SHARE

நமது ஈழநாடு வாழ்வாதர உதவித்திட்டத்தின் கீழ் இம்முறை பன்னங்கண்டி, முழங்காவில் ஆகிய இடங்களை சேர்ந்த வாழ்வதார உதவி தேவைப்படுவோருக்கு தொழில் முதலீடு துவிச்சக்கரவண்டி மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன இன்று (14) வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் Shashigaran Dilan அவர்களின் ரூபாய் இரண்டு இலட்சம் நிதிப்பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் பன்னங்கண்டியை சேர்ந்த ஒருவருக்கு அவரது வாழ்வாதார உதவியாக சிறுகடை நடாத்துவதற்கு தேவையான மூபாய் 50 இலட்சம் பணம் வழங்கப்பட்டது. அத்தோடு முழங்காவிலைத்சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவருக்கு அவரது கல்வி நடவடிக்கைக்காக 38 500 மூபாய் நிதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்பட்டது.

இதேவேளை தெரிவுசெய்யப்பட்ட 10 மாற்றுத்திரனாளி மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு சங்கத் தலைவர் சரவணன், உப தலைவர் ஜெயக்குமார், செயலாளர் யோகராசா ஆகியோர் தலைமையில் உலர் உணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

Print Friendly, PDF & Email