SHARE

வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதற்காக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு புதிய முறைமையொன்றை அறிமுகம் செய்துள்ளது.

அந்தவகையில் வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்களின் உடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கோ அல்லது இறுதிக்கிரியைகள் தொடர்பிலான அடையாள ஆவணங்கள், மரண சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை உங்களிற்கு அருகிலிலுள்ள பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கலாம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரையில் மரணித்த உறவினரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு அல்லது வெளிநாட்டில் அடக்கம் செய்வதற்கு தேவையான ஆவணங்களை வெளிநாடு அலுவல்கள் அமைச்சிலே சமர்ப்பிக்க வேண்டியநிலை இருந்தது.

அந்தவகையில் குறித்த விடயத்திற்காக தூர பிரதேசங்களில் உள்ளவர்கள் நீண்ட தூர பயணதை மேற்கொண்டே கொழும்பிலுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை காணப்பட்டது.

இந்நிலையிலேயே இவற்றினை இலகுபடுத்தும் நோக்கிலேயே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Print Friendly, PDF & Email