முள்ளிவாய்க்கால் டயரி
மே-12
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-12) முள்ளிவாய்க்காலில இறுதியாக் செயல்பட்டுவந்த தற்காலிக மருத்துவமனையும் செயலிழக்கிறது.
இராணுவத்தின் தொடர் ஷெல் வீச்சுக்கள் வைத்திய சதலைக்குள்ளும் அதன் அருகிலும் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடிக்க தொடங்கின.
இதனால் அங்கு காயப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நோயாளர்களை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் வெள்ளைக்கொடியை உயர்த்திப்பிடித்தவாறு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக தூக்கிசென்றனர். ஐ.சி.ஆர்.சி.யின் கப்பலில் அவசர தேவையுடைய நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுகொண்டிருந்தனர்.
இதேவேளை மிகவும் மோசமாக காயமடைந்து காப்பாற்றும் கட்டத்தை தாண்டியவர்களும் கடும் பாதிப்புக்குள்ளான வயது முதிர்ந்தோர் சிலரும் அங்கேயே விட்டுவிட்டு வந்த நெகிழ்ச்சியுடைய சம்பவமும் அன்று நிகழ்ந்தது அந்த கொடிய யுத்தத்தில்.