டிலக்ஷன் மனோரஜன்
உலகலாவிய ரீதியில் மாவீரர் தினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரித்தானியாவிலும் (UK) இந்நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் நகரில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்திலலும் பிரித்தானிய மத்திய லண்டனில் உள்ள Excel அரங்கிலும் மாவீரர் நாள் நினைவுகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழீழ நேரம் மாலை 6:05:00 க்கும் பிரித்தானிய நேரப்படி மதியம் 12.35 மணிக்கு விளக்கேற்றலுடன் நினைவேந்தல் ஆரம்பமானது. நிகழ்வில் மாவீரர்களின் பெருமை சொல்லும் தாயகப் பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் உரைகள் என்பன உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.