Home Blog Page 321

இலங்கையில் திடீரென கோடீஸ்வரர்களாகிய 152 பேருக்கு எதிராக வழக்கு

image_pdfPRINT

திடீரென இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்களாகிய ஆனால் அவ்வருமானத்துக்கான சரியாக வழியைக் குறிப்பிடத் தவறிய 152 பேருக்கு எதிரான இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்ய நடவ டிக்கை எடுத்துள்ளது.

அரசியல்வாதிகள், நீதிபதிகள், பாடசாலை அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச வைத்தியர்கள், கிராம சேவையாளர்கள், அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இவ்வாறு வருமானத்துக்கு மேலதிக மாக பணம் சம்பாதித்தமை குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் இலஞ்சம் பெற்றோ அல்லது ஊழல் மூலமாகவோ அவற்றைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழு அவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு களை விசாரணை செய்து அந்த நபர்களின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து குறிப்பிட்ட சொத்துகள் தொடர்பான தகவல்களைக் கண்டுபி டித்து இறுதியில் வருமானம் பெற்ற விதம் குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட வர்களின் சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளது.

ஆனால் இலஞ்ச ஆணைக்குழுவி னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத் திலான விடயங்களை அவர்கள் முன்வைக்கவில்லை. ஆகவே அவர் களுக்கு எதிராக இலஞ்சம் பெற் றுக்கொண்டதாக முடிவு செய்து வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“நீங்கள் தொடர்ச்சியாக இவ்வாறு நடந்துகொண்டால் கட்டாயம் தமிழீழம் மலரும்“

image_pdfPRINT

மஹிந்த ராஜபக்சவை நாடாளுமன்றில் எச்சரித்தார் இரா.சம்பந்தன்

ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒன்றிணைந்த அதிகார அதிகாரப்பகிர்வையே நாம் கோருகின்றோம். தனி ஈழக்கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போது அரசியல் சூழல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் விசேட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மகிந்தராஜபக்ஷவும் அவரது கட்சியினரும் மிகவும் கீழ்த்தரமான பிரசாரத்தை முன்வைத்தனர். நீங்கள் அரசாங்கத்திற்கும் ஐ.தே.க.வுக்கும் அளிக்கும் வாக்குகள் ஈழம் உருவாகவே வழிவகுக்கும் என அப்பாவி சிங்கள மக்களை வழிநடத்தியிருந்தார்கள்.

இவ்வாறு தொடர்ந்து சாதாரண மக்களை ஏமாற்றி தவறாக வழிநடத்தினால் தமிழீழம் மலர்வதை உங்களால் தடுக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

கச்சதீவு வழிபாட்டுக்குள்ளும் புகுந்த சிங்களம்

image_pdfPRINT

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி இம்முறை சிங்கள மொழியிலும் இடம்பெறவுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை- இந்திய யாத்திரிகள் ஒன்றுகூடுகின்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் இம்முறை இலங்கையிலிருந்து 8,000 பேரும் இந்தியாவிலிருந்து 5,000 பேரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, இம்முறை முதன் முறையாக சிங்கள மொழியிலும் வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க சிங்கள மொழியிலான ஆராதனைகளை நடத்தவுள்ளார்.

கச்சதீவு திருவிழாவில் சிங்கள மொழி பேசும் மக்களையும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையிலேயே சிங்கள மொழியிலும் அரதானைகள் நடத்த முடிவு செய்துள்ளதாக சம்பந்தபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரசாங்கம் கவிழ்வதை சர்வதேசம் விரும்பவில்லை : சி.வி.

image_pdfPRINT

இந்த அரசாங்கம் 2020 வரை செல்லும் என தான் நம்புவதாக வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலினையடித்து தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை குறித்து கருத்து தெரிவித்த போதே, நாட்டில் ஆட்சி கவிழ்வதை சர்வதேசம் விரும்பவில்லை எனவும் அதனால் 2020 வரை இந்த அரசாங்கம் தொடர்ந்து கொண்டு செல்லப்படும் என தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் காணமல் போனோர் குறித்து கடந்த 3 வருடத்தில் 62 முறைப்பாடுகள்

image_pdfPRINT

வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் 62 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை அணைக்குழுவின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்படுள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தொடர் கவனம் எடுத்து வருகின்றது.

இந்நிலையில் மேற்படி மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய புள்ளி விபரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வடமாகாணத்தில் காணாமல் போனோர் பற்றி 62 முறைப்பாடுகள் பதியப்படுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

2015 ஆம் ஆண்டு 22 முறைப்பாடுகளை 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தலா 20 முறைப்பாடுகளும் பதியப்படுள்ளன.

அதேவேளை, மனித உரிமை மீறல்கள் குறித்து வடக்கு மாகாணத்தில் கடந்த 3 வருடங்களில் 1944 முறைப்பாடுகள் உரிய முறையில் பதிவு செயப்பட்டு மனித உரிமை ஆணைக்குழுவினால் ஏற்றுகொள்ளப்டுள்ளது.

இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ். பிராந்திய அலுவலகத்தில் 315 முறைப்பாடுகளும் கிளிநொச்சி உப அலுவலகத்தில் 93 முறைப்பாடுகளும் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 284 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு யாழ். பிராந்திய அலுவலகத்தில் 219 முறைப்பாடுகளும் கிளிநொச்சி உப அலுவலகத்தில் 129 முறைப்பாடுகளும் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 315 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

2017 செப்டெம்பர் மாதம் வரை யாழ். பிராந்திய அலுவலகத்தில் 188 முறைப்பாடுகளும் கிளிநொச்சி உப அலுவலகத்தில் 73 முறைப்பாடுகளும் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 256 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இலங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்த பிரித்தானியாவுக்கு தொடரும் அழுத்தங்கள்

image_pdfPRINT

இலங்கையில் மனித உரிமை மீறல்களும் தமிழ் மக்கள் மீதான கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்கு முறைக்கும் காரணியான ஆயத காலாசாரத்தை தடுத்து நிறுத்த, பிரித்தானியா இலங்கையுடனான
ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

பிரித்ததனியாவின் வெவினி (waveny) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பீற்றர் அல்டாஸை நேற்று முன்தினம் சந்தித்த பரஞ்சோதி ரமேஷ்கண்ணா தலமையிலான நிசாந்தன், சந்தோஷ் மற்றும் தமிழ் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர் நகுலேஷ்வரன் சிவதீபன் ஆகிய குழுவினர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த நூற்றாண்டில் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களையும், இனப்படுகொலையையும் நிகழ்த்திய இலங்கைக்கு 2013-14 ஆண்டு காலப்பகுதியில் மட்டும் சுமார் 61 மில்லியன் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா இலங்கைக்கு விற்பனை விற்பனை செய்துள்ளது.

இது இலங்கையில் மேலும் மனித உரிமை மீறல்களும் இரும்புக்கரம் ஓங்கவுமே வழிவகுக்கும். இது யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த சந்திப்பின்போது, ரமேஷ்கண்ணா தலமையிலான குழுவினர் மேற்படி விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்தியதுடன் இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் காணாமல் ஆக்கப்படுத்தல் போன்ற விடயங்களையும் அவரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இவைதவிர, அண்மையில் பிரித்தானியாவில் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இங்கை தூதரக பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ போர் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை எடுத்துக்கூறி அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர பாதுகாப்பை நீக்கி அவரை கைது செய்ய வேண்டும் எனவும் மேற்படி குழுவினர் வலியுறுத்தினர்.

காணாமல் போன காதல்

image_pdfPRINT

காதலர் தினத்தில் தமது அன்புக்குரிய உறவுகளை தேடி தலைநகர் கொழும்பில் ஒன்று கூடிய உறவுகள் கண்ணீர் மல்க தீர்வை வேண்டிநின்றனர்.

காதலர் தினமான நேற்று அன்புக்குரியவர்களுடன் காதலை அனைவரும் பகிர்ந்த சந்தர்ப்பத்தில், தமது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வித்தியாசமான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

காணாமற்போனோரின் குடும்ப அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, ‘காணாமல் போன காதல்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் போன தமது உறவினர்களின் ஒளிப்படங்களை கைகளில் தாங்கியவாறு உறவினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதோடு, அவற்றை பிரதிபலிக்கும் உணர்வுபூர்வமான சிற்பங்களும்  இந்நிகழ்வில் வைக்கப்பட்டிருந்தன.

யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் நிறைவடைந்த போதும், காணாமல் போனோர் பிரச்சினைக்கு எவ்வித காத்திரமான நடவடிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அதற்கான போதிய நகர்வுகள் முன்னெடுக்கப்படவில்லை என்பது காணாமல் போனோரின் உறவினர்களது ஆதங்கமாக உள்ளது.

காணாமல் ஆக்கப்பட தமது உறவினர்களுக்காக வடக்கு கிழக்கில் சுமார் ஒரு வருடத்தைக் கடந்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  

மக்கள் தமது உரிமைக்காக போராடலாம் கோப்பாப்புலவு மக்களிற்கு நீதிமன்று அனுமதி

image_pdfPRINT

தமது சொந்த காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கோப்பாப்புலவு மக்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் அனுமதியளித்துள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று குழப்பத்தில் ஈடுபட்டதாக ஐவருக்கு எதிராக பொலிசார் தொடுத்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த அனுமதியை அளித்தார்.

கோப்பாப்புலவுப் பகுதியில் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பகுதியளவிலான சில காணிகள் விடுவிக்கபட்ட நிலையிலும் முழுமையா விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த மக்கள் தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்த மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு செல்ல முற்பட்டவேளை பொலிசார் வழி மறித்தமையினால் குழப்பநிலை தோன்றியிருந்தது. இதனியடுத்து குழப்பத்தில் ஈடுபட்டதாக ஐவருக்கு எதிராக பொலிசார் முல்லை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அந்தவகையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் வரா வகையில் மக்கள் தமது உரிமைக்காக போராடலாம் என தெரிவித்த நீதவான் போராட்டத்தை தொடர அனுமதியளித்தார்.

இங்கையில் யுத்த குற்றம் தொடர்பில் ஆராய்ந்த பாகிஸ்தானின் இரும்பு சீமாட்டி காலமானார்

image_pdfPRINT

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் ஆய்வுகள் நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம் வகித்தவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சடத்தரணியுமான பாகிஸ்தானின் இரும்புச் சீமாட்டி என்றழைகப்படும் அஸ்மா ஜஹாங்கிர் தனது 66 ஆவது வயதில் காலமானார்.

ஐ.நா.வின் முன்னால் விசேட அறிக்கையாளராக செயற்பட்டு வந்த இவர், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில்  உள்ளக விசாரணை நடத்த ஐ.நா.மனித உரிமை பேரவையின் முன்னால் ஆணையாளர் நவநீதம் பிள்ளையால்    நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவில் (25/06/2014) இடம்பெற்றிருந்தார்.

இவர்களது அறிக்கை 2015 இல் வெளியாகியிருந்தமையும் அதன் மூலம் பல உண்மைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இவரது இழப்பு குறித்து உலகெங்குமுள்ள மனித உரிமைகள் செயற்ட்டாபாளர்கள் பிரமுகர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற மலாலா யூசப்சையி “ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீட்பாளரான அஸ்மா ஜஹாங்கிரை நாங்கள் இழந்துவிட்டோம்.
அவள் இப்போது எங்களுடன் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காக நாம் தொடர்ந்து போராடுவதே நாம் அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக தொடரும் முறைப்பாடுகள்

image_pdfPRINT

பிரிதானியாவில் கொலைமிரட்டல் விடுத்த இரணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ விடயம் குறித்து வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் தாம் விசாரணை மேற்கொண்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஹெய்டி அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

தனது தொகுதியான லியூசியம் வாழ் தமிழ் இளைஞன் சுப்பிரமணியம் சுரேஸின் முறைப்பாட்டு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு அளித்துள்ள பதிலினிலேயே இதனை அவர் குறிப்பிடுள்ளார்.

அதேவேளை குறிப்பிட்ட வீடியோ காட்சி தொடர்பிலும் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடந்த சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் இலங்கை உயர்ஸ்தானிகத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது உயர்ஸ்தானிக பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ தமிழர்களைப்பார்த்து கொலைமிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து இராணுவ அதிகாரியால் அச்சுறுத்தலுக்குள்ளானவர்கள் அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடுகள் செய்ததுடன் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் குறித்த விடயம் தொடர்பில நடவடிக்கை எடுக்குமாறு கேரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

உலக அரங்கி தமிழுக்கு மற்றுமொரு அங்கீகாராம்

image_pdfPRINT

Google நிறுவனத்தின் Adsense பகுதியில் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலகத்தையே இன்று தன் கைகளுக்குள் வைத்திருக்கும் இம் மிகப்பெரிய நிறுவனமானது கடந்த 10 வருடங்களாக google adsense இல் தமிழ் மொழியை புறக்கணிக்கத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தமிழ் மொழியை
அங்கீகரித்துள்ளது.

உலக அரங்கில் தமிழுக்கு மற்றுமொரு பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளமை உலகத்தமிழர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது.

கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் இணைந்து பயணிக்க தயார்- கஜேந்திரகுமார்

image_pdfPRINT

கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித்த தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை நிரூபித்துள்ள நிலையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவையே. அந்த விமர்சனங்கள் சில கடுமையானவையாகியிருக்கலம். ஒற்ரியாடிசிக்கு இணங்கி பௌத்தத்தின் முன்னுரிமைக்கு இணங்கியதாலே அவ்வாறு விமர்சனங்கள் எழுந்தான.

நாம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் எதிரானவர்கள் இல்லை. தமிழினம் நடுத்தெருவில் நிற்க தலைமைத்துவத்தில் இருந்தவர்கள் நீக்கப்பட்டு உள்ளூராட்சி சபையை நடத்த கறைபடியா கைளுடனான நல்ல தலைமைத்துவம் அமைந்தால் ஒருமித்து பயணிப்போம்.

அதேவேளை தமிழ் தேசியத்தை காப்பாற்ற பாத்திக்கப்பட்ட நிலப்பரப்பை மீள கட்டியெழுப்ப உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டியவர்கள் முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!