இந்தியாவின் உத்தரவாதத்துடன் கூட்டமைப்புடன் பேச்சுக்களை மீளத் தொடங்குகிறது சிறிலங்கா!

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமநேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில்...

தமிழர்கள் எந்த ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டுமென சர்வதேசமே தீர்மானிக்க வேண்டும்: ஐ.நா உதவிச் செயலரிடம் வலியுறுத்தல்!

தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் இன்னமும் முடிவுபெறவில்லை. அவர்களின் ஆயுதங்களே மௌனிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் எவ்வாறான ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகமே தீர்மானிக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐ.நா உதவி...

நல்லூர் பிரதேச சபையின் காணியை அடாத்தாக பிடித்தனர் படையினர்; காவலாளியைத் துரத்திவிட்டு இராணுவப் பாதுகாப்பு!

திருநெல்வேலி பாற்பண்ணைக்கு முன்பாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை நேற்று சபையின் அனுமதி எதுவுமின்றி அத்துமீறி அடாத் தாகக் கையகப்படுத்தினர் படையினர். இந்தக் காணியை படையினருக்கு வழங்குவதில்லை என நல்லூர் பிரதேசசபை...

விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதற்கு இந்தியா இடமளிக்காதாம் – விமல் வீரவன்ச நம்பிக்கை!

விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதை இந்தியா விரும்பாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சிறிலங்கா அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்தியத் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அவர், மன்னார், பெரியமடுவில்...

சிறிலங்காவில் தீவிர பணிகளில் இருந்து ஒதுங்குகிறது அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம்!

சிறிலங்காவில் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் செயற்பாட்டு நிலைப் பணிகள் நிறுத்தப்படவுள்ளதாக, அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அன்ரனியோ குரேரஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் 63வது நிறைவேற்றுக் குழுவில்...

வடக்கு ஆளுனரின் ஒப்புதலுக்கு தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு!

திவிநெகும சட்டமூலத்துக்கு வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஒப்புதல் அளிப்பதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது. வடக்கு மாகாணசபை இன்னமும் தெரிவு செய்யப்படாத நிலையில், வடக்கு மாகாண...

போர்க்குற்ற மீறல்கள் குறித்த விசாரணையின் நிலை என்ன? – சிறிலங்காவிடம் அமெரிக்கா மீண்டும் கேள்வி!

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமானச்சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்னவென்று, அமெரிக்கா மீண்டும் வினவியுள்ளது. நியுயோர்க்கில் சிறிலங்காவின் நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து பிளேக்கிடம் போட்டுக் கொடுத்தார் ஹக்கீம்!

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, சிறிலங்கா அரசாங்கமோ ஆர்வம் extra. That t canadian drug fail mall My. Hair kind http://npfirstumc.org/idk/sample-test-for-pharmacy-tech.html...

கிழக்கு மாகாணசபையில் தவிசாளர் பதவியையும் பறித்துக் கொண்டது சிறிலங்கா சுதந்திரக் கட்சி!

கிழக்கு மாகாணசபையில் தவிசாளர் பதவியையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே பறித்துக் கொண்டுள்ளது. அண்மையில் கிழக்கு மாகாணசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில், 14 ஆசனங்களை வென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து...

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் – இந்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறதாம்!

தமிழ்நாட்டில்விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்து வருகிறதா என்பது குறித்து இந்திய மத்திய அரசு, உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி. புதுடெல்லியில் நேற்று, இடம்பெற்ற இராணுவ நிகழ்வு ஒன்றையடுத்து செய்தியாளர்களிடம்...