SHARE

தமிழின அழிப்புக்கு நீதி கோரிய ஐ.நா.வை நோக்கி ஈருருளிப்பயணம் 82 மைல்களைக் கடந்து 2 ஆவது நாளான இன்று Harwich international port துறைமுகத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று (2) இரவே கடல் வழியாக நெதர்லாந்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும் குழுவினர் நாளை நெதர்லாந்தை அடைந்து அங்கிருந்து ஐ.நா.வை நோக்கி தமது பயணத்தை தொடரவுள்ளனர்.

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதியை கோரியும் இலங்கை அரசு பொறுப்புகூறலிலிருந்து விலகிச்செல்கின்றமை மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றமை உள்ளிட்ட விடயங்களிற்கு நீதி கோரியும் ஐ.நா.வை நோக்கிய மாபெரும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்று பிரித்தானியாவிலிருந்து ஆரம்பமானது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த நாடுகளைக்கடந்த ஐ.நா. நோக்கிய இம் மாபெரும் ஈருருளிப்பயணம் முதல் நாளான நேற்று பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தல முன்றலிலிருந்து ஆரம்பமாகி 38 மைல்கள் கடந்து Chelmsford எனும் இடத்தை சென்றடைந்தது.

இந்நிலையில் 2 ஆவது நாளான இன்று குறித்த இடத்திலிருந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்த செயற்பாட்டாளர்கள் 44 மைல்கள் பயணித்து மாலை Harwich international port துறைமுகத்தை சென்றடைந்தனர்.

இதனையடுத்து இன்று இரவே கடல் வழியாக படகின் மூலம் பயணத்தை தொடரவுள்ள குழுவினர் நாளை நெதர்லாந்து சென்றடைந்து அங்கு தயார் நிலையிலுள்ள பயணக்குழுவினருடன் இணைந்து ஐ.நா. நோக்கிய பயணத்தை தொடரவுள்ளனர்.

குறித்த பயணம் நெதர்லாந்து பெல்ஜியம் லக்சம்பெர்க் செருமணி பிரான்ஸ் ஆகிய பலணப்பாதையூடாக சென்று இறுதியாக சுவிஸை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email