SHARE

டிலக்‌ஷன் மனோரஜன்
(பிரித்தானியா)

சர்வதேச காணாமல் ஆக்கபட்டோர் தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 30) தாயகத்தில் உள்நாட்டு போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை நினைவு கூரும் வகையில் அவர்களுக்கான சரியான நீதியை பெற்றுக் கொடுக்க சர்வதேச விசாரணை கோரியும் பிரித்தானியாவில் உள்ள NORTH TERRACE TRAFALGAR SQUARE LONDON ல் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று (30) நாடு கடந்த தமிழில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்து புலம்பெயர் உறவுகளும், புலம்பெயர் அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

உலகம் முழுவதும் இடம்பெறும் போர், அரசியல், வன்முறை போன்ற பல்வேறு காரணங்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல இலட்சக்கணக்கானோர் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வண்ணம் ஆகஸ்ட் 30ம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐக்கிய நாடுகள் கடந்த 30.8.2011 அன்று பிரகடணப்படுத்தியது.

தாயகத்தில் 1983 தொடக்கம் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு போரினால் சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள், மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.

தாயகத்தில் இன்றுவரை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து கருத்துக்களை வெளியிடும் செய்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அரசினாலும் இராணுவத்தாலும் அச்சுறுத்தப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதும் தொடர்ச்சியாக இடம் பெற்றுக்கொண்டேதான் இருக்கின்றது.

கடந்த 2500 நாட்களுக்கு மேலாக இதற்கான நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இன்றுவரை போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள், இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை இச்செய்ப்பாடுகளுக்கு நீதி கோரியே பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் உறவுகள் புலம்பெயர் அமைப்புகள் இணைந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் போராட்டத்தை இன்று மேற்கொள்கின்றார்கள்.

இந்த நூற்றாண்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கடைப்பிடிப்பதற்கான மிகச் சிறந்த முன்னுதாரணம் நமது தாயக உறவுகள் இன்று வரை இதற்காக போராடிக் கொண்டிருப்பதை கொள்ளலாம்.

சக மனிதர்களை காணாமல் போகச் செய்வது போன்ற குற்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கனவாக உள்ளது.

படங்கள்- அனுசன் பாலசுப்பிரமணியம்

Print Friendly, PDF & Email