Home Blog Page 24

சிறுமியின் படுகொலைக்கு எதிராக மன்னாரில் போராட்டம்!

image_pdfPRINT

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதிவழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிறுமியின் மரணத்திற்கு நீதியானதும் விரைவானதுமான நியாயத்தை வழங்க கோரியும், விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு, விசேட விசாரணை பொலிஸ் குழுவை நியமிக்கவேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இணையவழி பாலியல் துஸ்பிரயோகங்களை நிறுத்து, எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

தலைமன்னாரில் சிறுமி கொலை : வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

image_pdfPRINT

மன்னார் – தலைமன்னாரில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டநிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவெளியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுமி நேற்று காலை 6.15 அளவிலேயே சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தேசிய மாநாட்டுக்கான தடைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – எம்.ஏ சுமந்திரன்!

image_pdfPRINT

”தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை”  என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்குத் தடை கோரி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் , சுமந்திரனின் ஆதரவாளர்களால் தொடரப்பட்டது எனவும் , வழக்குகளில் முன்னிலையான சட்டத்தரணிகளும் சுமந்திரனுக்கு ஆதரவானவர்கள் எனவும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தடை கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாராலையோ தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பில் நான் கருத்து கூற முடியாது. அத்துடன் அதற்கு பொறுப்பாளியாகவும் முடியாது. கட்சி கோரிக்கை விடுத்தால் இந்த வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நான் முன்னிலையாகி கட்சி சார்பாக வாதாட தயாராகவுள்ளேன்” இவ்வாறு எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எத்தனை தடைகள் வந்தாலும் முறியடிப்போம்!

image_pdfPRINT

”தமது கட்சிக்கு எதிராக எந்த சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம்” என தமிழரசு கட்சியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான  சி .சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் மாநாட்டுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து , இரு மாவட்ட நீதிமன்றங்களினாலும், மாநாட்டிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எந்த வழக்கையும் எதிர்கொள்ள நாம்  தயார். எமக்கெதிரான சூழ்ச்சிகள் , தடைகளை நாம் மக்களின் ஆத்ம பலத்துடன் முறியடிப்போம். என்னையும் எனது கட்சியையும் குழப்பும், அச்சுறுத்தும் வகையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இவற்றை கண்டு நாம் அஞ்ச போவதில்லை. என்னை தமது தலைவராக ஏற்றுக்கொண்ட கட்சியையும் எமது மக்களையும் இப்படியான சூழ்ச்சிகளால் முடக்க முடியாது. எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். நீதி நிச்சயம் வெல்லும் ” இவ்வாறு  சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் கைகோர்க்க பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் ஆர்வம்!

image_pdfPRINT

பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டுச் சபையுடன் நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போதே பிரித்தானிய நிறுவனங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளதாக உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வட்டமேசை கலந்துரையாடலின் போது இலங்கை மற்றும் பிரித்தானிய வர்த்தக சமூகத்திற்கிடையில் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், குறிப்பாக  கொழும்பு, துறைமுக நகரத்தில் செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாந்தனை திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை அறிவிக்கவுள்ள இந்திய மத்திய அரசாங்கம்

image_pdfPRINT

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை ஒருவார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் இலங்கையை சேர்ந்த சாந்தன் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும் தமிழகத்திலுள்ள திருச்சி சிறப்பு முகாமில் சாந்தன் தொடந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை விடுவிக்குமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் வசித்து வருகின்ற தாயாரை கவனித்துக்கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்தி மத்திய அரசாங்கத்திற்கு சார்பாக முன்னிலையான சட்டத்தரணி இதனை அறிவித்தார்.

விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது.

இலங்கை அரசாங்கம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனஎன தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழக அரசாங்கம் அனுப்பிய ஆவணங்கள் இன்னமும் கிடைக்கவில்லை என சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்ததுடன் சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலண்டனில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் குறித்து இலங்கை அரசு புகாரளிக்கவுள்ளது

image_pdfPRINT

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தினை எதிர்த்து பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் இலண்டனில் நடத்திய போராட்டத்திற்கு எதிராக சிறிலங்கா அரசு பிரித்தானியா மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிருப்தியை இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக பிரித்தானியாவிற்கு தெரிவிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்று இலண்டனில் போராட்டம் நடத்துவதை இலங்கை அரசாங்கம் இங்கிலாந்திலுள்ள வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் எந்த அமைப்பை பற்றி பேசுகிறார் என்பதை குறிப்பிடவில்லை.

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கறுப்பு நாளாக குறிக்கும் வகையில் கடந்த பெப்பரவரி 4 ஆம் திகதி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பும்பெயர் தமிழர்கள் இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் தமிழீழ தேசிய கொடிகளை ஏந்திய வாறு ‘தமிழீழம் ஒன்றே தீர்வு’ ‘போர்க்குற்றங்கள் மட்டுமல்ல இது திட்டமிட்ட இனப்படுகொலை’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடனும் வானுயர கோசங்களை எழுப்பினர். அத்துடன் பேரணியாக பாராளுமன்ற சதுக்கத்திற்கும் சென்றிருந்தனர்.

பிரித்தானிய எம்.பி.க்கு ஆதரவாக தமிழ் இளையோர் தொடரும் பிரசாரப் பணி

image_pdfPRINT

தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Hon. Siobhain McDonagh MPஅவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் குழு தொடர்ந்து களமிறங்கி செயலாற்றி வருவதுடன் அவரது தொகுதியெங்கும் துண்டுபிரசுரங்களை விநியேதாகித்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் Mitcham மற்றும் Morden தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துபவருமான Hon. Siobhain McDonagh MPஅவர்களின் தேர்தல் பரப்புரையில் தமிழ் இளையோர் கலந்து கொண்டு துண்டுபிரசுரங்களை விநியேதாகித்து வருகின்றனர்.

நேற்றைய சனிக்கிழமை (10) மற்றும் இன்றைய மற்று ஞாயிற்றுக்கிழமை (11) ஆகிய இரு நாட்கள் தொடர்ந்து அவரது தேர்தல் பரப்புரைக்கு கைகோர்த்து செயலாற்றியுள்ளனர்.

தமிழ் மக்களிற்கு எதிராக சிறிலங்காவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சியொபியன் மெக்டோனாக் எம். பி அவர்கள் சிறிலங்காவில் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டு தப்பித்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள எங்களைப் போன்றவர்களுக்காக முன்வந்து குரல் கொடுப்பது மட்டுமல்லாது தமது அரசிடம் எமது பிரச்சினைகளை எடுத்து கூறவும் தயங்குவதில்லை என பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் இளையோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

image_pdfPRINT

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இன்று காலை (10) இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய அவர் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் மற்றும் அயலவர்கள் கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியும் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று காலை 8 மணியளவில் வீட்டு கிணற்றுக்குள் இருந்து சடலமாக இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் டெனிஸ்ரன் கீர்த்தனா என்ற இளம் 29 வயதுடைய குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி மரண விசாரணைக்காக எடுத்து கொள்ளப்படும் எனவும், இவ் மரணம் தொடர்பில் யாரும் சாட்சி சொல்ல விரும்பினால் நீதிமன்றத்திற்கு வருகை தந்து சாட்சியம் அளிக்கலாம் எனவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகமட் அவர்களால் தெரிவிக்கப்பட்டதுடன் மரண பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

யாழில் ஆளுநர் செயலகத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சாவல்கட்டு மீனவர்கள்!

image_pdfPRINT

யாழ். சாவல்கட்டு மீனவர்கள், தங்களின் இறங்குத்துறை பிரச்சினைக்குத் தீர்வினைக் கோரி, யாழ். மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்று போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்து  தமது பிரச்சனைகளைத்  தெரியப்படுத்திய சாவல்கட்டு மீனவர்கள், அதன்பின்னர்  வட மாகாண ஆளுநர் செயலகம்வரை பேரணியாக சென்று ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்தும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும்  ஆளுநர், செயலகத்தில் இல்லாத காரணத்தினால் குறித்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இளையேரின் ஆதரவுடன் களம் காணும் பிரித்தானிய அமைச்சரும் ஆளும் கட்சி உறுப்பினருமான Hon. Steve Tuckwell MP

image_pdfPRINT

பிரித்தானியாவில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரித்தானியாவின் அனைத்து கட்சிகளும் தமது தேர்தல் பரப்புரைகளை மும்மரமக ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் பிரித்hனியாவின் தற்போதைய ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான Hon. Steve Tuckwell MP க்கு ஆதரவாக அவர்களின் தேர்தல் பரப்புரையில் தமிழ் இளையோர் கலந்து கொண்டு கடந்த சனிக்கிழமை (3.2.2024) பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் குறித்த அமைச்சர் அவர்களை வெற்றிபெற வைப்பது பிரித்தானியா வாழ் புலம் பெயர் தமிழர்களுக்கு பெரும் பலமாக இருக்கும் என பிரச்சாரத்தில் ஈடுபட்ட குறித்த தமிழ் இளையோர் நமது ஈழநாட்டுக்கு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பிரித்தானியாவிலுள்ள புலம் பெயர் தமிழர்களுடன் தொடர்ந்து செயலாற்றி வரும் Hon. Steve Tuckwell MP அவர்களின் வதிவிட மற்றும் தொழிற் பிரச்சினைகளுக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அது மட்டுமல்லாது சிறிலங்காவில் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டு தப்பித்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள எங்களைப் போன்றவர்களுக்காக முன்வந்து குரல் கொடுப்பது மட்டுமல்லாது தமது அரசிடம் எமது பிரச்சினைகளை எடுத்துக்கூறி அதற்கான தீர்வுகள் பலவும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்நிலைல் தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அவருடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம் எனக் கூறினார்கள்.

பிரித்தானிய தொழிற்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் கைகோர்த்துள்ள தமிழ் இளையோர்

image_pdfPRINT

பிரித்தானியாவில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் Mitcham மற்றும் Morden தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துபவருமான Hon. Siobhain McDonagh MPஅவர்களின் தேர்தல் பரப்புரையில் தமிழ் இளையோர் கலந்து கொண்டு கடந்த சனி (3.2.2024) மற்று ஞாயிறு (4) தினங்களில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் Hon. Siobhain McDonagh MP அவர்களை வெற்றிபெற வைப்பது பிரித்தானியாவாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு பெரும் பலமாக இருக்கும் என பிரச்சாரத்தில் ஈடுபட்ட குறித்த தமிழ் இளையோர் நமது ஈழநாட்டுக்கு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களிற்கு எதிராக சிறிலங்காவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சியொபியன் மெக்டோனாக் எம். பி அவர்கள் சிறிலங்காவில் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டு தப்பித்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள எங்களைப் போன்றவர்களுக்காக முன்வந்து குரல் கொடுப்பது மட்டுமல்லாது தமது அரசிடம் எமது பிரச்சினைகளை எடுத்து கூறவும் தயங்குவதில்லை.

எனவே தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அவருடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம் எனக் கூறினார்கள்.

error: Content is protected !!