SHARE

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரித்தானியாவின் ஆளும் கட்சியே மீண்டும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டி அனைவரும் கடுமையாக உழைப்போம் என்ற தொனிப்பொருளுடன் பிரித்தானியாவின் Watford தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Dean Russell இன் தேர்தல் பிரச்சாரப்பணியில் பெருந்திரளான தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர்.

சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொண்டு நீதி வழங்கவேண்டுமென்றும் யுத்தக்குற்றவாளிகளில் ஒருவரான இராணுவத்தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா மிது பிரித்தானிய தடை விதிக்கவும் அரசை வலியுறுத்த வேண்டுமென்ற நிபந்தனையின் அடைப்படையிலேயே மேற்படி தமிழ் இளையோர் ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியாவின் அனைத்துக்கட்சிகளும் முன்கூட்டியே தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையிலேயே, பிரித்தானியாவின் தற்போதைய ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சியின் (Conservative) பாராளுமன்ற உறுப்பினரும் Watford தொகுதியை பிரதிநித்துவப்படுத்துபவருமான Dean Russell MP இன் தேர்தல் பிரச்சாரப்பணி நேற்ற ஞாயிற்றுக்கிழமை (03.023.2024) Watford இல் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக அவரின் தேர்தல் பரப்புரையில் தமிழ் இளையோரும் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆளும் கட்சியான பழமைவாதக்கட்சி பிரித்தானியாவாழ் தமிழர்களுக்கு பெரும் பக்கபலமாக தொடர்ந்தும செயலாற்றி வருகின்றது. அது மட்டுமல்லாது தமிழர்களின் கலாச்சார விழுமியங்களிற்கும் முன்னுரிமையளிக்கிறது.

அந்தவகையில், சிறிலங்காவில் நடைபெற்றது தமிழனப்படுகொலை என்று பிரித்தானியா அறிவிக்கவும் பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு தடை விதிக்கவும் தமது அரசாங்கத்தை எம்.பி.யும் அவர் சார்ந்துள்ள கட்சியும் வலியுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அவருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் சிறிலங்காவில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தப்பித்து வந்த எம்போன்ற பல தமிழர்களுக்காக அவர் முன்வந்து பல உதவிகளை செய்துள்ளார். அந்தவகையில் அவர் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் செயலாற்ற விரும்பி அவருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறோம் என பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் தெரிவித்தார்கள்.

இதில் செயற்பாட்டாளர்களான Anushan Balasubramaniam, Dilan Shasigaran, Dilojan Thuraisamy, Ebenezer Ganesalingam, Izath Mohamed, Vijayakumar Murugaiyan, Muraleetharan Vijasundaram, Kokulan Sivasithambaram, Jeslin Uthayarani Joganatham, Nilany Santhiraparman, Mehaluxan Santhiravarman, Pirakalathan Sivagurunathan, Rupan Matththiyas, Sathusan Ravichanthitan, Saseekanna Nadarajah, Senavirathna Bandara, Thanushanth Mareyanesan, Vasanthakumar Balasaraswathi, Ramesh Vishva, Nethiraja Thurairaja, Pirashnth Rasaradnam, Uthayaraja Pavasuthan, A.Abishanth  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email