Home Blog Page 4

சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுப்பு

image_pdfPRINT

பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் சிறிலங்காவில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை நினைவுகூருவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டும் மனித உரிமைகள் தின நிகழ்வு, அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்றது.

இந்நிலையிலேயே மேற்படி நிகழ்வில் இலங்கையில் யுத்தத்தின் போது இறந்தவர்களின் பெயர் விபரங்கள் செயற்பாட்டாளர்களினால் கணக்கெடுக்கப்பட்டன. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையிலும் இன்றுவரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ பட்டியலோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (HRDAG) ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை ஆவணப்படுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதியை சட்டரீதியாக நிரூபிக்க முடியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நிகழ்வில் இறந்தவர்களை கணக்கெடுக்கு பணியினை செயற்பாட்டாளர்களான ஜயகீசன் விஜயகுமார் மற்றும் கணேசமூர்த்தி விது~ன் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.

தீபச்செல்வனின் சயனைட் நாவல் சென்னையில் வெளியீடு

image_pdfPRINT

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவல் வெளியீடு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லாப்பின் பிரமாண்ட திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (03.12.2024) இடம்பெற்றது.

பெருங்களங்கள் கண்ட ஈழத் தளபதியின் கதையாக அமைந்துள்ள சயனைட் நாவல், 2009 போருக்கு முன்னர் விடுதலைப் புலிகள் பெற்றிருநந்த முக்கியத்துவத்தையும் குறித்த காலத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தையும் பேசுகின்றது.

சென்னையில் உள்ள டிஸ்கவரி பப்ளிகேசன் வெளியிட்டுள்ள நாவலின் வெளியீட்டு விழாவை சுரேஷ் தமிழன் முகாமை செய்தார். தமிழ்நாடு அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்ச்சி கல்லூரியின் இயக்குனரும் ஓவியருமான மருது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புலம்பெயர் தமிழ் பிரதிநிதி நிமால் விநாயகமூர்த்தி, வடஅமெரிக்கத் தமிழ் சங்கத்தின் மேனாள் தலைவர்களான பாலா சுவாமிநாதன் மற்றும் கால்டுவெல் வேள்நம்பி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குனர் மீரா கதிரவன், ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், பிபிசியின் முன்னாள் செய்தியாளர் சிவராமகிருஷ்ணன், டிஸ்கவரி பப்ளிக்சேன் நிறுவனத்தின் பதிப்பாளர் முணுசாமி வேடியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதேவேளை நாவல் குறித்த விமர்சன உரையினை இந்துப் பத்திரிகையின் உதவி ஆசிரியரும் கவிஞருமான மண்குதிரை ஜெயக்குமார் ஆற்றியிருக்க, நிகழ்ச்சியினை திரைக்கலைஞர் பாலமுரளிவர்மன் தொகுத்து வழங்கியிருந்தார். நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 5 வேட்பாளர்கள் மீது வழக்கு!

image_pdfPRINT

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் மீதமுள்ள 5 பேர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது ஏழு ஜனாதிபதி வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு அதிகாரியொருவர் கூறுகையில், ‘செலவு அறிக்கை சமர்ப்பிப்பு முடிந்த அன்றே தபால் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டதால், ஒரு வேட்பாளர் மீது வழக்கு தொடரப்படாது.

மேலும், செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர் மீது வழக்குத் தொடரப்பட்டால், அந்த வேட்பாளர் மாகாண அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

image_pdfPRINT

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர் வவுணதீவு,காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51 வயதுடைய பொன்னம்பலம் சிங்கநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடிவந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதிக்கு வந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதுடன் உடலில் சில காயங்களும் காணப்படுவதாக சடலத்தினை பார்வையிட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு

image_pdfPRINT

Dilaksan Manorajan

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் மார்கழி 15 2024 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் விம்பிள்டன் பிரதேசத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெற்றது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த வணக்க நிகழ்வில் பெருந்திரளான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டு ஈழத் தமிழர் வாழ்வில் என்றும் நீங்காத நினைவாக இருக்கும் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான வணக்கத்தை செலுத்தினர்.

நிகழ்வின் பொதுச்சுடரினை நீண்ட நாள் தேசிய செயற்பாட்டாளர் திரு துரைராஜா யோகேஸ்வரன் ஏற்றி வைத்தார், தமிழ் தேசியக் கொடியினை கேப்டன் வாசு, மேஜர் ஜேம்ஸ், கேப்டன் சுந்தரி ஆகியோரின் சகோதரர் திரு உருத்திராபதி சேகர் ஏற்றி வைத்தார், தொடர்ந்து ஈகைச்சுடரினை நீண்ட காலமாக கலை பண்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படும் நடன ஆசிரியை திருமதி ஷாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

நிகழ்வின் நினைவு உரை தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானிய செயற்பாட்டாளர் திரு செல்வா அவர்கள் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் நினைவு சுமந்து உரையாற்றினார். ஈழத் தமிழர் விடுதலை நோக்கிய பயணத்தில் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் பங்களிப்பு என்றும் தவிர்க்க முடியாதது என்றும் அவரின் இழப்பு இன்றுவரை எமது விடுதலைப் பயணத்தில் ஈடு செய்ய முடியாததாகவும் நினைவு உரையாற்றினார்.

நடன ஆசிரியை திருமதி ஷாமினி கண்ணன் அவர்களின் நெறியாழ்கையில் தேசத்து பாடல்களுக்கான நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது. நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம்

image_pdfPRINT

Dilaksan Manorajan

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2024 நிகழ்வு இலண்டனில் நடைபெற்றது.

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய 76வது ஆண்டு நிறைவையிட்டு, மனித உரிமைகள் தினத்தை நினைவுகூருவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

2024 ம் ஆண்டுக்கான மனித உரிமை நிகழ்வுகள் இலண்டன் Woodford Woodbridge High School இல் இடம் பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக Hon Jas Atwal MP (MP for Illford South) அவர்களும் சிறப்பு விருந்தினர் பேச்சாளர்களாக முனைவர் ஆதித்தன் ஜெயபாலன் (MA and Phd In Social Anthropology) அவர்களும் Ms Yvonne Schofield (The Campaign Director Of The Srilankan Campaign For Peace & Justice) அவர்களும் Cllr Thevathurai Jeyaranjan (Former Mayor Of Redbridge) மற்றும் Professor Andy Higginbottom (Professor Of International Politics – Kingston University) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் ஆரம்பமாக TIC ன் நிறுவனர்களில் ஒருவரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான அமரர் வைரமுத்து வரதகுமார் அவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிகழ்விற்கு ஒளியூட்டும் வகையில் அதிதிகளினால் மங்கள விளக்கேற்றி நிகழ்வானது இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து வரவேற்பு நடனம் கலைமாமணி பிரேமலதா தேவி அவர்களின் நெறியாழ்கையில் மாணவி அக்க்ஷரா ராதாகிருஷ்ணன் வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வரவேற்பு உரை TIC இயக்குனர் குழுமத்தின் தலைவரும் TIC ன் மூத்த உறுப்பினருமான திரு V.J.Boss அவர்களினால் நிகழ்வினை வரவேற்று உரை நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வின் மற்றுமொரு அங்கமாக TIC யின் வரலாறு மற்றும் தமிழர் பாரம்பரிய அருங்காட்சியகம் தொடர்பான செயற்திட்ட ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. தமிழர் கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் TIC ன் செயற்திட்ட இலக்கு தொடர்பான ஒரு பார்வையாக இது அமைந்திருந்தது.

பின்னர் இச்செய்திட்ட அறிக்கையானது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட Hon Jas Atwal அவர்களிடமும் Cllr Thavathurai Jeyaranjan அவர்களிடமும்TIC ன் இயக்குனர் குழுமத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து முதலாவது விருந்தினர் உரை முனைவர் ஆதித்தன் ஜெயபாலன் அவர்களினால் சமகால மனித உரிமைகள் தொடர்பான உரை நிகழ்த்தப்பட்டது தொடர்ந்து அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு TIC இன் இயக்குனர் குழுமத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது விருந்தினர் உரை Ms Yvonne Schofield (The Campaign Director Of The Srilankan Campaign For Peacr & Justice) நிகத்தப்பட்டு அவருக்கான கௌரவிப்பும் TIC இன் இயக்குனர் குழுமத்தினால் வழங்கப்பட்டது.

இவ்வாண்டுக்கான மனிதநேய செயற்பாடல்களுக்கான TIC இன் மிகச் சிறந்த கௌரவம் அளிக்கும் மனித உரிமைகள் விருது சிறந்த தைரியமான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அமரர் விராஜ் மெண்டிஸ் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இவ்விருதினை அவர் சார்பாக Dr Andy Higginbottom அவர்கள் ஏற்றுக் கொண்டார் தொடர்ந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அமரர் விராஜ் மெண்டிஸ் அவர்களின் மனிதநேய செயல்பாடுகள் மற்றும் தமிழ் சமூகத்திற்கு அவர் ஆற்றிய மனிதநேயப் பணிகள் அவரின் தைரியமான செயல்பாடுகள் தொடர்பான உரை Dr Andy Higginbottom அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இரண்டாவது மனித உரிமைகள் விருது சிறந்த மனித நேய செயற்பாட்டாளரான தமிழ் சமூகத்திற்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் முன் நின்று செயல்படும் Liss Philipson (Chair of Justice Through Legal Project – JTLP) அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

TIC யின் நிறுவுனர்களில் ஒருவரும் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளருமான காலம்சென்ற உயர்திரு வைரமுத்து வரதகுமார் அவர்களின் ஞாபகார்த்த விருது (Varadhakumar Memorial Award 2024) இவ்வாண்டு திரு விசாகன் சுப்பிரமணியம் (Anthropologist, Author & Senior Researcher of TIC) அவர்களின் தமிழ் சமூகம் மீதான மனிதநேயச் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் ஆய்வுக்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பின்னர் பன்நெடுங்கால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசை வாகிசன் தலைமையிலான குழுவினால் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மெய்வெளி நாடகக் குழுவின் மிக அற்புதமான “மரணத்தை விட கொடியது” (“Poison Beyond Death” ) எனும் நாடகம் அரங்கேற்றி வைக்கப்பட்டது. நாம் கடந்து வந்த பாதையில் அனுபவித்த மிகக் கொடிய வலிகளை மிகவும் உணர்வுபூர்வமாகவும் பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்யும் வண்ணமாகவும் மெய்வெளி நாடக கலைஞர்களால் மிகச் சிறப்பாக உணர்வுபூர்வமாக அரங்கேற்றப்பட்டது அனைவரினதும் பாராட்டை பெற்றது.

அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், ஏனைய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் தகவல் நடுவம் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை செல்வன் டிலக்சன் மனோராஜன் மற்றும் மகிஷா வரதராசா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!

image_pdfPRINT

மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை  வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக்கல்லூரியின் முன்னால் புத்தர்சிலை நிறுவப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்னால் புத்தர் சிலையொன்று திடீரென்று நிறுவப்பட்டுள்ளது. தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

அந்தவகையில் வைத்தியசாலை நிருவாகத்திற்குத் தெரியாமல் அவர்களது அனுமதியைப் பெறாமல் ஒரு புத்தர் சிலையை வைத்திருப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத கண்டனத்துக்குரிய விடயமாகும்.

புதிதாக இந்த நாட்டில் உருவாகியிருக்கின்ற அரசாங்கம் சாதி, மத, இன பேதமற்ற ஒரு இலங்கையை உருவாக்கவேண்டும் என்ற கோசத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றார்கள். இவர்களும் தொடர்ச்சியாக இப்படி தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்களா?, அல்லது அரசாங்கத்திற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற தோரணையில் இந்த தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் செயற்படுகின்றாரா? என்ற கேள்விக்குறி எங்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

எது எவ்வாறாயினும் வட கிழக்குப் பிரதேசம் என்பது தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் கணிசமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்குள் அனுமதியின்றி ஒரு புத்தர் சிலையை நிறுவியிருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வைத்தியசாலை நிருவாகம் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு அங்கிருக்கும் பதற்ற நிலைமையை தவிர்ப்பது மாத்திரமல்லாமல் இந்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாகக்  கூடுதலான கரிசனையை எடுத்து அங்கு ஏற்படவிருக்கும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் ” இவ்வாறு  கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திடம் சொல்லும் TIC யின் உலக மனித உரிமைகள் தினம் -2024

image_pdfPRINT

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவம் (TIC) நடாத்தும் உலக மனித உரிமைகள் தினம்-2024 நிகழ்வு நாளை சனிக்கிழமை 14 ஆம் திகதி இலண்டனில் நடைபெறவுள்ளது.

மனிதனின் உரிமைகளை பேணிக்காக்க ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் பிரகடணப்படுத்திய (டிசம்பர் 10) மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இன மக்களிற்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டு தோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் “நமது உரிமை நமது எதிர்காலம் இப்போதே” எனும் கருப்பொருளில் TIC இம்முறை நடாத்தும் மனித உரிமைகள் நிகழ்வு நாளை சனிக்கிழமை Woodbridge High School St Barnabas Road, Woodford Green, Essex IG8 7DQ எனும் முகவரியில் பிற்பகல் 14.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பிரித்தானியாவின் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Hon. Jas Athwal MP கௌரவ விருந்தினராக கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Redbridge நகரின் முன்னாள் மேயரும் சுகாதாரம் மற்றும் சமூக வழக்கறிஞருமான Cllr.Thavathuray Jeyaranjan, இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் பணிப்பாளர் Yvonne Schofield , சர்வதேச அரசியல் பேச்சாளரும் பிரித்தானிய கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பேராசிரியருமான Dr Andy Higginbottom மற்றும் சமூக மானுடவியல் முனைவரும் தமிழ் மற்றும் மானுடவியலில் சிறப்பு பெற்றவருமான Dr.Athithan Jayapalan ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் உலகளாவிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இலங்கை அரசின் சித்திரவதையிலிருந்து தப்பித்து பிரித்தானியாவில் புகழிடம் கோரியள்ள செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக ஆண்டு தோறும்TIC யினால் வழங்கப்படும் மனித உரிமைகள் சிறப்பு விருதினை இம்முறை JTLP இன் தலைவரும் தெற்காசிய முழுவதுக்குமான மோதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முன்னாள் ஆய்வாளருமான Liz Phillipson, தமிழர் உரிமைகளுக்கான பிரதான வழக்கறிஞரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான Viraj Mendis ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளதுடன் TIC யின் முன்னாள் இயக்குனர் மறைந்த வரதகுமார் நினைவு விருது மானுடவியல் மற்றும் வரலாற்று ஆசிரியரும் TIC யின் மூத்த ஆராய்ச்சியாளருமான Subramaniyam Visahan அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தவிர கலைமாமணி பிரேமலாதேவி ரவீந்திரன் அவர்களின் விசேட நடன நிகழ்வும் மெய்வெளி அரங்க குழுவினரின் “மரணத்தை விட கொடியது” எனும் நாடகமும் மேலும் பல கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

இதில் பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்வதுடன் மனித உரிமைக்காக குரல் கொடுக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மாவீரர்களுக்கு அஞ்சலி

image_pdfPRINT

டிலக்‌ஷன் மனோரஜன்

உலகலாவிய ரீதியில் மாவீரர் தினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரித்தானியாவிலும் (UK) இந்நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் நகரில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்திலலும் பிரித்தானிய மத்திய லண்டனில் உள்ள Excel அரங்கிலும் மாவீரர் நாள் நினைவுகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழ நேரம் மாலை 6:05:00 க்கும் பிரித்தானிய நேரப்படி மதியம் 12.35 மணிக்கு விளக்கேற்றலுடன் நினைவேந்தல் ஆரம்பமானது. நிகழ்வில் மாவீரர்களின் பெருமை சொல்லும் தாயகப் பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் உரைகள் என்பன உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

நெதர்லாந்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்

image_pdfPRINT

நெதர்லாந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமில் மாவீரர் நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மாவீரர்களை நினைவுகூறும் முகமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதன்போது அனைத்து மாவீரர் உறவுகளும் தங்கள் மாவீரர் உறவுகளின் உருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!