SHARE

ஆணைக்குழுக்கள் பற்றி ITJP வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், புதிதாக அரசாங்கம் அமைக்க உத்தேசித்துள்ள இலங்கை உண்மை ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளது.

“அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாத எண்ணிக்கைளைத் தாண்டியுள்ளது. இருந்தும் பிறிதொரு ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது.” என அவ் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதிகோரி காணாமல்போனவர்களின் உறவுகள் துணிச்சலுடன் வீதிக்கு இறங்கி இன்றுடன் 8 வருடங்களாகின்றன என தெரிவித்துள்ள ITJP, அதில் தங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை அறியாமலே 240 முதிய உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த புதிய ஆணைக்குழு உண்மையை கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட 36 ஆணைக்குழுக்களின் வரிசையில் இணைந்துகொண்டுள்ளது. உதாரணமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுஇ காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு என்பனவற்றைக் கூறலாம். எவ்வாறெனினும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் அமைத்துஇ நாம் அடையாளம் கண்ட 36 ஆணைக்குழுக்களின் பட்டிய கீழே தரப்பட்டுள்ளது. இவற்றில் மூன்றில்
ஒருஇ அதாவது 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது.

பெரும்பாலான ஆவணங்கள் அரசாங்க இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும், வெறும் ஒருசில ஆணைக்குழுக்களின் அறிக்கைகளே அவ்விணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உண்மையில்இ கடந்த கால ஆணைக்குழுக்களால் வெளியிடப்பட்ட 22 அறிக்கைகளில், வெறும் 11 அறிக்கைகளின் பிரதிகள் மட்டுமே எம்மால் கண்டுபிடிக்கமுடிந்தது. எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு கடந்த காலத்தில் அமைத்த ஆணைக்குழுக்கள் பற்றி ITJP வெளியிட்டுள்ள விபரம் கீழே

https://itjpsl.com/assets/20-Feb-2024-Joint-Press-Release-Publish-Past-Commissions-of-Inquiry_Tamil_Final.pdf

Print Friendly, PDF & Email