SHARE
image_pdfPRINT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (26.02.2024) காலை 10.00 மணியளவில் கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இதன்போது பிரதானமாக, நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையினுடைய கூட்டம், தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கான பிரித்தானியாவினுடைய பங்கு என்பன தற்கால அரசியல் விடயங்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் பிரித்தானிய சார்பில் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் மற்றும் சமாதானம் மற்றும் மனித உரிமைக்கான செயலாளர் ஹென்றி டொநாட்டிலும் ரெலோ சார்பில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர்  குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.