SHARE

பிரித்தானியாவில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் Mitcham மற்றும் Morden தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துபவருமான Hon. Siobhain McDonagh MPஅவர்களின் தேர்தல் பரப்புரையில் தமிழ் இளையோர் கலந்து கொண்டு கடந்த சனி (3.2.2024) மற்று ஞாயிறு (4) தினங்களில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் Hon. Siobhain McDonagh MP அவர்களை வெற்றிபெற வைப்பது பிரித்தானியாவாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு பெரும் பலமாக இருக்கும் என பிரச்சாரத்தில் ஈடுபட்ட குறித்த தமிழ் இளையோர் நமது ஈழநாட்டுக்கு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களிற்கு எதிராக சிறிலங்காவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சியொபியன் மெக்டோனாக் எம். பி அவர்கள் சிறிலங்காவில் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டு தப்பித்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள எங்களைப் போன்றவர்களுக்காக முன்வந்து குரல் கொடுப்பது மட்டுமல்லாது தமது அரசிடம் எமது பிரச்சினைகளை எடுத்து கூறவும் தயங்குவதில்லை.

எனவே தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அவருடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம் எனக் கூறினார்கள்.