Home Blog Page 304

இறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது

image_pdfPRINT

முள்ளிவாய்க்கால் டயரி

மே-12

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-12) முள்ளிவாய்க்காலில இறுதியாக் செயல்பட்டுவந்த தற்காலிக மருத்துவமனையும் செயலிழக்கிறது.

இராணுவத்தின் தொடர் ஷெல் வீச்சுக்கள் வைத்திய சதலைக்குள்ளும் அதன் அருகிலும் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடிக்க தொடங்கின.

இதனால் அங்கு காயப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நோயாளர்களை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் வெள்ளைக்கொடியை உயர்த்திப்பிடித்தவாறு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக தூக்கிசென்றனர். ஐ.சி.ஆர்.சி.யின் கப்பலில் அவசர தேவையுடைய நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுகொண்டிருந்தனர்.

இதேவேளை மிகவும் மோசமாக காயமடைந்து காப்பாற்றும் கட்டத்தை தாண்டியவர்களும் கடும் பாதிப்புக்குள்ளான வயது முதிர்ந்தோர் சிலரும் அங்கேயே விட்டுவிட்டு வந்த நெகிழ்ச்சியுடைய சம்பவமும் அன்று நிகழ்ந்தது அந்த கொடிய யுத்தத்தில்.

மிருசுவிலில் கொல்லப்பட்டவர்களை நினைந்து

image_pdfPRINT
முள்ளிவாயக்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வின் இரண்டாவது சுடரேற்றும் நிகழ்வு யாழ்.தென்மராட்சி மிருசுவில் புனித நிக்கலஸ் தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
மிருசுவில் கிராமத்தில் 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 20ஆம் திகதி இராணுவத்தினரால் குழந்தைகள் உள்பட 8 பேர் படுகொலை செய்யப்பட்டு மலசல கூடக் குழிக்குள் போடப்பட்டிருந்தனர்.
கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து இன்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் க.வாமதேவன், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இறுதியாக இருந்த வைத்தியசாலை முற்றத்திலும் வீழ்ந்து வெடிக்கிறது எறிகணை

image_pdfPRINT
முள்ளிவாய்க்கால் டயரி
மே-12  
இன்று (12) பரவலாக எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கிறது. காயமடைந்தவர்களின் தொகை தெரியவில்லை. கொல்லப்படுபவர்களின் தொகை தெரியவில்லை. “ஈழநாதம் செய்திஆசிரியரின் குடும்பத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டுவிட்டார்களாம்” இப்படி எல்லாரும் வந்து சொல்லினம்.
எனக்கு நெஞ்சில இருந்து ஊனம் வடிய ஆரம்பித்துவிட்டிருந்தது. என்னை பார்த்திட்டு போறவர்கள் “சுரேன் இறக்கப்போரான் போல” என்று தங்களுக்குள் பேசிக்கொள்வதை கேட்கமுடிகிறது.”
முள்ளிவாய்க்கால் இறுதியாக இருந்த வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டேன். திடீரென எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றது. வைத்தியசாலை முற்றத்தில் விழுந்த எறிகணையில் பலர் கொல்லப்பட்டார்கள். “அருகில் நின்ற பெண் வைத்தியர் எங்களை பங்கருக்குள் இருக்கசொல்லிட்டு வெளில நிண்டவா” இப்ப அவா ஊரில இருக்கிறாவாம் என்று கேள்விப்பட்டனான். மனதிற்குள் ஒரு திருப்தி. பலருடய முயற்சியில் நான் காப்பாற்றப்பட்டதன் விளைவு… பல்லாயிரம் கடல்மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் “போரின் சாட்சியங்களில் ஒருவராக இருக்கின்றேன்” என்பதைவிட, சிறிலங்கா படையினருக்கு எதிராக சாட்சியம் அளிக்கும் மனதோடு இருக்கின்றேன்”  எங்கள் மக்களை கண்முன்னே கொன்றவர்களுக்கு என்னால் இதைமட்டும் தான் செய்யமுடியும்…
“இப்புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் சேட் இப்பவும் என்னிடம் இருக்கின்றது” அதைவிட என் உடலில் இருந்து எடுக்கப்பட்ட எறிகணையின் சிறிய இரும்புப்புகுதி என்னிடம் இருக்கின்றது. நெஞ்சில் இருந்து எடுக்கபட்ட குண்டின் ஒரு சிறுபகுதியினை விட ஆங்காங்கே எனக்கு சிறிய இரும்புத்துண்டுகள் தற்பொழும் இருக்கின்றது. அது எப்படி என் உடம்பில் வந்தது என்று தெரியாது.
-இறுதிப்போரின் சாட்சி சுரேன் கார்த்திகேசு

வீதிவிபத்துக்கள் தொடர்பில் எவருக்கும் அக்கறையில்லை

image_pdfPRINT
– மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம்
வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் எவரும் கரிசனை கொள்வதில்லை என வடமாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபை அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த ஒரு வருட காலத்திற்குள் 68 உயிரிழப்புக்கள் வீதி விபத்தினால் ஏற்பட்டு உள்ளது. இந்த வருட ஆரம்பம் முதல் கடந்த நான்கு மாதங்களுக்குள் 16 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஆனால் அவை தொடர்பில் பெரிதளவில் எவரும் கரிசனை கொள்ளவில்லை.
கடந்த காலங்கள் போன்று உயிரிழந்த 68 பேரும் சுட்டு படுகொலை செய்யப்பட்டு இருந்தால் , இன்று வடக்கில் எவ்வாறான கொதிநிலை காணப்பட்டு இருக்கும். ஆனால் அவர்கள் விபத்தில் உயிரிழந்தமையால் எவரும் அது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை.
அரச திணைக்கள வாகனங்கள் அதிவேகத்தில் பயணிக்கின்றன. 
வீதிகளில் அரச திணைக்கள வாகனங்கள் அதிவேகத்தில் பயணிக்கின்றன. அவை வேக கட்டுபாடுகளை கவனத்தில் எடுப்பதில்லை. எத்தனையோ அரச திணைக்கள வாகனங்கள் வீதி விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. அவற்றினை மூடி மறைத்து அந்த வாகன சாரதிகள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள்.
எனவே முதலில் அரச திணைக்கள வாகனங்கள் வேக கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொலிசார் கையூட்டு வாங்கு கின்றார்கள். 
வீதி விபத்துக்களை தடுப்பதற்கு பொலிசாரும் தவறி விடுகின்றார்கள். பொலிசார் வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்பதில்லை. குறிப்பாக கண்டி வீதியில் தொடர் வெள்ளை கோட்டில் வாகனங்களை மறிக்கின்றார்கள். அதனால் பின்னால் வரும் வாகனங்கள் பொலிசாரின் கண் முன்னாலே வெள்ளை கோட்டை தாண்டி செல்கின்றனர்.
மற்றம் பொலிசார் கையூட்டுக்கள் வேண்டுவதும் அதிகம். சில இடங்களில் போக்குவரத்து பொலிசாரின் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டு இருக்கும் பெட்டியின் மூடி திறந்தே இருக்கும். சாரதிகள் உண்டியல் போன்று அதற்குள் பணத்தினை போட்டு விட்டு செல்கின்றார்கள். எனவே இவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாகவே வீதி விபத்துக்களை தடுக்க முடியும் என தெரிவித்தார்.

இரணைதீவில் குடில்கள் அமைக்க கிடுகுகள் வழங்கல்

image_pdfPRINT

பூநகரி இரணைதீவு மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலில் கிடுகுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் பூநகரி- இரணைதீவில் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதனையும் அரசாங்கம் வழங்காத நிலையில் அந்த மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய ஒரு தொகுதி உணவுப்பொருட்களை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன் வழங்கியிருந்தார்.
உணவுப்பொருட்களை வழங்கும் போது இரணைதீவு மக்கள் சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் தமக்கு குடிசைகள் அமைப்பதற்கு கிடுகுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று (11) தற்காலிக குடில்களை அமைப்பதற்காக 5000 மட்டை கிடுகுகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை அடுத்த கட்டமாகவும் 5000 கிடுகுகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று மக்களுக்கு வழங்கப்பட்ட கிடுகுகளுக்கான நிதி அனுசரணையை புலம்பெயர் தமிழ் அமைப்பான ‘உறவுகளுக்கு கைகொடுப்போம்’ என்ற அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு இளைஞர்களே இராணுவத்தை சிங்களம் என எண்ணாதீர்கள் வாருங்கள்!- கூவுகிறார் மேஜர்

image_pdfPRINT
வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்தார்.
சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள் நல்லவர்கள் எனினும் கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று பிரித்து விட்டது.
எனினும் தெற்கு சிங்கள மக்கள் வடக்கு தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்களாக உள்ளனர்.
30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வடக்கில் மின்சாரம் இல்லாத நிலையில் கூட வடக்கிலிருந்து சிறந்த மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உருவாகியிருந்தார்கள்.
எனவே தற்போதைய இளைஞர், யுவதிகள் இராணுவத்தை சிங்கள இராணுவம் என்று எண்ணாதீர்கள். இராணுவ வேலையும் ஒரு அரச வேலை தான்.
எனவே வடக்கு இளைஞர்களும் இராணுவத்தில் இணைந்து நாட்டுக்குச் சேவையாற்ற முன் வரவேண்டும்-.- என்றார்.

எரிபொருள் விலை நள்ளிரவுடன் ஏறுகிறது

image_pdfPRINT
விநியோகஸ்தர்கள் பதுக்கல்; பாவனையாளர்கள் முண்டியடிப்பு
எரிபொருள்களின் விலை இன்று நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்த நிலையில்  எரிபொருள் விநியோகஸ்தர்கள் சிலர் அவற்றைப் பதுக்க முயற்சித்த போதும் பாவனையாளர் அதிகார சபையினர் தலையிட்டு சீரான விநியோகத்து வழிசமைத்தனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (10) இரவு இடம்பெற்றது.
பெற்றோல் 20 ரூபாவாலும் டிசல் 9 ரூபாவாலும் மண்ணெண்ணை 57 ரூபாவாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.
பெற்றோல் மற்றும் மண்ணெண்ணையைக் கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரமாக உள்ளனர். அதற்காக  மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பெற்றோல் வாகனங்களுடன் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
அத்துடன் விவசாயிகள் உள்பட பலர் மண்ணெண்ணையைக் கொள்வனவு செய்வதற்காக கான்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சில பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை விநியோகத்தை நிறுத்தி வாடிக்கையாளர்களுக்கு இல்லை எனத் திருப்பியனுப்பினர்.
இதுதொடர்பில் பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடங்களுக்கு விரைந்த பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட அதிகாரிகள், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு அறிவித்து சீரான எரிபொருள் விநியோகத்துக்கு வழிசமைத்தனர்.

வித்தியா படுகொலை வழக்கின் ‘ட்ரயல் அட் பார்’ நீதிபதிகள் மூவரும் இடமாற்றம்

image_pdfPRINT

யாழிலிருந்து விடைபெறுகிறார் நீதிபதி  இளஞ்செழியன்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை நடத்தி முடித்த தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டது.

அவர்களின் இடமாற்றம் வரும் மே 26ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என பிரதம நீதியரசரால் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றத்தின் கீ்ழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை செய்யப்பட்டதைத் தொடந்து, யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 2015ஆம் ஆண்டு மே 20ஆம் திகதி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போதைய பிரதம நீதியரசர் கே.சிறிபவன், யாழ்ப்பாணத்துக்கு வந்து நிலமையை ஆராய்ந்து இந்த நியமனத்தை வழங்கியிலிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் நீதித்துறையை கட்டுக்கோப்புடன் முன்னெடுப்பதில் மாவட்ட நீதிபதிகள், நீதிவான்களுடன் இணைந்து தனது கடமைகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னெடுத்திருந்தார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நடந்த தடுப்புக்காவலிலிருந்த இளைஞன் ஒருவர் சித்திரவதைக்குள்ளாக்கி உயிரிழந்த வழக்கு தொடர்பில் சில இணையத்தளங்கள் ஊடாக விசமத்தனமான விமர்சனங்களைப் பரப்பி அவரை பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கிய போதும் தளராது அந்த வழக்கின் குற்றவாளிகளான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயத்தில் ஒருவராக இருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சுமார் 400 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வழங்கியிருந்தார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவராக இருந்தார்.

இவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2014 இறுதிவரை பணியாற்றியிருந்தார். பின்னர் வவுனியா மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்து மீளவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்தவர். அத்துடன், வவுனியா மேல் நீதிமன்றில் அரசியல் கைதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகளை துரிதமாக முடிவுறுத்தி நிரபராதிகளை விடுவித்திருந்தார்.

‘கடும் போக்கிலித்தனம்’ -சி.வீ.கே.சிவஞானம்

image_pdfPRINT

வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம் என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். 

வடமாகாண சபையின் அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள மாகாண சபை கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது குறித்து தெரிவிக்கையில்,
வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை என வெளியில் விமர்சனங்கள் கருத்துக்கள் உண்டு. அவை வெளியில் இருக்கலாம், ஆனால் உறுப்பினர்கள் மாகாணசபையில் இருந்து கொண்டு இந்த உயரிய சபையில் “மாகாண சபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம்.” என தெரிவித்தார்.

மே 18 – தமிழின அழிப்பு தினமாக பிரகடணம்

image_pdfPRINT

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான மே 18 ஆம் திகதி, தமிழின அழிப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் அமர்வு இன்று (10) கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, வடமாகாண சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தப் பிரேரணையினை முன்மொழிந்தார்.

“கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இனஅழிப்பு முன்னெடுக்கப்பட்டது. எனவே மே 18 ஆம் திகதியை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் கோரிக்கை விடுத்ததுடன், உலக தமிழ் மக்கள் அனைவரும் இனஅழிப்பு நாளான மே 18 ஆம் திகதியை  துக்கதினமாக அனுஸ்டிக்குமாறும் கோர வேண்டுமென” தெரிவித்தார்.

இதனை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன், “மே 18 ஆம் திகதியை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்வதாக தீர்மானம் எடுக்கப்படுவதாக” அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள்; வெளியாகும் புதிய ஆதாரங்கள் இதோ!

image_pdfPRINT
இலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களுடனான ஆவணப் படம் ஒன்றை சர்வதேச ஊடகமான அல்ஜஸீரா (Aljazeera) இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்த்தங்களாக சுமார் 60 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கும் அவ்வூடகம், குறித்த ஆவணப்படத்தில் கடத்தல்களின் பின்னணி, அவர்களை இயக்குபவர்கள், கடத்தப்படுபர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொடூரமான சித்திரவதைகள் என அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிகொண்டுவந்துள்ளது.

இதேவேளை இந்த ஆவணப்பட உருவாக்கத்திற்கு உதவிய பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி கீத்  குலசேகரம், தற்போதுள்ள நல்லாட்சி அரசிலும் கடத்தல் சித்திரவத்தைகள் இடம்பெறுவதற்கான ஆதாரபூர்வ தவலை இதில் தெரிவித்துள்ளார்.
அகதித்தஞ்சக்  கோரிக்கையாளர்களின் வழக்குகளையும் நீண்ட காலமாக கையாண்டுவரும் அவர், புதிய அரசாங்கம் அட்சிக்கு வந்ததன் பின்னர்
சித்திரவதைகள் தொடர்பில்   குறைந்தது 80 வழக்குகளையும் நடப்பாண்டான 2018 இல் 6 வழக்குகளை மருத்துவ மற்றும் பல ஆதரங்களுடன் கையாண்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
தவிர, கடத்தப்படவர்களின் உறவுகள் வீதிகளில் நின்று நீண்ட காலமாக தமது உறவுகளை தேடி போராடி வருகிறார்கள். மறுபக்கத்தில் அரசாங்கம் காணமல் போனாருக்கான அலுவகங்களை அமைத்தும் எந்தவித தீர்வையும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை என இதில் கூறப்பட்டுள்ளது.
குறித்த காணொளியை பார்க்க எங்கே அழுத்துங்கள் 

சேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்

image_pdfPRINT
முள்ளிவாய்க்கால் டயரி
மே-10   
மூன்றாவதும் இறுதியுமான பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்ட (மே 8)  நாளிலிருந்து 12 ம் திகதி வரை அப் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை  மீது இலங்கை இராணுவத்தின் வான் படையாலும் கடல் படையாலும் பல தடவைகள் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
வெறும் 2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான
அந்த நிலப்பரப்புக்குள் ஒவ்வொருதடவையும் ஷெல்  வீழ்ந்து வெடித்துக்கொண்டே இருந்தது. பதுங்கு குழிகள் கூட வெட்ட முடியாத நிலை. இதனால் மக்கள் சேலைகள் போர்வைக்களை கிழித்து அதனுள் மண்ணை நிரப்பி காவல் அரண் அமைத்தனர்.
 
கொல்லப்பட்டு இறந்த உறவுகளை தூக்கவோ புதைக்கவோ அங்கு நேரம் கிடைக்கவில்லை. பார்க்கும் இடமெல்லாம் 100 மேற்றப்பட்ட கொல்லப்பட்டிருந்த உடல்களை கடந்தே சென்றோம். இதில் சிறுவர்களும் பெண்களும் அடங்குவர்.
ஐ.நா.போர்க்குற்ற அறிக்கை- பந்தி 876 
error: Content is protected !!