SHARE

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் நோக்கிய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து இன்று ஆரம்பமானது.

பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தல முன்றலிருந்து இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமான மேற்படி ஈருளிப்பயணம் ஜரோப்பிய நாடுகளினூடாக பயணித்து இறுதியாக எதிர்வரும் 17 ஆம் திகதி ஜெனீவாவில் முருகதாசன் திடலை சென்றடையவுள்ளது.

இந்நிலையில் இன்று பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னாள் ஈருளிப்பயணத்துக்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றது. குறித்த பயணத்தில் பங்கேற்கும் செயற்பாட்டாளர்களும் அவர்களுக்கு உற்சாகமளிக்க ஒன்றுகூடிய மக்களும் கைகளில் ஈகைச்சுடரினை ஏந்தி மாவீர்ரகளையும் போராட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலித்தனர்.

இதனையடுத்து பயணத்தில் பங்கேற்கும் செயற்பாட்டாளர்கள் தயாரானதும் மக்கடளின் உற்சாக கரகோசத்துடன் ஐ.நா. நோக்கிய பயணம் ஆரம்பமானது.

இம்மாதம் ஐ.நா. கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்துள்ள இந் நீதிகோரிய நாடுகள் கடந்த பயணத்தில் சுமார் 10 க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் ஜெனிவா நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email