SHARE

யாழ் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாநகர சபையின் கன்னி அமர்வு இன்று (23) காலை 9 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது யாழ் மாநகர சபையின் புதிய மேயரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

முதல் கட்ட வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்னோல்ட் 18 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் றெமிடீயஸ் ஆகியோர் தலா 13 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் றெமிடீயஸிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்னோல்டிற்கும் இடையில் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் இறுதிகட்ட வாக்கெடுப்பில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் றெமிடீயஸ் விலகிக்கொண்ட நிலையில், யாழ் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தெஹிவளை – கல்கிஸை நகர சபையின் புதிய மேயராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நவலகே ஸ்டேன்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் நவலகே ஸ்டேன்லி 23 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், மேயர் பதவிக்கு போட்டியிட்ட சுனேத்ரா ரணசிங்க 21 வாக்குகளையும் பெற்றனர்.

Print Friendly, PDF & Email