வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ தேசியத்தவைர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இல்லத்தில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது சாந்தனின் புகழுடலுக்கு சிவப்பு மஞ்சள் நிற கொடிகள் போர்க்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக உடுப்பிட்டி – இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.
இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம் ஊடாக தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் ஊடாக வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை ஊடாக பயணித்தது.
பொலிகண்டி ஊடாக பயணித்து எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் வெள்ளங்குளம் இந்து மயானத்தில் புகழுடல் விதைக்கப்படும். இறுதி அஞ்சலியில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
பல தசாப்த காலம நீடித்த உள்நாட்டு போர் முடிவடைந்த 15 வருடங்களானபோதிலும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விடயம் இன்னமும் கவனத்தில் எடுக்கப்படாதிருக்கிறது என மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் வொல்கெர் டேர்க் தெரிவித்துள்ளார்.
மேலும் காணமற்போன ஆட்களில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னமும் தமது அன்புக்குரியவர்களை தேடிக்கொண்டிருப்பதுடன் அத்தேடலின் போது அவர்கள் பயமுறுத்தல், கைதுகள் மற்றும் வன்முறை என்பவற்றை எதிர்கொண்டு வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது ஆமர்வில் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் காணித் தகராறுகள் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதுடன், அது மக்களின் வாழ்வாதாரங்களின் மீது தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. ஓரளவுக்கு அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதியை வழங்கிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பன இப்பொழுது செயற்படாதிருந்து வருகின்றன.
உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றுக்கான ஆணைகுழு ஒன்றுக்கான வரைவுச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்து வைத்திருக்கும் அதே வேளையில், நம்பகமான விதத்தில் உண்மையைக் கண்டறியும் ஒரு செயன்முறை இடம்பெறக் கூடிய ஒரு சூழல் நாட்டில் காணப்படவில்லை. சிவில் சமூகப் பிரதிநிதிகள், இதழியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தொடர்பாகப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் கைதுகள் என்பவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக எனது அலுவலகத்திற்கு தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் கிடைத்து வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நினைவேந்தல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் சம்பந்தப்பட்டிருப்பவர்களும் இதே விதத்தில் இந்த பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்.
இலங்கை பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் ஆகிய தரப்பினரால் பாலியல் வன்முறையையும் உள்ளடக்கிய விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட் கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்து வைப்பு மற்றும் சித்திரவதை என்பன தொடர்பான தகவல்கள் எனது அலுவலகத்துக்கு கிடைத்து வருவது குறித்து நான் ஆழ்;ந்த கவலை அடைந்துள்ளேன்.
இச்சம்பவங்கள் ஒரு சில 2023 ஆம் ஆண்டில் பிரதானமாக நாட்டின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. கடந்த வாரம் ஒரு புதிய பொலிஸ் மா அதிபரின் நியமனம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் அவர் ஆளொருவரை சித்திரவதை செய்தாரென உயர் நீதிமன்றம் கண்டறிந்த நிலைக்கு மத்தியிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் அனைத்துமடங்கிய பாதுகாப்புத் துறை சீர்த்திருத்தமொன்றுக்கான தேவையையெடுத்துக் காட்டுகின்றன என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரித்தானியாவின் ஆளும் கட்சியே மீண்டும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டி அனைவரும் கடுமையாக உழைப்போம் என்ற தொனிப்பொருளுடன் பிரித்தானியாவின் Watford தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Dean Russell இன் தேர்தல் பிரச்சாரப்பணியில் பெருந்திரளான தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர்.
சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொண்டு நீதி வழங்கவேண்டுமென்றும் யுத்தக்குற்றவாளிகளில் ஒருவரான இராணுவத்தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா மிது பிரித்தானிய தடை விதிக்கவும் அரசை வலியுறுத்த வேண்டுமென்ற நிபந்தனையின் அடைப்படையிலேயே மேற்படி தமிழ் இளையோர் ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியாவின் அனைத்துக்கட்சிகளும் முன்கூட்டியே தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன.
இந்நிலையிலேயே, பிரித்தானியாவின் தற்போதைய ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சியின் (Conservative) பாராளுமன்ற உறுப்பினரும் Watford தொகுதியை பிரதிநித்துவப்படுத்துபவருமான Dean RussellMP இன் தேர்தல் பிரச்சாரப்பணி நேற்ற ஞாயிற்றுக்கிழமை (03.023.2024) Watford இல் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக அவரின் தேர்தல் பரப்புரையில் தமிழ் இளையோரும் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆளும் கட்சியான பழமைவாதக்கட்சி பிரித்தானியாவாழ் தமிழர்களுக்கு பெரும் பக்கபலமாக தொடர்ந்தும செயலாற்றி வருகின்றது. அது மட்டுமல்லாது தமிழர்களின் கலாச்சார விழுமியங்களிற்கும் முன்னுரிமையளிக்கிறது.
அந்தவகையில், சிறிலங்காவில் நடைபெற்றது தமிழனப்படுகொலை என்று பிரித்தானியா அறிவிக்கவும் பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு தடை விதிக்கவும் தமது அரசாங்கத்தை எம்.பி.யும் அவர் சார்ந்துள்ள கட்சியும் வலியுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அவருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
மேலும் சிறிலங்காவில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தப்பித்து வந்த எம்போன்ற பல தமிழர்களுக்காக அவர் முன்வந்து பல உதவிகளை செய்துள்ளார். அந்தவகையில் அவர் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் செயலாற்ற விரும்பி அவருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறோம் என பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் தெரிவித்தார்கள்.
உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என அழைக்கப்படும் சுதேந்திர ராசாவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது சடலம், இன்று முற்பகல் 11.35க்கு ஸ்ரீPலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்ச்சாலையொன்றுக்கு கொண்டுவரப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக அமையக்கூடாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில் நேற்றைய கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி உரையாற்றியிருந்தார்.
இலங்கை தற்போது கடுமையான தடைகளை எதிர்நோக்குகின்ற போதிலும் மக்களிற்கு பயனளிக்ககூடிய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் இதன்போது அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தீர்மானங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையையும் அரசாங்கம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இவ்வாறான பொறிமுறைகள் ஆக்கபூர்வமற்றவை என்பதுடன், அவை எதிர்மறையானவை என்றும் அலி சப்ரி குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக கேரிக்கப்படுகின்ற ஆதாரங்கள், மனித உரிமைப் பேரவை ஸ்தாபிக்கப்பட்ட கொள்கைகளிற்கு எதிரானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அணுகுமுறை தொடர்பாகவும் அமைச்சர் அலி சப்ரி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல் நலக்குறைவால் இந்தியாவால் காலமானார்.
இலங்கைக்கு இன்றைய தினம் புதன்கிழமை இரவு செல்லவிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. அதன் பின்னா் சில ஆவணங்கள் தேவையாக இருந்ததால் அவரது பணயம் தாமதமாகியது.
பின்னர் இன்று புதன் கிழமை (28) இரவு இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவா் மரணமானாா் என கூறப்படுகிறது
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், விடுதலையான பின்னரும் திருச்சி சிறப்பு முகாமில் குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தாா்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (26.02.2024) காலை 10.00 மணியளவில் கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பிரதானமாக, நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையினுடைய கூட்டம், தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கான பிரித்தானியாவினுடைய பங்கு என்பன தற்கால அரசியல் விடயங்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த கலந்துரையாடலில் பிரித்தானிய சார்பில் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் மற்றும் சமாதானம் மற்றும் மனித உரிமைக்கான செயலாளர் ஹென்றி டொநாட்டிலும் ரெலோ சார்பில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று (26) ஆரம்பமாகியுள்ளது
இன்று தொடக்கம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளனர்.
சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீளாய்வு வாய்மொழிமூலமாக எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
மேலும் அன்றைய தினம் கொலம்பியா குவாட்டமாலா ஹொண்டுராஸ் சைப்பிரஸ் நிக்காராகுவா உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நமது ஈழநாடு வாழ்வாதரா உதவித்திட்டத்தில் இம்முறை வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாவீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களிற்கு அத்தியவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான உதவித்தொகை என்பன வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு நமது ஈழநாடிடம் கேட்டுக்கொண்டதிற்கிணங்க, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டின் அப்துல் ஷமீட் முஹமட் ஷஹீம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் கிரான் பிரதேசத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 37 குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.
அரசி, மா, சீனி பருப்பு உள்ளிட்ட அத்தியவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் மற்றும் மருத்துவ போக்குவரத்துக்கான உதவித் தொகையும் வழங்கிவைக்கப்பட்டது.
கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சந்தேகநபர்களுக்கு நீதிமன்றங்களினால் பிடி யாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களும், சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களுமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்ப்படுத்தப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆணைக்குழுக்கள் பற்றி ITJP வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை
மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், புதிதாக அரசாங்கம் அமைக்க உத்தேசித்துள்ள இலங்கை உண்மை ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளது.
“அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாத எண்ணிக்கைளைத் தாண்டியுள்ளது. இருந்தும் பிறிதொரு ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது.” என அவ் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீதிகோரி காணாமல்போனவர்களின் உறவுகள் துணிச்சலுடன் வீதிக்கு இறங்கி இன்றுடன் 8 வருடங்களாகின்றன என தெரிவித்துள்ள ITJP, அதில் தங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை அறியாமலே 240 முதிய உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த புதிய ஆணைக்குழு உண்மையை கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட 36 ஆணைக்குழுக்களின் வரிசையில் இணைந்துகொண்டுள்ளது. உதாரணமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுஇ காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு என்பனவற்றைக் கூறலாம். எவ்வாறெனினும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் அமைத்துஇ நாம் அடையாளம் கண்ட 36 ஆணைக்குழுக்களின் பட்டிய கீழே தரப்பட்டுள்ளது. இவற்றில் மூன்றில் ஒருஇ அதாவது 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது.
பெரும்பாலான ஆவணங்கள் அரசாங்க இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும், வெறும் ஒருசில ஆணைக்குழுக்களின் அறிக்கைகளே அவ்விணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உண்மையில்இ கடந்த கால ஆணைக்குழுக்களால் வெளியிடப்பட்ட 22 அறிக்கைகளில், வெறும் 11 அறிக்கைகளின் பிரதிகள் மட்டுமே எம்மால் கண்டுபிடிக்கமுடிந்தது. எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு கடந்த காலத்தில் அமைத்த ஆணைக்குழுக்கள் பற்றி ITJP வெளியிட்டுள்ள விபரம் கீழே