வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையை கோருகின்றோம் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழ். ஆரியகுளம் சந்தியிலிருந்து குறித்த ஆர்ப்பாட்டப்பேரணியை தீ சட்டிகள் ஏந்தியபடி ஆரம்பித்து யாழ். நுகரை சுற்றி வந்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.