இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் ஆய்வுகள் நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம் வகித்தவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சடத்தரணியுமான பாகிஸ்தானின் இரும்புச் சீமாட்டி என்றழைகப்படும் அஸ்மா ஜஹாங்கிர் தனது 66 ஆவது வயதில் காலமானார்.
ஐ.நா.வின் முன்னால் விசேட அறிக்கையாளராக செயற்பட்டு வந்த இவர், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்த ஐ.நா.மனித உரிமை பேரவையின் முன்னால் ஆணையாளர் நவநீதம் பிள்ளையால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவில் (25/06/2014) இடம்பெற்றிருந்தார்.
இவர்களது அறிக்கை 2015 இல் வெளியாகியிருந்தமையும் அதன் மூலம் பல உண்மைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இவரது இழப்பு குறித்து உலகெங்குமுள்ள மனித உரிமைகள் செயற்ட்டாபாளர்கள் பிரமுகர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற மலாலா யூசப்சையி “ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீட்பாளரான அஸ்மா ஜஹாங்கிரை நாங்கள் இழந்துவிட்டோம்.
அவள் இப்போது எங்களுடன் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காக நாம் தொடர்ந்து போராடுவதே நாம் அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலி என தெரிவித்துள்ளார்.