SHARE

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தந்தையான சதாசிவம் இராமநாதனை பினாமியாக வைத்து மதுபானசாலைக்கான அனுமதியை கிளிநொச்சியில் பெற்றார் என குற்றஞ்சாட்டினார்.

யாழ். ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மதுவரி திணைக்களத்திற்கு அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் எழுதியதாக தெரிவித்த கடிதமொன்றையும் வெளிப்படுத்தினார்.

இதேவேளை அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதாகவும், மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழருக்கு எதிரானவர்களை சங்கறுக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

Print Friendly, PDF & Email