கைத்தொலைபேசி வாங்க பணமில்லாததால் உயிரை மாய்த்த மாணவன்
நெடுந்தீவு கடலில் மீன்பிடிக்க சென்ற மூவரை காணவில்லை
செய்தியாளர் மீது வாள் வெட்டு
-யாழில் அதிகாலையில் சம்பவம்
ஆக்கிரமித்தவர்களுக்கு இன்று மதியம் வரை காலக்கெடு !
சீரற்ற கால நிலையால் 21 பேர் உயிரிழப்பு
இலங்கை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – அமெரிக்கா
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பிரகாசமான எதிர்காலம் என்ற இலங்கையின் கனவை நனவாக்குவதற்காக இலங்கையுடன் கைகோர்த்து பயணிப்பதற்கு அமெரிக்கா விரும்புகின்றது. இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு இலங்கையே தலைமை தாங்கவேண்டும்,காயங்களை ஆற்றக்கூடிய பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்ககூடிய நல்லிணக்க முயற்சியை இலங்கையே முன்னெடுக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என அமெரிக்கா மாத்திரமல்ல இலங்கையும் ஐநா செயற்பாடுகள் மூலம் உறுதிவழங்கியுள்ளது.
இலங்கை வெற்றியடையவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்,இலங்கையுடனான எங்கள் உறவுகள் விஸ்தரிக்கப்படுவதற்காக பெருமளவு முதலிட்டுள்ளோம். இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன.
இலங்கை யுத்தத்திற்கு பிந்திய காலத்திற்குள் நுழையும் இந்த தருணத்தில் ஜனநாயகத்தை பலப்படுத்தும் இந்த வேளையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றும் பொறுப்பு இலங்கையுடையது.
2016 ம் ஆண்டு சுதந்திரக்கொண்டாட்டங்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்த சிலரில் நானும் ஒருவன். தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டவேளை வளர்ந்தவர்கள் கூட கண்ணீர் விடுவதை மாத்திரம் நான் பார்க்கவில்லை,ஐம்பது வருடத்திற்கு பின்னர் அரச நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை பார்த்து கண்ணீர் சிந்தப்படுவதையும் நான் பார்த்திருக்கின்றேன்.
இதுவே நல்லிணக்கத்தின் பலம், மிக மோசமான துயரம் மற்றும் மனவேதனைகளிற்கு பின்னர் காயங்கள் ஆற்றப்படுவதன் பலம் இது.
நாங்கள் சமமான வாய்ப்புகளையே கோருகின்றோம்.நாங்கள் மிக நீணு;ட காலமாக இந்தோ பசுவிக்கில் நிலை கொண்டுள்ளோம். நாங்கள் வெளிப்படையான சுதந்திரமான இந்தோ பசுவிக்கினை விரும்புகின்றோம்.அனைவருக்கும் பலனளிக்க கூடிய சர்வதேச முறையை நாங்கள் விரும்புகின்றோம்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் இராணுவத்தை உருவாக்க வாரீர்
– மேஜர் ஜெனரல் தர்ஷன அழைப்பு
இராணுவத்தில் இணைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளையோர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கோரினார். இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இராணுவம் சாராத வேலைகளுக்கு இளையோர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். இவ்வேலைகளுக்கு விண்ணப்பித்த இளையோர்களை நெல்லியடியில் இன்று சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இங்கு மேலும் தெரிவிக்கையில்
இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு உடனடியாக 50 இளையோர்களை ஆட்சேர்ப்பு செய்கின்றோம். இவர்களுக்கு வருகின்ற மூன்று வார காலங்களுக்கு இடையில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம். இருப்பினும் 100 பேருக்கு நியமனம் வழங்குவது குறித்து நான் சாதகமாக பரிசீலிக்கின்றேன்.
இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத ஊழியர்களும் அனைத்து வகையிலும் இராணுவ வீரர்களை போலவே கௌரவமாக எம்மால் நடத்தப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் கணிசமான தமிழ் இளையோர்கள் இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் நேரடியாக வினவி இவர்களை நாம் நடத்துகின்ற விதம் குறித்து நீங்களாகவே அறிந்து கொள்ளலாம்.
அதே நேரத்தில் இராணுவத்தில் கணிசமான அளவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளையோர்கள் இணைதல் வேண்டும். இது சிங்கள இராணுவம் அல்ல. எல்லா இனத்தவர்களுக்குமான இராணுவம் ஆகும். 18 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட இளையோர்கள் இராணுவத்தில் இணைய முடியும்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோர்கள் இராணுவத்தில் இணைகின்ற பட்சத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பணியாற்ற முடியும்.தினமும் கடமையை நிறைவு செய்து வீட்டுக்கு சென்று வர முடியும். யாழ்ப்பாணத்தில் தமிழ் இளையோர்கள் கணிசமான அளவில் இராணுவத்தில் இணைவதன் மூலம் தமிழ் இராணுவத்தை இங்கு உருவாக்க முடியும் எனத் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எமது உரிமை – தெற்கில் உள்ளவர்கள் இதில் தலையிட வேண்டாம் – வடக்கு முதல்வர் எச்சரிக்கை
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் உரிமை எமக்கு மட்டுமே உள்ளது. இதில் தெற்கில் உள்ளவர்கள் தலையிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டமை தொடர்பான தெற்கு அரசியல் வாதிகளின் விமர்சனங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ் விடயத்தை கூறினார். மேலும் கூறுகையில்,
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பது எமது தனிப்பட்ட விடயம். இது தொடர்பாக மற்றவர்கள் கூறவேண்டிய அவசியம் இல்லை.
ஏற்கனவே எமக்கு உள்ள அதிகாரங்கள் குறைவு இருக்கும் அதிகாரிங்களையும் மேலும் எடுக்கப்பாக்கிறார்களோ தெரியாது. முள்விவாய்க்கால் நினைவுதினம் தொடர்பான தீர்மானத்ததை எடுக்கும் உரிமை எமக்கு தான் உள்ளது என மேலும் குறிப்பிட்டார்.
தூத்துக்குடியில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்
தமிழகம் தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் இன்று மாலை போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.நகர பேருந்து நிலையம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை பொலிஸார் துப்பாக்கியைப் பயன்படுத்தி அடக்க முயற்சித்தமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மிக வன்மையாகக் கண்டித்தனர்.
தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெலைட் ஆலையை மூட வலியுறத்தி மக்களால் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தின நூறாவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது தமிழகப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவி உள்பட 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மக்களால் சிறைப்பிடிக்கப்பட்ட சுவாமிநாதன் பொலிஸாரின் உதவியுடன் தப்பியோட்டம்
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று(26) காலை பதிநொரு மணியளவில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்களது பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வருகை தந்ததை அறிந்த 452 ஆவது நாளாக கேப்பாபுலவு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் அமைச்சரிடம் தமது காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாட வருகைதந்திருந்தனர்
நிகழ்வு முடிந்து வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா சிவசக்தி ஆனந்தன் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் ஆ புவனேஸ்வரன் மற்றும் மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரை வெளியேறவிடாது தடுத்து நிறுத்தினர்
இதனை தொடர்ந்து நிகழ்வு முடிந்து வெளியேறிய அமைச்சரையும் கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கரைதுரைப்பற்று நுழைவாசலில் நின்று வழிமறித்தனர்
இதன்போது அரசியல்வாதிகளை கண்ட அமைச்சர் என்ன இங்கையும் வழிமறிக்கிறீர்களா என்று கேட்டவாறு மக்களுக்கு அருகில் சென்றார்
இதன்போது, தங்களது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து மீட்பது தொடர்பில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என கேப்பாபுலவு மக்கள் கவலை தெரிவித்தனர்
தொடர்ச்சியாக மக்களது கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டிய மீள்குடியேற்ற அமைச்சர் உங்களுடைய மந்திரியை கேக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களை காட்டினார் தொடர்ந்து மகளது கருத்துக்களை கேட்ட அவர் மக்களிக்கு சரியான பதில் வழங்கமுடியாத நிலையில் பொலிசார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களது அனுசரணையுடன் மக்களை உதறித்தள்ளி தப்பி சென்றார்
வலி வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த 36 ஏக்கர் மக்களின் காணி இன்று (26) சனிக்கிழமை மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.
ஜே/233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய் , மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணி மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்டன என்று தெல்லிப்பளை பிரதேச செயலர் தெரிவித்தார்.
எனினும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையூடான மாங்கொல்லை காணியிலுள்ள வீடுகள் விடுவிக்கப்பட்டவில்லை. அவை தொடர்ந்தும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பாவனையிலேயே இருக்கின்றன. காங்கேசன்துறை செல்லப்பிள்ளையார் கோயில் பின்பகுதியூடாகவோ மாம்பிராய் உள் வீதியூடாகவோ விடுவிக்கப்பட்ட காணிக்குள் போக முடியும் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
“விடுவிக்கப்பட்ட காணிகளில் இப்பிலிப்பிலி மரங்கள் காடுகள் போல வளர்ந்துள்ளதால் மக்கள் தமது வீடுகளையோ ஒழுங்கைகளையோ இனங்காண முடியவில்லை. இராணுவத்தினர் பயன்படுத்திய தனியார் வீதியூடகவே போக முடிகிறது. அங்குள்ள வீடுகள் சில உடைக்கப்பட்டுள்ளன.
மாம்பிராய் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டாலும் மாங்கொல்லை காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இங்கிருந்த நரசிம்ம வைரவர் கோயில் இராணுவ வேலிக்குள்ளேயே உள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் ஊழியர்கள் தங்கும் விடுதியூடாக சீமெந்து தொழிற்சாலைக்கு நேராக கம்பி வேலி அடித்து விடுவித்திருந்தால் அனேகமான வீடுகள் விடுவிக்கப்பட்டிருக்கும். ஆனால் குறுக்கறுத்து மாங்கொல்லை உள் ஒழுங்கையூடாக இராணுவ முட்கம்பி வேலி அடிக்கப்பட்டதால் பல வீடுகள் வேலிக்குள் அகப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமது சொந்த காணிகளை துப்புரவு செய்து மீள்குடியமர்வதற்கு வலி.வடக்கு பிரதேச செயலக மீள்குடியேற்ற செயலணி அதிகாரிகள் எமக்கு உதவிசெய்ய வேண்டும்” என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


























