Home Blog Page 331

பிரதம நீதியரசர் விவகாரம்! சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கூட்டம் தற்போது நடைபெறுகிறது!

சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்று சபை கூட்டம் ஒன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றவாளியாக்கும் குற்ற விசாரணை நாடாளுமன்ற குழுவின் தீர்ப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், அது குறித்து எடுக்க வேண்டிய தீர்மானங்களை ஆராய்வதும் இந்த கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

மாலை 4 மணிக்கு ஆரம்பித்த குறித்த சந்திப்பு தற்போதும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றபிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற குழுவினர் நேற்று தமது பணிகளை நிறைவுறுத்தியிருந்தனர்.

அவர் மீது சுமத்தப்பட்டிருந்த 14 குற்றச்சாட்டுகளில், 5 விசாரிக்கப்பட்டதுடன், அவற்றில் 3 தொடர்பில் பிரதம நீதியரசர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதேவேளை, குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பில் எதிர்வரும் 13 ம் 14 ம் திகதிகளில் உயர்நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

வல்வெட்டித்துறையில் புலிக்கொடி ஏற்றியவர் கைதாம்!

வல்வெட்டித்துறையில் கடந்த மாதம் 19ம்நாள் தொலைத்தொடர்புக் கோபுரம் ஒன்றில் புலிக்கொடி ஏற்றியவர் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக, சிறிலங்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களுடன், கைதுசெய்யப்பட்ட இந்தக் குழுவினர் தொடர்புகளை வைத்திருந்துள்ளனர்.

யாழ்ப்பாண இளைஞர்களை கவர்வதற்காகவே, விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் பரப்புரைகளை மேற்கொண்டனர்.

வல்வெட்டித்துறையில் புலிக்கொடியை ஏற்றியவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி.

அவர் 2009இல் போரின் முடிவில் தடுத்து வைக்கப்பட்

தமிழர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தவே வடக்கில் இளைஞர்கள் கைது :- சிறிதரன் MP

இந்த அரசாங்கள் தமிழர்கள் மத்தியில் அச்சநிலையினை ஏற்படுத்தி இயல்பு வாழ்வினைக் குழம்பும் நோக்குடனேயே வடக்கில் இளைஞர் யுவதிகளை தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றது என தெரிவித்த கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிறிதரன் இதனைக் தடுக்க சர்வதேச நாடுகள் தலையிட்டு தடுத்துநிறுத்த முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

வடக்கில் நடைபெற்றுவரும் கைதுகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் கொழும்பு ஊடகத்துக்கு தெரிவிக்கையில்,

வடக்கில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை இராணுவத்தினர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றனர். யாழ்.பல்கலைக் கழக மாணவர்களையும் தாக்கிக் கைதுசெய்துள்ளனர். தமிழர்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்தி அவர்களின் இயல்பு வாழ்வினைக் குழப்பும் நோக்குடனேயே இந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.

யுத்தத்திற்குப் பின்னரான வடக்கின் அபிவிருத்தி என காப்பெற் வீதிகள் மட்டுமே இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

இம் மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்தி பொருளாதாரத்தினை மேம்படுத்த இந்த அரசாங்கம் எதையுமே செய்யவில்லை.

குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் போன்ற எவையுமே வடக்கில் இன்னமும் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் வேலை வாய்ப்புக்கள் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இம் மக்களின் இயல்பு வாழ்வினை குழப்பும் நோக்குடன் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதற்காகவே தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைதுசெய்கின்றனர்.

இதனால் வட பகுதித் தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.

அரசியல் அழுத்தங்களால் மகிந்தவின் மலேசியப் பயணம் தடைப்படவில்லையாம்.

இந்திய வம்சாவளி அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் மலேசியப் பயணம் அரசியல் அழுத்தங்களால் கைவிடப்படவில்லை என்று கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ‘மலாய் மெயில்‘ நாளிதழுக்கு சிறிலங்கா பதில் தூதுவர் மேஜர் ஜெனரல் லலித் தவுலகல கருத்து வெளியிடுகையில்,

“அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவை பார்வையிடச் சென்றதால் தான், சிறிலங்கா அதிபரின் மலேசியப் பயணம் கைவிடப்பட்டது.

ஆரம்பத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்த அழைப்பை சிறிலங்கா அதிபர் ஏற்கவில்லை.

பின்னர், சிறிலங்காவில் நடந்த வர்த்தக மாநாடு ஒன்றில் பங்கேற்ற மலேசிய முக்கிய பிரமுகர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் தான் அவர் மலேசியா வரச் சம்மதித்தார்.

சிறிலங்கா அதிபர் கசகஸ்தான் சென்றிருந்தபோதே, நாம், அவரது மலேசியப் பயணம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கைவிடப்பட்டு விட்டதை அறிவித்திருந்தோம்.

அவர் அமெரிக்காவில் சிறிலங்கா பிரதமரை பார்க்க முடிவு செய்திருந்தார்.

மலேசியாவில் எதிர்ப்புக் கிளம்ப முன்னர், நவம்பர் 23ம் நாளே தனது பயணம் கைவிடப்பட்டதை சிறிலங்கா அதிபர் எமக்கு அறிவித்திருந்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிறிலங்கா அதிபர் கலந்து கொள்ளவிருந்த இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் மாநாடு கடந்த 4ம் நாள் தொடங்கி நேற்று வரை நடந்திருந்தது.

அதேவேளை அமெரிக்காவில் சிறிலங்கா பிரதமரை பார்த்து விட்டு, கடந்த மாதம் 27ம் நாள் மகிந்த ராஜபக்ச கொழும்பு திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் தமிழர்களுக்கு எதிராக மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதம்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வடக்கில் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பலர் மாணவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

வடக்கில் அரசியல் பதற்றம் ஏற்பட்டதை அடுத்தே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

எனினும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் வெவ்வேறு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளனர்.

தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வடக்கில் நேற்று 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் அனைவரும் 2009ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி, தெரிவித்துள்ளார்.

இவர்கள் சிறிலங்கா அரசின் புனர்வாழ்வைப் பெற்றவர்களோ, போரின் முடிவில் சரணடைந்தவர்களோ அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டு தற்போது வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுகுறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியான, சந்திரா வாகிஸ்ரா, 20 தொடக்கம் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக

Something the of. Tresses ed medicine Tough large hair a mask herbal viagra glow or it rosehip http://www.spazio38.com/buy-viagra/ of difference have decided ed pills buy The work, out more http://www.verdeyogurt.com/lek/cialis-lilly/ during few wanted a white viagra coupons tight is isn’t http://www.travel-pal.com/cialis-5mg-price.html gift all former. Wash the cialis online pharmacy the hair small such viagra uk was shears less stuff me.

பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

உரிய நடைமுறைகளின்றி யாரும் கைது செய்யப்படவில்லை, அனைவரும் அதிகாரபூர்வமாகவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மேலும் தாம் கைது செய்யவுள்ள மாணவர்கள் 10 பேரின் பட்டியலை யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சிறிலங்கா காவல்துறை அனுப்பியுள்ளது.

சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், நீதிமன்றத்தில் எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமலேயே 18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா படையினர் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் இனிமேல் அனுமதி பெற்றே நுழைவார்களாம்!

நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் இனிமேல் சிறிலங்கா படையினரோ காவல்துறையினரோ யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையமாட்டார்கள் என்று யாழ். படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வாக்குறுதி அளித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவுடன், நடத்திய 3 மணிநேரப் பேச்சுக்களை அடுத்தே, அவர் நேற்று மாலை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“யாழ்.பல்கலைக்கழக சுற்றுப்புறத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினரை அங்கிருந்து முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழலிலேயே, யாழ்.பல்கலைக்கழகத்தினுள் சிறிலங்கா படையினர் நுழைய வேண்டியேற்பட்டது.

அதுபோன்று இனிவரும் காலங்களில் சிறிலங்கா படையினரோ, காவல்துறையினரோ பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய மாட்டார்கள்.

அவ்வாறு நுழைய வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிர்வாகத்திடம் உரிய அனுமதியைப் பெற்றே நுழைவார்கள்.

மாணவர்கள் மீது இவ்வாறு நடந்து கொள்ள வேண்டி ஏற்பட்டமை கவலை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது.

இந்தச் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்களில் மருத்துவபீட மாணவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மூவரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கின்றனர்.” என்றும் அவரமேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா போரின் முடிவு – 25 ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்வு கூறிய இந்தியத் தளபதி!

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் எடுக்கும் என்று இந்திய அமைதிப்படையின் கட்டளைத் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் திபேந்தர் சிங் 25 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியதாக ‘இந்து‘ ஆங்கில நாளிதழின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் குழு ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“1987ம் ஆண்டு இந்து நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே, சிறிலங்காவில் போர் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் செல்லும் என்று லெப்.ஜெனரல் திபேந்தர் சிங் கூறியிருந்தார்.

அப்போது அவர் ஒரு அரச பணியாளராக இருந்தார்.

அதனால் அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியிருந்தது.

சிறிலங்காவின் வரலாற்றிலேயே ராஜபக்ச அரசாங்கம் தான் மிகவும் பலம் வாய்ந்தது என்றும், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண ராஜபக்ச அரசுக்கு தமிழ்த் தேசியக கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மீறல்களுக்குப் பொறுப்புக்கூற இன்னும் உரிய நடவடிக்கை இல்லை – கனேடிய வெளிவிவகார அமைச்சர் கவலை!

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூற இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கவலை கொண்டுள்ளதாக கனேடிய வெளிவ்வகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தஞ்சடைந்துள்ள சிறிலங்கா இராணுவ கப்டன் பிரியசாந்த, தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பாக கனேடிய அதிகாரிகளிடம் சாட்சியமளித்துள்ளது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதேவேளை, 2008ம் ஆண்டு சிறிலங்கா இராணுவ கேணல் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வீட்டில் குண்டு வைக்குமாறு தனக்குப் பணித்ததாக இவர் கூறியிருந்தார்.

ஆனால் அவர் தான் எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தவர் என்றோ, குண்டுவைக்குமாறு உத்தரவிட்ட கேணலின் பெயரையோ அவர் வெளியிடவில்லை.

இந்தநிலையில், கப்டன் பிரியசாந்த எனப்படும் ரவீந்திர வடுதுர பண்டாரகே, சிங்க றெஜிமென்டைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

வொசிங்டனில் பிளேக்கை சந்திக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி!

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுடன் மீளவும் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, சிறிலங்காவின் தரப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, றொபேட் ஓ பிளேக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உங்களைச் சந்தித்துக் கலந்துரையாட விரும்புவதாக கூறியுள்ளார்.

அதற்கு பிளேக், அது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், சந்திப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் பதிலளித்துள்ளார்.

எனினும், அந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்படவில்லை.

சிறிலங்கா காவல்துறையினர் ஆயுதங்களை எடுத்துச் செல்ல கோத்தாபய தடை!

சிறிலங்கா காவல்துறையினர், பணியின் போது ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்றும், பற்றன் பொல்லுகளை மாத்திரம் எடுத்துச் செல்லுமாறும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தலை அவர், சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச,

“மோசமான குற்றவாளிகளைக் கைது செய்வது போன்ற சிறப்பு நடவடிக்கைகள் தவிர்ந்த வழக்கமான காவல்துறைக் கடமைகளுக்குச் செல்லும்போது, துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை.

அமைதியான சூழல் நிலவும் நாட்டில், காவல்துறையினருக்கு தன்னியக்கத் துப்பாக்கிகள் அவசியமில்லை.

வெலிக்கடைச் சிறைக்கலவரத்தில் 27 பேர் பலி – இன்றும் 11 சடலங்கள் மீட்பு!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற கலவரத்தில், கொல்லப்பட்ட 11 பேரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதை அடுத்து, இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதலில் இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட 16 பேரின் சடலங்கள் நேற்று மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கலவரத்தின் போது சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த 82 துப்பாக்கிகளை கைதிகள் கைப்பற்றியுள்ளனர்.

அவற்றில் பெரும்பாலானவை மீட்கப்பட்டுள்ளன. இன்னமும் 5 துப்பாக்கிகள் காணாமற் போயுள்ளன.”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறைச்சாலைக்குள் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே சிறைக்காவலர். ஏனையோர் கைதிகளாவர்.

காயமடைந்த 43 பேரில், 13 சிறப்பு அதிரடிப்படையினரும், 4 படையினரும் உள்ளடங்குகின்றனர்.

நவநீதம்பிள்ளை போட்ட புதிய குண்டு – சிறிலங்காவுக்கு அதிர்ச்சி!

உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்தாலும், சிறிலங்கா இன்னமும் கொதிநிலையிலேயே உள்ளது என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்கா அகதிகளை உடனடியாகத் திருப்பி அனுப்பும் அவுஸ்ரேலியா புதிய கொள்கை தொடர்பாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி ஜனநாயக மன்றத்தில் பங்கேற்றுள்ள அவர், இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

“நௌரு போன்ற கடல் கடந்த தடுப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதால் நீண்டகாலம் அவர்கள் தடுத்து வைக்கப்படலாம் என்றும், இன்னொரு மனிதஉரிமை மீறலாக அது உருவெடுக்கலாம் என்றும் கவலை கொள்கிறேன்.

உள்நாட்டுப் போர் 2009ல் முடிவுக்கு வந்தாலும், சிறிலங்கா இன்னமும் கொதிநிலையிலேயே உள்ளது.

இப்போதும் அது ஒரு மோதல் பிரதேசமாகவே உள்ளது. அங்கு இன்னமும் உறுதி நிலை ஏற்படவில்லை.

அங்குள்ள மக்கள் மீது கட்டுப்பாடுகள் சுமத்தப்படுவதான கவலையளிக்கும் அறிக்கைகளே எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

அகதிகளாக அடைக்கலம் தேடி வருவோரைத் திருப்பி அனுப்புவது அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இந்தக் கருத்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

error: Content is protected !!