வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையை கோருகின்றோம் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாயகத்திற்கு(ழுர்ஊர்சு) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுர்வவதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 ஆகிய இன்று வடக்கு மற்றும் கிழக்கில் உறவினர்களால் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க்பட்டன. இராணுவம் மற்றும் பொலிசாரின் தடைகளை மீறி முன்னெடுக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டங்களில் பெருமளவிலானோர் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியர் எங்கே என்று கோரியபடி நீதி கேட்டு நின்றார்கள்.
இந்நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 8 மாவட்டத்தின் தலைவிகளின் கையொப்பங்களுடன் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
ARED-Tamil