Home Blog Page 10

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது!

image_pdfPRINT

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று  யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் குறித்த  தேர்தல் விஞ்ஞாபனம்  வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாடு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை  வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளராக அரியநேந்திரனின் தேர்தல்  விஞ்ஞாபனம் அமையப்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலை இலக்கு வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதி பத்திரங்கள்

image_pdfPRINT

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தந்தையான சதாசிவம் இராமநாதனை பினாமியாக வைத்து மதுபானசாலைக்கான அனுமதியை கிளிநொச்சியில் பெற்றார் என குற்றஞ்சாட்டினார்.

யாழ். ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மதுவரி திணைக்களத்திற்கு அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் எழுதியதாக தெரிவித்த கடிதமொன்றையும் வெளிப்படுத்தினார்.

இதேவேளை அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதாகவும், மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழருக்கு எதிரானவர்களை சங்கறுக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

Large Demonstration in Britain Demands Justice for Enforced Disappearances in Homeland

image_pdfPRINT

In commemoration of the International Day of the Victims of Enforced Disappearances (August 30) and to honor those who suffered and vanished during the civil war in their homeland, a significant protest took place at North Terrace, Trafalgar Square, London. The demonstration, organized in collaboration with the Transitional Government of Tamil Eelam and other diaspora organizations, called for an international investigation to secure justice for the victims.

The United Nations designated August 30 as the International Day of the Victims of Enforced Disappearances in 2011, to shed light on the millions of people who have disappeared due to conflicts, political repression, and violence worldwide.

According to the United Nations, more than 140,000 people have gone missing due to the civil war that ravaged the homeland from 1983 to 2009. Journalists and human rights activists who have spoken out against the atrocities committed against Tamils in their homeland continue to face threats, with many being forcibly disappeared by the Sri Lankan government and military.

For the past 2,500 days, the families of the missing have been tirelessly seeking justice, with human rights activists standing by their side. To this day, none of the disappeared individuals have been located, and their fate remains unknown. The demonstration in London aims to draw international attention to this ongoing struggle for justice.

The continued efforts of homeland families and activists to seek justice serve as a powerful testament to the significance of the International Day of the Victims of Enforced Disappearances. It is the shared aspiration of human rights advocates worldwide to end the crime of enforced disappearances and ensure that no one is subjected to such a fate again.

சர்வதேச விசாரணையை வலியுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் உறவுகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

image_pdfPRINT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையை கோருகின்றோம் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழ். ஆரியகுளம் சந்தியிலிருந்து குறித்த ஆர்ப்பாட்டப்பேரணியை தீ சட்டிகள் ஏந்தியபடி ஆரம்பித்து யாழ். நுகரை சுற்றி வந்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.

https://youtu.be/OLUKgiX9qbY

தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி பிரித்தானியாவில் மாபெரும் போராட்டம்

image_pdfPRINT

டிலக்‌ஷன் மனோரஜன்
(பிரித்தானியா)

சர்வதேச காணாமல் ஆக்கபட்டோர் தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 30) தாயகத்தில் உள்நாட்டு போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை நினைவு கூரும் வகையில் அவர்களுக்கான சரியான நீதியை பெற்றுக் கொடுக்க சர்வதேச விசாரணை கோரியும் பிரித்தானியாவில் உள்ள NORTH TERRACE TRAFALGAR SQUARE LONDON ல் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று (30) நாடு கடந்த தமிழில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்து புலம்பெயர் உறவுகளும், புலம்பெயர் அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

உலகம் முழுவதும் இடம்பெறும் போர், அரசியல், வன்முறை போன்ற பல்வேறு காரணங்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல இலட்சக்கணக்கானோர் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வண்ணம் ஆகஸ்ட் 30ம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐக்கிய நாடுகள் கடந்த 30.8.2011 அன்று பிரகடணப்படுத்தியது.

தாயகத்தில் 1983 தொடக்கம் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு போரினால் சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள், மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.

தாயகத்தில் இன்றுவரை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து கருத்துக்களை வெளியிடும் செய்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அரசினாலும் இராணுவத்தாலும் அச்சுறுத்தப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதும் தொடர்ச்சியாக இடம் பெற்றுக்கொண்டேதான் இருக்கின்றது.

கடந்த 2500 நாட்களுக்கு மேலாக இதற்கான நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இன்றுவரை போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள், இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை இச்செய்ப்பாடுகளுக்கு நீதி கோரியே பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் உறவுகள் புலம்பெயர் அமைப்புகள் இணைந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் போராட்டத்தை இன்று மேற்கொள்கின்றார்கள்.

இந்த நூற்றாண்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கடைப்பிடிப்பதற்கான மிகச் சிறந்த முன்னுதாரணம் நமது தாயக உறவுகள் இன்று வரை இதற்காக போராடிக் கொண்டிருப்பதை கொள்ளலாம்.

சக மனிதர்களை காணாமல் போகச் செய்வது போன்ற குற்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கனவாக உள்ளது.

https://youtu.be/4aMvfGk8C0g

படங்கள்- அனுசன் பாலசுப்பிரமணியம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையை வலியுத்தி ஐ.நா.வுக்கு கடிதம்

image_pdfPRINT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையை கோருகின்றோம் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாயகத்திற்கு(ழுர்ஊர்சு) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுர்வவதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 ஆகிய இன்று வடக்கு மற்றும் கிழக்கில் உறவினர்களால் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க்பட்டன. இராணுவம் மற்றும் பொலிசாரின் தடைகளை மீறி முன்னெடுக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டங்களில் பெருமளவிலானோர் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியர் எங்கே என்று கோரியபடி நீதி கேட்டு நின்றார்கள்.

இந்நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 8 மாவட்டத்தின் தலைவிகளின் கையொப்பங்களுடன் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

ARED-Tamil

ரணிலினால் தமிழ் மக்களுக்கு பயனில்லை – சி.வி.விக்னேஸ்வரன்!

image_pdfPRINT

ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டுமே வாக்குறுதியை வழங்குவார் எனவும்  தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

13 வது திருத்தத்தை தமிழ் மக்களின்  நிரந்தர தீர்வாக தாம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் குறைந்தபட்சம் அதிலுள்ள அதிகாரங்களையாவது நடைமுறைப்படுத்த ரணில் விக்கிரமசிங்கவுடன் தாம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும்,

பேச்சுவார்த்தையில் 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கான நிபுணர் குழு பரிந்துரைகளை வழங்குவதற்காக  நிர்மலா சந்திரகாசன் தலைமையில் நிபுணர் குழுவுக்கான பெயர்களை வழங்கியதாகவும், ஆனால் ரணில் விக்ரமசிங்க குறித்த குழுவை அங்கீகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் சாதகமான நிலப்பாட்டை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர் மீது நம்பிக்கை வைத்ததாகவும், ஆனால் ரணில் விக்கிரமசிங்க  பேச்சில் மட்டும் செயல்படுத்தும் நபராக  காணப்பட்டாரே தவிர நடைமுறையில் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை எனவும் விக்னேஸ்வரன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியத்தை முதலில் முன்வைத்து தான் முன்மொழிந்ததாகவும் , உடல்நிலை காரணத்தால் பொது வேட்பாளரின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு செல்லாததை வைத்து

சிலர் தான் ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக புரளிகளை கிளப்பி விட்டுள்ளார்கள் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் நிலையில் தமிழ் மக்கள்  அவருக்கான அமோக ஆதரவை வழங்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடவுச்சீட்டு பெறுவதற்கு இரவு பகலாக காத்திருக்கும் மக்கள்

image_pdfPRINT

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் வவுனியா குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக கடந்த ஆறு நாட்களிற்கு மேல் அடிப்படை வசதியின்றி வீதி ஓரத்தில் இரவு, பகலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த திணைக்களத்தின் ஊடாக ஒரு நாளைக்கு 25 நபர்களுக்கும், ஒருநாள் சேவையின் கீழ் 25 நபர்களுக்கும் , ஏற்கனவே சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து குறிப்பிட்ட காலம் முடிவடைந்தும் கடவுச்சீட்டினை பெறாதவர்கள் 10 நபர்கள் என ஒரு நாளைக்கு 60 நபர்களுக்கு வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுபவர்களில் முக்கிய தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்பாக கடந்த ஆறு நாட்களாக வரிசையில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் கடவுச்சீட்டினை பெறுவதற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

ஐ.நா உயர்ஸ்தானிகரின் குற்றச்சாட்டுகளை இலங்கை மறுப்பு!

image_pdfPRINT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஐநா மனித உரிமைகள் பேரவையின் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை இன்னும் செய்யாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் மூலம் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், கைதிகளுக்கு எதிரான சித்திரவதைகள் அதனால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, ஐ.நா உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான அதன் நிலைப்பாட்டை ஜெனிவாவை தளமாகக் கொண்ட உலக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு தூதர்களுக்கு அரசாங்கம் விளக்கியுள்ளது.

யாழில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

image_pdfPRINT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

அதன்படி யுத்தம் நிறைவுக்கு வந்த நாட்கள் தொடக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம். இது வரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

உள்ளக விசாரணைகளின் ஊடாக நீதி கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை எனவே தான் நாம் சர்வதேச விசாரணைகளை கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்

அந்த வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும் எமது போராட்டத்திற்கு தமது அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவு – சிறீதரன்

image_pdfPRINT

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார். 

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சிறீதரனால் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து, சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும்” என சிறீதரன் தெரிவித்துள்ளார். 

இலங்கை தமிழரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அல்லது எடுக்கும் முடிவு மக்களிடமிருந்து எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறது என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்.

அதேவேளை, கருத்து தெரிவித்த அரியநேத்திரன், தான் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவர் சிறீதரன் என குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!