TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வின் திறம்பட செயலாற்றிய அதன் செயற்பாட்டாளர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ‘உலக மனித உரிமைகள் தினம் 2024’ நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் இலண்டனில் நடைபெற்றது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அவற்றினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் இந்த மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான மேற்படி நிகழ்வினை சிறப்பாக முன்னெடுப்பதற்கு பல வழிகளில் செயலாற்றிய TIC யின் செயற்பாட்டாளர்கள் நிகழ்வின் இறுதியில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அந்தவகையில் செயற்பாட்டாளரான அழகரத்தினம் நிரோஜன் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் தலைவர் முனைவர் சொக்கலிங்கம் யோகலிங்கத்திடமிருந்து பாராட்டு சான்றிதழினை பெற்றுக்கொண்டார்.


