முள்ளிவாய்க்கால் டயரி
மே-10
மூன்றாவதும் இறுதியுமான பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்ட (மே 8) நாளிலிருந்து 12 ம் திகதி வரை அப் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை மீது இலங்கை இராணுவத்தின் வான் படையாலும் கடல் படையாலும் பல தடவைகள் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
வெறும் 2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான
அந்த நிலப்பரப்புக்குள் ஒவ்வொருதடவையும் ஷெல் வீழ்ந்து வெடித்துக்கொண்டே இருந்தது. பதுங்கு குழிகள் கூட வெட்ட முடியாத நிலை. இதனால் மக்கள் சேலைகள் போர்வைக்களை கிழித்து அதனுள் மண்ணை நிரப்பி காவல் அரண் அமைத்தனர்.
கொல்லப்பட்டு இறந்த உறவுகளை தூக்கவோ புதைக்கவோ அங்கு நேரம் கிடைக்கவில்லை. பார்க்கும் இடமெல்லாம் 100 மேற்றப்பட்ட கொல்லப்பட்டிருந்த உடல்களை கடந்தே சென்றோம். இதில் சிறுவர்களும் பெண்களும் அடங்குவர்.
ஐ.நா.போர்க்குற்ற அறிக்கை- பந்தி 876