Home Blog Page 34

குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள்!

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு இன்று (17) புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது குருந்தூர்குளம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

கடந்த மாத இறுதியில் குருந்தி ராஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன முன்மொழிந்திருந்தார்.

அத்துடன் பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் மற்றும் பொது வசதிகளுக்காகவும் அமைப்பதற்கும் இந்த காணியை ஒதுக்குமாறு, இளைஞர் பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு முன்மொழிந்திருந்தார்.

இந்நிலையிலேயே  இன்று அதிகாரிகள் குருந்தூர் மலைக்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

நாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவேந்தல் கரப்பந்தாட்டம்

image_pdfPRINT

சிறிலங்கா இராணுவத்தின் புக்காரா விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட யாழ். நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் நினைவாக பிரித்தானியாவில் நேற்றையதினம் கரப்பந்தாட்டப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டது.

1995 செப்டெம்பர் 22 அன்று சிறிலங்கா இராணுவத்தின் புக்காரா விமானம் யாழ். நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது மூர்க்கத்தனமான குண்டு வீச்சை மேற்கொண்டு 21 மாணவர்களை படுகொலை செய்தது.

இந்நிலையிலேயே, குறித்த இனப்படுகொலையை நினைவுகூறும் வகையிலும் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மேற்படி உள்ளக அரங்கு கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கொல்லப்பட்ட மாணவர்களின் திருவுருவப்படங்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்- அனுசன்

எங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை- மயிலத்தமடு விவசாயிகள்

image_pdfPRINT

”தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என மயிலத்தமடு,மாதவனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 32வது நாளாக இன்றைய தினமும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தமது சுழற்சிமுறையிலான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”ஜனாதிபதி தமது மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து முன்வைத்துள்ள தீர்மானத்தினை வரவேற்கின்றோம்.

அவருக்கு கால்நடை பண்ணையாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.எனினும் ஜனாதிபதி முன்வைத்துள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறைப்படுத்தப்படும்போது நாங்கள் அங்கு செல்லமுடியும். நேற்று ஜனாதிபதி தீர்வினை முன்வைத்துள்ள அதேநேரம் இன்றைய தினம் மேய்ச்சல் தரைப்பகுதியில் உழவு இயந்திரங்கள் கொண்டு மேய்ச்சல் தரை காணிகள் விதைப்பு நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவர்களை அங்கிருந்து அகற்றாமல் நாங்கள் செல்வோமானால் அது எங்களது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைமையினையே ஏற்படுத்தும்.

எங்களுக்கு இன்று இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை ஜனாதிபதி மட்டுமே அவரால் மட்டுமே எமது பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்கமுடியும். நாங்கள் இந்த நாட்டில் வாழும் இந்த நாட்டின் பூர்வீக மக்கள் எங்களுக்கான ஒரு தொழிலைக்கூட எங்களது நிலத்தில் செய்யமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எமது உறவுகள்  மேய்ச்சல் தரைக்கு செல்லும்போது அவர் வீட்டுக்கும் வரும் வரையில் நாங்கள் எங்கள் உயிரைக்  கையில் பிடித்துக்கொண்டிருக்கின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

வட்டக்கச்சியில் நமது ஈழநாட்டின் வாழ்வாதார உதவித்திட்டம்

image_pdfPRINT

நமது ஈழநாடு வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் இம்முறை வட்டக்கச்சி மாயவனூரைச் சேர்ந்த வாழ்வாதார உதவி தேவைப்படுபவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (15) வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் Mohamed Fathima  அவர்களின் ரூபாய் 25 ஆயிரம் நிதிப்பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இலண்டனிலிருந்து நேரடியாக சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த Mohamed Fathima அவர்களினால் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திரனாளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

நமது ஈழநாட்டின் வாழ்வாதார உதவித்திட்டத்தில்
இணைந்து கொண்ட செயற்பாட்டாளர் டிலான்

image_pdfPRINT

நமது ஈழநாடு வாழ்வாதர உதவித்திட்டத்தின் கீழ் இம்முறை பன்னங்கண்டி, முழங்காவில் ஆகிய இடங்களை சேர்ந்த வாழ்வதார உதவி தேவைப்படுவோருக்கு தொழில் முதலீடு துவிச்சக்கரவண்டி மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன இன்று (14) வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் Shashigaran Dilan அவர்களின் ரூபாய் இரண்டு இலட்சம் நிதிப்பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் பன்னங்கண்டியை சேர்ந்த ஒருவருக்கு அவரது வாழ்வாதார உதவியாக சிறுகடை நடாத்துவதற்கு தேவையான மூபாய் 50 இலட்சம் பணம் வழங்கப்பட்டது. அத்தோடு முழங்காவிலைத்சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவருக்கு அவரது கல்வி நடவடிக்கைக்காக 38 500 மூபாய் நிதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்பட்டது.

இதேவேளை தெரிவுசெய்யப்பட்ட 10 மாற்றுத்திரனாளி மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு சங்கத் தலைவர் சரவணன், உப தலைவர் ஜெயக்குமார், செயலாளர் யோகராசா ஆகியோர் தலைமையில் உலர் உணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

மீனவர்களின் பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாம்

image_pdfPRINT

மீனவர்களின் பிரச்சனைகளை அரசியலாக்காது, பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை இந்தியா நாட்டு கடற்தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எமக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் உத்தேச சட்டங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவை கவலை

image_pdfPRINT

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு உத்தேச சட்ட வரைவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணைய பாதுகாப்புச் சட்டம் ஆகிய உத்தேச சட்ட வரைவுகள் குறித்து கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிதமிஞ்சிய அதிகாரத்தை வழங்கும் வகையிலானது எனவும், மனித உரிமைகளை வரையறுக்கும் வகையிலானது எனவும் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ரவீனா ஷம்தாசானி தெரிவித்துள்ளார்.

புலிகளின் ஆயுதங்கள் கிடைக்கவில்லை; மூடப்படும் குழிகள்!

image_pdfPRINT

வவுனியா, புதியகோவில்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கம் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் குறித்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக தனியார் காணி ஒன்றில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன.

வவுனியா நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணை ஆய்வக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பூவரசங்குளம் பொலிஸார் இணைந்து குறித்த அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இரண்டு பேகோஹோ இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆயுதங்கள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனவும்  இதனால் தோண்டப்பட்ட இடங்களை மீண்டும்  மூடும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முன்னாள் நீதவானுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை : சி.ஐ.டி. வழங்கிய முழுமையான அறிக்கை

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு சென்றமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு செப்டம்பர் 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவணராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அவை குறித்து விசாரணை நடத்திய குற்றபுலனிவு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜா 2021 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நீதவானாக நியமிக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் முகவர் ஒருவர் ஊடாக விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டது என்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அமெரிக்காவில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த தொலைபேசி எண் செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ம் திகதி இலங்கை திரும்புவதற்கு டிக்கெட் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதவான் விமான டிக்கெட்டை பயன்படுத்தவில்லை என்பது விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதியின் வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவரது ஆவணத்தில் நைரோபியே அவரது இலக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் சேவையிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய இரண்டு அதிகாரிகளும், உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புக்காக 12 மணித்தியாலங்கள் உட்பட தினமும் நான்கு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேலும் நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள் பிரேமன், பாதுகாப்பு போதுமானதாக இல்லை என நீதிபதி ஒருபோதும் கூறவில்லை என்றும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி தம்மிடம் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

நீதிபதி வெளிநாடு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனது காரை விற்றுவிட்டு செப்டம்பர் 23ஆம் திகதி வெளிநாடு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றில் கடமையாற்றி வரும், தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என நீதிமன்றப் பதிவாளர் கூறியுள்ளார்.

இதேவேளை தனது கணவர் நீதிபதி என்ற முறையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு இல்லாதது குறித்து குறிப்பிட்ட அவர் சமீபகாலமாக அவ்வாறான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தன்னிடம் கூறவில்லை எனவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் தனது கணவர் வெளியேறியதாகவும், அவர் வெளிநாடு செல்வது தனக்குத் தெரியாது என்றும்நீதிபதியின் மனைவி கூறியுள்ளார்.

கப்பல் போக்குவரத்து திகதியில் மாற்றம்

image_pdfPRINT

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 10 ஆம் திகதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து நாளை 12 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் குறித்த திகதி மீண்டும் மாற்றப்பட்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி காலை 7 மணிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் கூடுதலாக நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் திகதி மாற்றம் எனக் கூறப்படுகிறது. மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய பரந்தனில் நமது ஈழநாட்டின் வாழ்வாதார உதவி

image_pdfPRINT

நமது ஈழநாடு வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் இம்முறை பெரிய பரந்தன் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்க.ப்பட்டன.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத்குலசேகரத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் மேற்படி உதவித்திட்டத்தில் இம்முறை Mohamed Jameel Mohamed Misba   அவர்கள் தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

அந்தவகையில் கடந்த 10 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை Mohamed Jameel Mohamed Misba   அவர்களே நேரில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் சவேந்திர சில்வாவை தடை செய்ய தொடரும் இராஜதந்திர சந்திப்புக்கள்

image_pdfPRINT

ஜாக் ப்ரெட்டன் எம்.பி உடனான சந்திப்பு

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் ஸ்டோக் ஆன் ட்ரெண்ட் (Stoke on Trent) பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜாக் ப்ரெட்டன் எம்.பி (Jack Brereton) அவர்களுடன் இராஜதந்திர சந்திப்பு ஒன்று வெள்ளிக்கிழமை (06/10/2023) மதியம் 16.40 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில்,

பழமைமைவாவாதக்கட்சிக்காகான தமிழர்கள் அமைமைப்பின் (British Tamil Conservatives – BTC) துணைத் தலைவரும், கவுண்சிலருமான திரு. ஜெய் கணேஸ் அவர்கள், மற்றும் இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமாக சர்வதேச மையத்தின் (ICPPG) சார்பில் திரு. றோய் ஐக்‌ஷான் கலந்துகொண்டார். அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான ஜனார்தநன் ராஜேஷ்வரம், மோகனதர்சன் நாகநாதன் மற்றும் ஶ்ரீரிபன் நாகநாதன் கலந்து கொண்டு, தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டையும் எடுத்துரைத்தார். ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு (FCDO) போதுமான ஆதாரங்களை சமர்பித்த போதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார்.

சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதைஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார். கருத்துக்களைஉள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் தனது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்துடன், ஈழத் தமிழர்களின் கோரிக்கையையும் ஆதங்கத்தையும், தனது பகுதியில் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தான் பிரித்தானிய அரசிற்கு எடுத்துரைப்பதாகவும், FCDO இதுவரை நடவடிக்கை எடுக்காமைக்கு காரணத்தை கேட்டு கடிதம் அனுப்புவதாகவும் வாக்களித்தார்.

அத்துடன் கீத் குலசேகரம் கேட்டுக்கொண்டபடி தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு (APPGT) மற்றும் மக்நெட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுக்களில் (APPG for Magnitsky Sanctions) இணையவும், FCDO விற்கு தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி தன்னாலான வகையில் அழுத்தம் கொடுப்பதாகவும் வாக்களித்தார்.

error: Content is protected !!