SHARE

இலங்கையில் மனித உரிமை மீறல்களும் தமிழ் மக்கள் மீதான கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்கு முறைக்கும் காரணியான ஆயத காலாசாரத்தை தடுத்து நிறுத்த, பிரித்தானியா இலங்கையுடனான
ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

பிரித்ததனியாவின் வெவினி (waveny) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பீற்றர் அல்டாஸை நேற்று முன்தினம் சந்தித்த பரஞ்சோதி ரமேஷ்கண்ணா தலமையிலான நிசாந்தன், சந்தோஷ் மற்றும் தமிழ் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர் நகுலேஷ்வரன் சிவதீபன் ஆகிய குழுவினர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த நூற்றாண்டில் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களையும், இனப்படுகொலையையும் நிகழ்த்திய இலங்கைக்கு 2013-14 ஆண்டு காலப்பகுதியில் மட்டும் சுமார் 61 மில்லியன் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா இலங்கைக்கு விற்பனை விற்பனை செய்துள்ளது.

இது இலங்கையில் மேலும் மனித உரிமை மீறல்களும் இரும்புக்கரம் ஓங்கவுமே வழிவகுக்கும். இது யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த சந்திப்பின்போது, ரமேஷ்கண்ணா தலமையிலான குழுவினர் மேற்படி விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்தியதுடன் இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் காணாமல் ஆக்கப்படுத்தல் போன்ற விடயங்களையும் அவரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இவைதவிர, அண்மையில் பிரித்தானியாவில் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இங்கை தூதரக பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ போர் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை எடுத்துக்கூறி அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர பாதுகாப்பை நீக்கி அவரை கைது செய்ய வேண்டும் எனவும் மேற்படி குழுவினர் வலியுறுத்தினர்.

Print Friendly, PDF & Email