகள் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால் அப்பகுதியில் புனித தன்மைகள் கெடாதவாறு நடந்துக்கொள்ளும்படி நினைவாலயத்தில் மும்மொழிகளிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனின் பங்களிப்பில் பதாகைகள் நேற்று புதன்கிழமை இரவு கட்டப்பட்டு இருந்தன.
அவற்றினை இன்று வியாழக்கிழமை (பதாகை கட்டி ஒரு சில மணிநேரத்தில்) அதிகாலை 1.32 மணிக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புடன் வந்த இரு சிவில் உடை தரித்த நபர்கள் கட்டப்பட்டு இருந்த பதாகைகளை அறுத்துக்கொண்டு தமது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவமானது நல்லூர் ஆலய சூழலில் பூட்டப்பட்டு உள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளன.
அதேவேளை கடந்த 14ஆம் திகதி மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை “வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா? “ , “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா? “ என பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியிருந்தனர்.
அதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியவுடன், தாம் அந்த பணியில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்தனர். அதனால் , வேலி அடைக்கும் மிகுதி பணிகளை வெளியில் இருந்து தற்காலிக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி பூரணப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.