Home Blog Page 316

யாழ் மாநகர சபையின் புதிய மேயராக த.தே.கூ இன் ஆர்னோல்ட் தெரிவு

image_pdfPRINT

யாழ் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாநகர சபையின் கன்னி அமர்வு இன்று (23) காலை 9 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது யாழ் மாநகர சபையின் புதிய மேயரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

முதல் கட்ட வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்னோல்ட் 18 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் றெமிடீயஸ் ஆகியோர் தலா 13 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் றெமிடீயஸிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்னோல்டிற்கும் இடையில் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் இறுதிகட்ட வாக்கெடுப்பில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் றெமிடீயஸ் விலகிக்கொண்ட நிலையில், யாழ் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தெஹிவளை – கல்கிஸை நகர சபையின் புதிய மேயராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நவலகே ஸ்டேன்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் நவலகே ஸ்டேன்லி 23 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், மேயர் பதவிக்கு போட்டியிட்ட சுனேத்ரா ரணசிங்க 21 வாக்குகளையும் பெற்றனர்.

பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருடன் இலங்கை இனப்படுகொலை தொடர்பான கலந்துரையாடல் 

image_pdfPRINT

பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவர் Paul Sacully MP யை சந்தித்த புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் இனப்படுகொலை தொடர்பிலான இலங்கைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர் இளவரசன் ஜெயபாலன் தலைமையில் நேற்றய தினம் (24.03.2018) நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பிலும் தற்போதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன அழிப்பு மற்றும் அவற்றுக்கு எதிரான நட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்ட்டது.

முக்கியத்துவம் வாய்ந்த இக்கலந்துரையாடலின் குழுவில் திலக் ஆண்ரியுஸ், கஜானன் ஞானசேகரம், கோபாலகிஷ்ணன் குகச்செல்வம், கோவிந்தப்பிள்ளை லிங்கேஸ்பரன், இகிஸ்ணமூர்த்தி உமாராஜ், பாலசிங்கம் குமரேசன், சிவஞானலிங்கம் சுபாஷ்கர், கணேசபிள்ளை ஜதுர்த்தன், வரதராஜா மோகனரூபன், கௌசிகன் ஸ்ரீகுமார், பிரான்சிஸ் வசந்தராஜன், அஷாந்தன் தியாகராஜா, இளையதம்பி கலைவாணன், புஸ்பாதரன் புத்திரசிகாமணி இவசந்தகுமாரி சந்திரபாலன் ஆகியோர் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் மரணித்த இலங்கையரின் ஆவணங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கலாம்; வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

image_pdfPRINT

வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதற்காக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு புதிய முறைமையொன்றை அறிமுகம் செய்துள்ளது.

அந்தவகையில் வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்களின் உடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கோ அல்லது இறுதிக்கிரியைகள் தொடர்பிலான அடையாள ஆவணங்கள், மரண சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை உங்களிற்கு அருகிலிலுள்ள பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கலாம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரையில் மரணித்த உறவினரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு அல்லது வெளிநாட்டில் அடக்கம் செய்வதற்கு தேவையான ஆவணங்களை வெளிநாடு அலுவல்கள் அமைச்சிலே சமர்ப்பிக்க வேண்டியநிலை இருந்தது.

அந்தவகையில் குறித்த விடயத்திற்காக தூர பிரதேசங்களில் உள்ளவர்கள் நீண்ட தூர பயணதை மேற்கொண்டே கொழும்பிலுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை காணப்பட்டது.

இந்நிலையிலேயே இவற்றினை இலகுபடுத்தும் நோக்கிலேயே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

பணம் கொடுத்து வாங்கிவிட்ட பின்னர் அவர்களின் விரும்பம் போல நடப்பதே நல்லிணக்கம்; சி.வி. விக்னேஷ்வரன்

image_pdfPRINT

தமிழ் மக்களின் அரசியல் தேவைகளைப் பொருட்படுத்தாது பெரும்பான்மை அரசாங்கங்கள் முன்வைக்கும் கருத்துக்களே பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என மத்திய அரசாங்கம் தெரிவிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்தில் பொருளாதார விருத்தி ஏற்படும் பட்சத்தில், அது நல்லிணக்கத்திற்கு வித்திடும் என்ற சிலரின் கூற்றுக்கு பதில் வழங்கும் வகையில், வட மாகாண முதல்வரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்திற்கு தேவையான பணத்தை வழங்குகின்றோம், பொருளாதார விருத்தியை ஏற்படுத்துவோம், அதனூடாக நல்லிணக்கம் பிறக்கும் என சிலர் கூறுகின்றனர். இவற்றை வழங்கும் போது, தனியுருத்துக்களைக் கேட்க வேண்டாம் என கூறவது தான் மத்திய அரசாங்கத்தின் கருத்து.

பணம் கொடுத்து வாங்கிவிட்ட பின்னர் அவர்களின் விரும்பம் போல நடப்பதே நல்லிணக்கம் என அவர்கள் நினைக்கிறார்கள்.

வறுமையில் வாடும் தமிழ் மக்களுக்கு பொருளாதார ஏற்றம் முக்கியமானது.  தமது தேவையின் நிமித்தம் இவ்வாறான பசப்பு வார்த்தைகளுக்குள் மக்கள் வீழ்கிறார்கள். எனினும், முன்னோக்கிய சிந்தனை அவசியம்.

பொருளாதார விருத்தியைப் கண்டு ஏமாறும் பட்சத்தில் ,வடக்கை அடிபணியச் செய்து எமது வளங்களை சூறையாடி, சிங்கள குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தி, இறுதியில் அரசியல் உரிமைகளைத் தராது விடுவார்கள்.

எம்மை கண்ணைக்கட்டி காட்டுக்குள் கொண்டு போக இடம் வழங்க முடியாது, மத்தியின் செயற்பாடுகளில் மாகாணத்தின் பங்கும் காணப்பட வேண்டும் என்பதை தொடர்ந்தும் நாம் வலியுறுத்தி வருகிறோம்.

பொருளாதார விருத்தியைத் தந்து எமது உரிமைகளையும் உரித்துக்களையும் தராது விடுவது, எம்மை பணத்திற்கு வாங்கும் செயற்பாடு. பணம் வாங்கிய பின்னர் வாய் திறக்க முடியாது.

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவத்தினரை வடக்கில் நிலைபெறச்செய்து, அனைத்து நிர்வாக, பொருளாதார, அரசியல் உரித்துக்களையும் மத்திய அரசாங்கம் தம் கையில் வைத்துக்கொண்டு பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் பற்றிப் பேசுவது தொடர்ந்தும் எம்மை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் செயற்பாடு.

எனவே பைகளை நிரப்பிக்கொண்டு எம்மவர்கள் போய்விடுவார்கள் என்பதற்காகவே, அரசியல் தீர்வு முதலில் வரவேண்டும் என தாம் ஆசைப்படுவதாகவும் வட மாகாண முதலமைச்சர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் இளைஞனை காணவில்லை

image_pdfPRINT

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் காணமல்போயுள்ளார். விதுஷன் குமார் சிவபாலன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு காணமால் போயுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை தனியார் வகுப்பொன்றிற்காகா சென்றிருந்தவர் இதுவரையில் வீடுதிரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த முறைப்பாடு ஒன்றும் மறுநாள் (21)இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல் : 2 பொலிஸார் பலி ; துப்பாக்கி முனையில் பொதுமக்கள் சிறைப்பிடிப்பு

image_pdfPRINT

பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள பல்பொருள் நிலையமொன்றில் ஆயுதமேந்திய இனந்தெரியாதோர் துப்பாக்கி முனையில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள் ளன.

சற்று முன்னர் நடைபெற்ற இச் சம்பவத்தில் ஆயுததாரிகள் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடிப்பதற்கு முன்னர் மேற்கொண்ட துப்பாகிப் பிரயோகத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை பணயக்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியா கடலூர் மாவட்டத்தில் மீட்பு; மீனவர் தொடர்பில் தகவல் இல்லை

image_pdfPRINT

கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தின் கடலில் கரையொதுங்கியுள்ளதாக அறியமுடிகிறது.

கடந்த 12ந் தேதி காலை முல்லைத்தீவிலிருந்து மீன்பிடிக்க சென்று, கடல் சீற்றதால் காணமல் போன மில்ராஜ்,இமானுவேல், மிதுரதன் ஆகியோர் சென்ற மீன்பிடி பைபர் படகே இவ்வாறு கரை ஒதுக்கியுள்ளது.

ஆனால் படகில் மீனவர்களோ அல்லது மீன் பிடி சாதனங்கள் எதுவும் காணப்படவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சிலாபத்தினை சேர்ந்த 51 அகவையுடைய மில்ராஜ் மிரண்டா, 48 அகவையுடைய இமானுவேல் மிரண்டா,24 அகவையுடைய மிதுறதன் மிரண்டா ஒரோ குடும்பத்தினை சேர்ந்த தந்தை மகன் மற்றும் தம்பி ஆகிய மூவரும் ஒரு படகில் தொழிலிற்காக சென்றுள்ளார்கள்.

இவர்கள் (12) நண்பகல் வேளை கரை திரும்புவதாக தெரிவித்துள்ளபோதும் கரை திரும்பாத நிலையில் விமானப்படையின் தேடுதல் கடற்ப்படையினர் தேடுதல் சுழியோடிகள் கடலில் தேடிதல் நடவடிக்கையில் ஈடுபட்டும் எந்த முடிவும் இல்லாத நிலையில் இன்று படகுமட்டும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதியின் விடுதலைகோரி மாபெரும் கையெழுத்து போராட்டம்

image_pdfPRINT

அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கருணை மனுக்களை அனுப்புவதற்கு வடக்குக் கிழக்கிலுள்ள பொது அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியற் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை கருணை மனுக்கள் அனுப்புவதன் மூலம் விரைவுபடுத்த முடியும் என்ற சட்டவல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழ் இளைஞர் சமூகத்தினால் வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்களிடம் கருணை மனுக்கள் சேகரிக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பும் செயற்திட்டம் இன்று காலை கிளிநொச்சி விஸ்வமடுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்திட்டத்திற்கு தமிழர் தாயகப் பிரதேசங்களான கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்திட்டமானது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கருணை மனுக்கள், பொது அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள் என வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து அமைப்புக்களுக்கும் நேரடியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர், கையெழுத்து இடப்பட்ட பின்னர் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இந்தச் செயற்திட்டத்திற்கு அரசியல் பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரேரணை குறித்த விவாதம் இன்று ஜெனிவாவில்

image_pdfPRINT

(கார்ட்டூன் தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்)

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்து விவாதம் பெரும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் இன்று புதன் கிழமை நடைபெறவுள்ளது.

இதன் போது இலங்கை குறித்த இடைக்கால அறிக்கையை ஐ.நா.ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வெளியிடவுள்ளதுடன் சிறப்புரை ஒன்றையும் ஆற்றவுள்ளார்.

ஏற்கனவே அரச சார்பற்ற பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய ஆணையாளர், பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நாம் நிற்கிறோம் இயன்றவரை நீதியைப் பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம் என உறுதியளித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு குவியும் கருணை மனுக்கள்

image_pdfPRINT

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்)  

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை விடுவிக்கக்கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கருணை மனுக்கள் குவியத்தொடங்கியுள்ளான.

தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்துசெல்லப்பட்ட அரசியல்கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறிய நெகிழவைக்கும் சம்பவத்தினையடுது நாட்டின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் கடந்த வருடம் ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகரன் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

நேற்று முன்தினம் கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள கணவரான ஆனந்த சுதாகரன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.

3 மணித்தியாலங்கள் மட்டுமே மனைவியின் இறுதி நிகழ்வில் கந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு மீண்டும் சுதாகரன் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டார்.

ஆனந்த சுதாகருக்கு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் சென்றுவிட 10 வயது நிரம்பிய மகள் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் நெகிழவைத்தது.

தந்தைக்கு பின்னால் அச்சிறுமி சிறைச்சாலை வாகனத்தில் ஏறும் குறித்த புகைப்படம் அன்றுமுதல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையிலேயே தற்போது தாயை இழந்தும் தந்தையை பிரிந்தும் அனாதரவாக நிற்கும் அக் குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் தந்தையான ஆயுள் தண்டனை கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை, ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி அவருக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

நமது ஈழ நாடு இணையதின் வாசகர்களையும் குறித்த விடயம் தொடர்பில் ஐனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்ப கோரி நிற்கின்றோம். அதிகரிக்கும் கோரிக்கைகள் அச் சிறுவர்களை தந்தையிடத்தில் சேர்த்துவைக்கு என்ற நம்பிகையுடன்.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினரை சந்திக்காது திரும்பிய ஜனாதிபதி

image_pdfPRINT

யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதியின் வருகையினை எதிர்த்தும், காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி பிரதான வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்காது ஜனாதிபதி சென்றமையினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாற்றமடைந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், இன்று (19) காலை 8.30 மணியளவில் இந்த போராட்டம் யாழ்.பிரதான வீதி சென். சார்ள்ஸ் வித்தியாலயத்திற்கு முன்பாக வீதியில் நடைபெற்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, பாதர் பிரான்சிஸ் யோசப் உட்பட பல உறவுகள் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் தமது உறவுகளினால் கையளிக்கப்பட்டிருந்தனர்.
ஆவ்வாறு கையளிக்கப்பட்ட உறவுகள் மற்றும் இராணுவத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, நடைபெற்ற விசாரணைக்குழுக்களின் முடிவு எங்கே? தமிழ் பிரதிநிதிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் கைபொம்மைகளா? இன்னும் கால அவகாசம் தேவையா? 2009-2018 தீர்வு எங்கே? துமிழரை ஏமாற்றாதே! இலங்கை அரசே ஐ.நா சபையை ஏமாற்றாதே? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஜனாதிபதியின் வருகையை எதிர்த்துப் போராட்டம் நடாத்தினார்கள்.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை சந்திக்க முற்பட்ட வேளையில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தடுத்தி நிறுத்தியதுடன், அவர்களை போராட்ட இடத்தில் இருந்து நகரவிடவில்லை.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றஇடத்திற்கு ஜனாதிபதி செல்லாது நிகழ்வில் கலந்துகொண்டார்

தாய் சுடுகாட்டை நோக்கி; மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைசெல்ல முயற்சி

image_pdfPRINT

தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்துசெல்லப்பட்ட அரசியல்கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறிய நெகிழவைக்கும் சம்பவம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கடந்த வருடம் ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகரன் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில் இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள கணவரான ஆனந்த சுதாகரன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.

3 மணித்தியாலங்கள் மட்டுமே மனைவியின் இறுதி நிகழ்வில் கந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சுதாகரன் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய நெகிழவைக்கு சம்பவம் இடம்பெற்றது.

தாயின் இறுதிக்கிரியைக்காக மகன் மயானம் நோக்கி புறப்பட மறுபக்கத்தில் மகள் தந்தையுடன் சிறை நோக்கி புறப்பட்டது அங்கிருந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுதாகரன கைது செய்யப்பட தாயின் அரவணைப்பில் வழ்ந்த இரண்டு பிள்ளைகளும் இன்று இருவரையும் இழந்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!