SHARE

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊழல் அரசுக்கு எதிராக தான் தொடர்ந்து போராட போவதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக தெரிவித்துள்ளார்.

நான் தனிப்பட்ட லாபங்களுக்காக ஆளும் கட்சியுடன் இணைய மாட்டேன். ஊழல் அரசுக்கு எதிராக போராடுவதற்கு தொடர்ந்து எதிர்தரப்பாகவே செயற்பட போகிறேன் என்றார் அவர்.

அண்மையில் சிறைலியிருந்து சரத் பொன்சேக விடுதலையான பின்னர் கலந்து கொண்ட முதலாவது பொது நிகழ்வு மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊழல் அரசுக்கு எதிரை மாற்ற வேண்டுமென நினைப்பவர்களுடன் எனது கட்சி இணைந்து கொள்ளும். 2016 தேர்தலில் இந்த அரசை வீழ்த்துவதற்கு நான் எனது சக எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் பாடுபடுவேன். மக்களாலேயே புதிய தலைமைத்துவம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பொதுமன்னிப்பின் பெயரில் கடந்த மே 21ம் திகதி சரத் பொன்சேக சிறையிலிருந்து விடுவிக்கபட்டார். முன்னதாக அவர் 30 வருடம் சிறை வாசம் அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email