SHARE

இலங்கையுடனானா ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற கோரிக்கையை ஏற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் றொசினா அலீன்-கான் நாடாளுமன்ற விவாத முன்பிரேரணைக்கு (Early Day Motion) ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ரூட்டிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவரை சந்தித்து செயற்பாட்டாளர்களான யோகராஜா இக்னேஸ்வரன் கிருஸ்ணமூர்த்தி உமாராஜ் வாசீகன் தங்கவேல் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அசாந்தன் தியாகராஜா ஆகியோர் குறித்த முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்கக்கோரிய போதே மேற்படி அவர் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா ஆயுதவர்த்தக ஒப்பந்தத்தில் மனித உரிமைகளை மீறும் நாடுகளுக்கு ஆயுத விற்பனைகளை செய்வதில்லையென கைச்சாத்திட்ட பிரித்தானியாஇ தமிழினப்படுகொலை செய்த பேரினவாத இலங்கை அரசுக்கு தொடர்ச்சியாக ஆயுதவிற்பனை செய்துவருகின்றது.

அந்தவகையில் இதனை தடுத்துநிறுத்தும் முயற்சியில் தமிழ் தகவல் நடுவத்துடன் இணைந்து பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் சுமார் 6 மாத காலங்களைக்கடந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகி;றனர்.

இதன் பலனாக குறித்த விவகாரம் பாராளுமன்ற விவாதத்திற்குட்படுத்தும் முன்பிரேணைக்கான (EDM) வாக்குகோரும் தளம் ஒன்று பாராளுமன்ற இணையத்தளத்தில் இணைக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு ஆயத விற்பனைக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் பிரித்தானியாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையிலேயே மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் றொசினா அலீன்-கானை சந்தித்த குழுவினர் பிரித்தானியாவிடமிருந்து ஆயுதத்திரனை கொள்வனவு செய்யும் இலங்கை அரசு அதனை கொண்டு தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை தொடர்ந்தும் செய்து வருகிறது என எடுத்து விளக்கினர்.

இதனையடுத்து குழுவினர்களின் கோரிக்கைகளை நன்கு கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

முன்பிரேரணைக்கான கையொப்ப தளத்தில் (EDM) இதுவரையில் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Print Friendly, PDF & Email