Home Blog Page 340

யாழ்.போதனா வைத்தியசாலை மோசடிகளை விசாரிக்க விசேட குழு

image_pdfPRINT

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மோசடிகளை விசாரிப்பதற்கு சுகாதார அமைச்சு விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

இவ்வாறு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தமது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சின் தலைமை கணக்காளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இவ்விசாரணைகள் நீதியான முறையில் மேற்கொள்ளப்படுவதோடு பணிப்பாளர் பவாணி பசுபதிராசாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் விரட்டியடிப்பு!

image_pdfPRINT

நடுக்கடலில் துப்பாக்கியைக் காட்டி ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்துள்ளது இலங்கை கடற்படை.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 800 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் மீன் வளம் மிகுந்த கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது சூறாவளி காற்று வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையும் பொருட்படுத்தாமல் இலங்கை கடற்படையினர் குட்டி கப்பல்களில் ரோந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி மிரட்டி விரட்டினர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க முடியாமல் அவசர அவசரமாக கரை திரும்பினர்.
கரை திரும்பிய மீனவர்கள் கூறும்போது, இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்கவிடாமல் தொடர்ந்து விரட்டியடித்து வருகிறார்கள். இதனை மத்திய-மாநில அரசுகளும் கண்டுகொள்ளாமல் உள்ளது என்றனர்.

வெளியேற்றப்பட்டவர்களை மீள்குடியேற்ற இன்னும் காலம் தேவை : கருணா

image_pdfPRINT

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னர் கூறப்பட்ட ஜூன் 30 ம் திகதி என்ற கால எல்லைக்குள் பூர்த்தியாக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மீள்குடியேற்ற துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்ற போதிலும் அவற்றை பூர்த்தி செய்ய மேலும் சிறிது காலம் தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாத காரணத்தினாலும், இராணுவ முகாம்களுக்காக இடங்கள் எடுக்கப்படும் பட்சத்தில் அதற்குப் பதிலாக வேறு இடங்களை அடையாளம் கண்டு மக்களை அங்கு குடியேற்ற வேண்டியுள்ளதாலும் இந்த சிறிய தாமதம் ஏற்படுவதாக அமைச்சர் கூறினார்.

இருந்தபோதிலும், அதற்கு பல மாதகாலம் பிடிக்கும் என்று கூறப்படுவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில், இறுதிப் போர் நடந்த பகுதிகளில் அதிக அளவிலான கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாகக் கூறிய அமைச்சர் முரளிதரன், அங்கு விரைவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீளக் குடியேற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்கக் குடியுரிமையற்ற இளைஞர்கள் தொடர்ந்து தங்கலாம்: ஒபாமா

image_pdfPRINT

வாஷிங்டன், ஜூன் 16: முறையான அமெரிக்கக் குடியுரிமை பெறாமல் அமெரிக்காவிலேயே வாழ்ந்து, கல்வி பயின்ற இளைஞர்களும் யுவதிகளும் தாற்காலிக பணி உரிமம் பெற்று தொடர்ந்து தங்கலாம், அமெரிக்க முன்னேற்றத்துக்குப் பாடுபடலாம் என்று அதிபர் பராக் ஒபாமா ஆணையிட்டுவிட்டார்.  சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றவும், குடியுரிமை வழங்கலை முறைப்படுத்துவுமான சட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுக்கொண்டே வருவதால் நிச்சயமற்ற நிலையில் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருதி இந்த ஆணையைப் பிறப்பிப்பதாக ஒபாமா அறிவித்துள்ளார்.  வரவேற்பு: லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து முறையான அனுமதி இல்லாமல் குடியேறியவர்களுடன் வந்த குழந்தைகள் அல்லது அவர்கள் அமெரிக்காவில் தங்கத் தொடங்கிய பிறகு பிறந்த குழந்தைகள் ஆகியோருடைய எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஆணையைப் பிறப்பிப்பதாக ஒபாமா அறிவித்திருப்பதை லத்தீன் அமெரிக்க சமூகத் தலைவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.  குடியரசுக் கட்சி கண்டனம்: அதே சமயம் குடியரசுக் கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர். இதை அதிபர் வழங்கிய “”பொது மன்னிப்பு” என்றே அவர்கள் கண்டித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை அதிபர் பறித்துவிட்டார் என்றும் சாடியுள்ளனர்.  வாக்குவங்கி அரசியல்: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் ஆண்டு என்பதால் வாக்குகளைக் குறிவைத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.  நிருபர்களிடம் அறிவிப்பு: தன்னுடைய முடிவை வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் மூத்த நிருபர்களிடம் தெரிவித்தார் அதிபர் ஒபாமா. அப்போது சில நிருபர்கள் தொடர்ந்து அவரிடம் விளக்கம் பெற குறுக்கிட்டுக் கொண்டே இருந்தனர்.  ஒபாமா விளக்கம்: படித்த, திறமையுள்ள, அமெரிக்கா மீது பற்றும் பாசமும் கொண்ட, அமெரிக்க நலனில் அக்கறை காட்டி உழைக்கிற இளைஞர்களை “”குடியுரிமை இல்லை” என்ற ஒரே காரணத்துகாக வெளியேற்றாமல் தொடர்ந்து தங்க தாற்காலிகப் பணி அனுமதி வழங்கப்படும்.  அமெரிக்க தேசிய நலனுக்கும் பொது நலனுக்கும் ஊறுவிளைவிக்காத, ஊறு விளைவிக்க நினைக்காத நல்ல இளைஞர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும்.  அமெரிக்க அரசின் குடியேற்றக் கொள்கை நியாயமானது, திறமையானது நடுநிலையானது என்று அனைவரும் பாராட்டும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  பொது மன்னிப்பல்ல: இது பொது மன்னிப்பல்ல; இது நிரந்தரமும் அல்ல; இது சட்டவிரோதமாகக் குடியேறும் மக்களுக்குக் கேடயமும் அல்ல; இது அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவதற்கான குறுக்கு வழியும் அல்ல. இது தாற்காலிக நிவாரணம்.  நம்முடைய பள்ளிக்கூடங்களில் படித்து, நம்முடைய வீட்டுக்கு அக்கம் பக்கத்து திடல்களில் விளையாடி, நம்முடைய குழந்தைகளுக்கு நண்பர்களாக உறவாடிய இளைஞர்களின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கை.  கொடிக்கு விசுவாசம்: அவர்கள் நம்முடைய கொடிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். தங்களுடைய இதயங்களில் அமெரிக்கர்களாகவே வாழ்கின்றனர். அவர்களுடைய சிந்தையில் அமெரிக்க நலன்தான் இருக்கிறது. அவர்களிடம் இல்லாதது – அவர்கள் அமெரிக்கக் குடிமக்கள் என்ற – அதிகாரப்பூர்வமான காகிதம்தான்.  அவர்களை அவர்களுடைய பெற்றோர்தான் இந்த பூமிக்குக் கொண்டுவந்தனர். சில வேளைகளில் கைக் குழந்தையாகக்கூட வந்திருப்பார்கள்.  முறையான குடியுரிமை இல்லாமல் இந்த நாட்டுக்குள் வருகிறோம் என்று தெரியாமலேயே வந்திருப்பார்கள்.  உணர்வது எப்போது? இந்த நாட்டில் வேலைக்கோ, ஓட்டுநர் உரிமத்துக்கோ, கல்லூரியில் படிக்க உதவித்தொகைக்கோ விண்ணப்பிக்கும்போதுதான் அவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படவில்லை என்ற உண்மை அவர்களால் உணரப்பட்டிருக்கும்.  நீங்கள் அவர்களாக இருந்தால்…: அவர்களுடைய நிலையில் நீங்கள் இருப்பதாக சற்றே கற்பனை செய்து பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் முறையாகவே செய்திருக்கிறீர்கள்; நன்றாகப் படித்தீர்கள், கடுமையாக உழைத்தீர்கள், உங்கள் வகுப்பிலேயே முதல் மாணவனாகக் கூட படிப்பில் சிறந்து விளங்கினீர்கள். திடீரென்று உங்களை, “”இந்த நாட்டவர் அல்ல” என்று கூறி நாடு கடத்தினால் என்ன செய்வீர்கள்?  உங்களுக்கு இதுவரை பழக்கமே இல்லாத நாட்டில், பேசவே முடியாத மொழியில், வசிக்க வேண்டிய, பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?  தகுதியும் திறமையும் உள்ள இளைஞர்களை – அமெரிக்காவில் வளர்ந்து உருவானவர்களை – நாடு கடத்துவதில் அர்த்தமே இல்லை. அவர்களுடைய பெற்றோர் செய்த தவறுக்காகவோ, முறையான குடியேற்றச் சட்டத்தை உருவாக்காத அரசியல்வாதிகளின் தவறுக்காகவோ அவர்களைத் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?  தெற்கிலே காவல்: எனவேதான் நாங்கள் நாட்டின் தென் பகுதியில் இப்போது காவலை பலப்படுத்தியிருக்கிறோம்; எல்லை கடந்து யாரும் வராதபடிக்கு அதிக ராணுவ வீரர்களைப் பணியில் நியமித்திருக்கிறோம். நில எல்லையை மட்டும் அல்லாது கடல் எல்லையையும் கண்காணிக்கிறோம். இதுவரை நம்முடைய வரலாற்றிலேயே இல்லாத வகையில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்’ என்று விளக்கினார் பராக் ஒபாமா.

Boy attacked pupils with needle

image_pdfPRINT

 

A 14-year-old pupil was arrested after he attacked at least 20 pupils with a 8mm medical needle at a school.The incident, involving what is believed to be a diabetic insulin pen, happened at Toot Hill School in Bingham, Nottingham, on Wednesday.Parents were informed of the incident and advised to get their children tested for infections, although the risk is low, the school said.Nottinghamshire Police confirmed they had arrested a 14-year-old boy over an incident involving what is believed to be a diabetic pen at the school on Wednesday but described the injuries suffered by the pupils as “minor”.They refused to confirm reports the children had been taken to hospital.

A statement from the school on its website said: “The incident that occurred on June 13th has been dealt with by the school in a prompt and appropriate manner.”The investigation of the incident has not yet been completed, but we have established that a 14-year-old boy acquired a medical lancet (8mm in length) and used it to prick around 20 others.”The school’s first action was to contact the relevant parents and provide appropriate medical advice as ascertained from the Health Protection Agency.

“The agency emphasises the extremely low health risk associated with incidents of this nature.”The health authorities recognise that the school has followed all advice and procedures in caring and supporting our students and their families.”It is always important for a school to maintain a calm and supportive environment and to take a proportionate view of events in order to prevent unnecessary anxiety.”

ஜேவிபியின் இரு குழுக்களுக்கு இடையில் இடம் பெற்ற மோதல்!

image_pdfPRINT

ஹம்பாந்தோட்டை கட்டுவன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஜேவிபியின் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் என சந்தேகிப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (15) மாலை ஜேவிபியின் கட்டுவன கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் பலியானதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்ததார்.

ஜேவிபியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி-56 ரக துப்பாக்கியால் சூடு நடத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் ஆட்கொலையாளர்கள் சிலர் தமது கூட்டத்தில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அத தெரணவிடம் தெரிவித்தார்.

The work of the Govt.; JVP

image_pdfPRINT

General  Secretary of the JVP Tilvin Silva said today that the government was behind yesterdays shooting in Hambanthota. “It is clearly the work of the government and we have proof for it” he said.

Silva went onto point out that the government was trying to blame the incident on the parties internal rift when in reality it is not so. “ They are trying to blame the incident on the FSP , how can a party which cant find 2 or 3 people to walk on the pavement carry put a shooting” he said.

The secretary said that his party would take this issue internationally. “ We want to do our politics democratically and that right must be protected, we will take this shooting internationally and try and bring those responsible to the book” he said.

UK respects right to protest

image_pdfPRINT

Responding to the allegations of the Sri Lankan government who  charged that the law enforcement authority in the UK had failed in its duty, spokesman for the British High Commission Sarah Mann said that Britain respects the legitimate right of its citizens to protest.  “ We respect the legitimate right of UK citizens to protest, but this has to be balanced with the right to free speech” she said.

Speaking on the cancellation of the proposed speech by President Rajapaksha at the Commonwealth Business Council, the spokesman said that the cancellation was not a government decision “ This was not a government decision: CBC is independent.  CBC took its decision after careful consideration of the potential impact that large-scale policing of the protests would have had on the City and we respect that decision. ” she said. (Hafeel Farisz)

Shooting at JVP meeting; two killed

image_pdfPRINT

At least two persons including a female were killed when a group of unidentified men on motorcycles opened fire at a JVP meeting at Katuwana in Hambantota this evening, police spokesman SP Ajith Rohana said.

The JVP blamed the incident on a government sponsored armed group led by a person notorious for unleashing violence against political opponents.

Party General Secretary Tilvin Silva told the Daily Mirror that the two victims were attending the pocket meeting organized by the party in the area. He said western provincial council member Dr. Nalinda Jayatissa was addressing the meeting at the time of the incident. “Around 7 in the evening, a group of about eight to ten arrived in several motor bikes and opened fire at the crowd in a frenzied mood. Two participants died and scores were injured,” he said.

Hambantota has been a hotbed of political violence in recent times. In the run up to the 2010 presidential election, an elderly woman was killed when armed men shot at a crowded bus carrying political supporters to a rally of common opposition candidate Sarath Fonseka. On Christmas eve last year, a British national was killed in a

melee at a tourist hotel in Tangalle, Hambantota. The main accused in the case was the chairman of the UPFA controlled Tangalle Pradeshiya Sabha.

Police said the gunmen had arrived in three motor bikes to commit this crime. Around 100 supporters had attended this meeting organized by the JVP. According to initial investigations, T-56 guns had been used in this case. A special police team had been deployed to apprehend the perpetrators. JVP propaganda secretary Vijitha Herath said the meeting was conducted at the residence of a party supporter called Ranjith.

“The woman who died in the incident was his wife. A politically sponsored person is responsible for this killing spree. This person enjoys state security,” he said.

மாவீரர்களின் புகைப்படங்களை சுவரில் கொழுவ தடையில்லை – கிளிநொச்சி மாவட்ட தளபதி

image_pdfPRINT

இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்த்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் கொழுவுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் தெரிவித்தார்.

இன்று முறிகண்டியில் நிலப்பிரச்சினை தொடர்பான சந்திப்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இராணுவத்தினர் சில மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தனர் என்றும் அந்த வீடுகளுக்கு குடியேறிய மக்கள் முதன் முதலில் ஆணிகளை அடித்து சில படங்களை கொழுவினார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் குறிப்பிட்டார்.

அந்தப் படங்கள் யாருடையவை தெரியுமா என்று கேட்ட இராணுவத்தளபதி அவைகள் அரச படைகளுக்கு எதிராக யுத்தம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரிச்சீருடை அணிந்த மாவீரர்களின் படங்கள் என்றார்.

அவர்கள் எங்களுக்கு எதிராக யுத்தம் செய்த பொழுதும் அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள் என்பதை எப்படி மறுப்பது என்று குறிப்பிட்ட பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் அதனை எந்த இராணுவ உறுப்பினரும் தடுக்க கூடாது என்று தான் உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

 

மகிந்த ராஜபக்சவின் ஊழல் அரசுக்கு எதிராக போராடுவேன் : பொன்சேகா

image_pdfPRINT

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊழல் அரசுக்கு எதிராக தான் தொடர்ந்து போராட போவதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக தெரிவித்துள்ளார்.

நான் தனிப்பட்ட லாபங்களுக்காக ஆளும் கட்சியுடன் இணைய மாட்டேன். ஊழல் அரசுக்கு எதிராக போராடுவதற்கு தொடர்ந்து எதிர்தரப்பாகவே செயற்பட போகிறேன் என்றார் அவர்.

அண்மையில் சிறைலியிருந்து சரத் பொன்சேக விடுதலையான பின்னர் கலந்து கொண்ட முதலாவது பொது நிகழ்வு மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊழல் அரசுக்கு எதிரை மாற்ற வேண்டுமென நினைப்பவர்களுடன் எனது கட்சி இணைந்து கொள்ளும். 2016 தேர்தலில் இந்த அரசை வீழ்த்துவதற்கு நான் எனது சக எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் பாடுபடுவேன். மக்களாலேயே புதிய தலைமைத்துவம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பொதுமன்னிப்பின் பெயரில் கடந்த மே 21ம் திகதி சரத் பொன்சேக சிறையிலிருந்து விடுவிக்கபட்டார். முன்னதாக அவர் 30 வருடம் சிறை வாசம் அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் அமெரிக்காவும் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றன

image_pdfPRINT

இலங்கை அரச தலைவர்களுக்கு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உரிய கௌரவம் வழங்க தவறுவதாக, ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேற்குலக நாடுகளில் சுதந்திரமாக வி.புலிகள் செயற்படுவதானால், அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜாபக்ச லண்டன் சென்ற போது அங்கு வி.புலிகளின் ஆதரவாளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தியுள்ளனர். இலங்கையின் ஜனாதிபதியின் கௌரவத்தை காப்பாற்றுவதற்கு லண்டனாலோ, மேற்குலக நாடுகளாலினாலோ முடியவில்லை. ஆனால் இவை ஏனைய நாடுகளின் மனிதாபிமானத்தை பற்றி பேசுகின்றன.

இதே போன்று இந்தியாவிற்கு விஜயம் செய்த அமைச்சர் ரெஜினால்ட் குரேவுக்கு எதிராக தமிழ்நாட்டில் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இது இந்தியாவின் பொறுப்பற்ற தனத்தையும், முட்டாள் தனத்தையுமே வெளிப்படுத்துகிறது.

இலங்கை பற்றி மிக மோசமான முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ள அமெரிக்க தூதுவர் மிசேல் கிசன் தற்போது இலங்கை வருவதற்கும் திட்டமிட்டுள்ளார். அமெரிக்கா, தனது காலனித்துவ நாடாகவோ அல்லது அடிமை நாடாகவோ இலங்கையை பார்த்தால் அவர்களின் முட்டாள் தனமாகும். சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரங்களில் அத்து மீறி தலையிடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையின் வடமாகாண சபை தேர்தலை நடத்துமாறு கட்டளையிடுவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை இல்லை. சர்வதேச நாடுகளில் தஞ்சமடைந்துள்ள வி.புலிகள் இவற்றின் பின்னணியில் செயற்படுவதே இதற்கெல்லாம் காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜூன் 29ம் திகதி, அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இலங்கை செல்லவுள்ளார். வடக்கு கிழக்கு பிரதேசங்களின் காணிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றூம் திருகோணமலையில் உள்ள இந்திய எண்ணெய் களஞ்சிய சாலைகளை இலங்கை மீள பெறவுள்ளமை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.

error: Content is protected !!