சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவம் (TIC) நடாத்தும் உலக மனித உரிமைகள் தினம்-2024 நிகழ்வு நாளை சனிக்கிழமை 14 ஆம் திகதி இலண்டனில் நடைபெறவுள்ளது.
மனிதனின் உரிமைகளை பேணிக்காக்க ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் பிரகடணப்படுத்திய (டிசம்பர் 10) மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இன மக்களிற்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டு தோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் “நமது உரிமை நமது எதிர்காலம் இப்போதே” எனும் கருப்பொருளில் TIC இம்முறை நடாத்தும் மனித உரிமைகள் நிகழ்வு நாளை சனிக்கிழமை Woodbridge High School St Barnabas Road, Woodford Green, Essex IG8 7DQ எனும் முகவரியில் பிற்பகல் 14.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பிரித்தானியாவின் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Hon. Jas Athwal MP கௌரவ விருந்தினராக கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Redbridge நகரின் முன்னாள் மேயரும் சுகாதாரம் மற்றும் சமூக வழக்கறிஞருமான Cllr.Thavathuray Jeyaranjan, இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் பணிப்பாளர் Yvonne Schofield , சர்வதேச அரசியல் பேச்சாளரும் பிரித்தானிய கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பேராசிரியருமான Dr Andy Higginbottom மற்றும் சமூக மானுடவியல் முனைவரும் தமிழ் மற்றும் மானுடவியலில் சிறப்பு பெற்றவருமான Dr.Athithan Jayapalan ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் உலகளாவிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இலங்கை அரசின் சித்திரவதையிலிருந்து தப்பித்து பிரித்தானியாவில் புகழிடம் கோரியள்ள செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக ஆண்டு தோறும்TIC யினால் வழங்கப்படும் மனித உரிமைகள் சிறப்பு விருதினை இம்முறை JTLP இன் தலைவரும் தெற்காசிய முழுவதுக்குமான மோதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முன்னாள் ஆய்வாளருமான Liz Phillipson, தமிழர் உரிமைகளுக்கான பிரதான வழக்கறிஞரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான Viraj Mendis ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளதுடன் TIC யின் முன்னாள் இயக்குனர் மறைந்த வரதகுமார் நினைவு விருது மானுடவியல் மற்றும் வரலாற்று ஆசிரியரும் TIC யின் மூத்த ஆராய்ச்சியாளருமான Subramaniyam Visahan அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தவிர கலைமாமணி பிரேமலாதேவி ரவீந்திரன் அவர்களின் விசேட நடன நிகழ்வும் மெய்வெளி அரங்க குழுவினரின் “மரணத்தை விட கொடியது” எனும் நாடகமும் மேலும் பல கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
இதில் பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்வதுடன் மனித உரிமைக்காக குரல் கொடுக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.