SHARE

ஹம்பாந்தோட்டை கட்டுவன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஜேவிபியின் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் என சந்தேகிப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (15) மாலை ஜேவிபியின் கட்டுவன கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் பலியானதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்ததார்.

ஜேவிபியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி-56 ரக துப்பாக்கியால் சூடு நடத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் ஆட்கொலையாளர்கள் சிலர் தமது கூட்டத்தில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அத தெரணவிடம் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email