SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியாவில் வைத்துக் கடத்தப்பட்டதாக மனித உரிமைகள் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

nishanthan

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நிசாந்தன் விசுவலிங்கம் என்னும் இளைஞர் வவுனியாவில் வைத்து நேற்று, அதாவது ஏப்ரல் 21 அன்று கடத்தப்பட்டுள்ளார். இவர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்பதுடன், இவரது சகோதரியும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்துள்ளார் என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர் தொடர்பாக இதுவரை எந்தவிதத் தகவல்களும் தெரியவில்லை என்றும் தெரிகின்றது.