SHARE
image_pdfPRINT

சிறிலங்கா காவல்துறையினர், பணியின் போது ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்றும், பற்றன் பொல்லுகளை மாத்திரம் எடுத்துச் செல்லுமாறும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தலை அவர், சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச,

“மோசமான குற்றவாளிகளைக் கைது செய்வது போன்ற சிறப்பு நடவடிக்கைகள் தவிர்ந்த வழக்கமான காவல்துறைக் கடமைகளுக்குச் செல்லும்போது, துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை.

அமைதியான சூழல் நிலவும் நாட்டில், காவல்துறையினருக்கு தன்னியக்கத் துப்பாக்கிகள் அவசியமில்லை.