
பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் சிறிலங்காவில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை நினைவுகூருவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டும் மனித உரிமைகள் தின நிகழ்வு, அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்றது.
இந்நிலையிலேயே மேற்படி நிகழ்வில் இலங்கையில் யுத்தத்தின் போது இறந்தவர்களின் பெயர் விபரங்கள் செயற்பாட்டாளர்களினால் கணக்கெடுக்கப்பட்டன. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையிலும் இன்றுவரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ பட்டியலோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (HRDAG) ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.
இதன் மூலம் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை ஆவணப்படுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதியை சட்டரீதியாக நிரூபிக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நிகழ்வில் இறந்தவர்களை கணக்கெடுக்கு பணியினை செயற்பாட்டாளர்களான ஜயகீசன் விஜயகுமார் மற்றும் கணேசமூர்த்தி விது~ன் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.
