Home Blog Page 295

மகாணசபை அனுமதி பெறாமல் படையினர் வடக்கில் காணிகளை சுவீகரிக்க முடியாது

image_pdfPRINT

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

வடக்கு மாகாணத்தில் மாகாண சபையின் அனுமதி பெறப்படாமல் படையினர் காணிகளை சுவீகரிக்க முடியாதென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான முதலமைச்சர் விக்கினேஸ்வரன், அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தின் போது வேலணைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவில் பொது மக்களுக்குச் சொந்தமான காணியை படையினர் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் ஒருபுறம் காணிகளை விடுவித்து வருவது போன்ற தோற்றப்பாட்டை காட்டி வருகின்ற அரசாங்கம் மறுபுறம் காணிகளைச் சுவீகரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றது.
இதற்கமையவே மண்டை தீவில் 18 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு படையினர் கணி சுவீகரிப்பதைக் கண்டிப்பதுடன் தொடர்ந்தும் இங்கு படையினர் காணிகளைச் சுவீகரிப்பதற்கு அனுமதிக்க முடியாதென்றும் தெரிவித்தனர்.
இதன் போது படையினருக்கு காணிகள் தேவை அதனை வழங்குங்கள் எனக் கொழும்பில் இருந்து அரச அதிபருக்கோ இல்லது பிரதேச செயலாளர்களுக்கோ அறிவுறுத்தல்கள் வந்தாலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபையின் அனுமதியின்றி அதனை வழங்க முடியாது என முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படையினரோ அல்லது வேறு யாரோ காணி கேட்டால் யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் மாகாண சபையின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டுமென்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து மண்டை தீவுக் காணியை வழங்க முடியாதெனவும் வடக்கில் எங்காவது படையிருக்காக காணி சுவீகரிப்பதானால் மாகாண சபையின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டுமெனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடல் அட்டை பிடிப்பதை கால அவகாசம் வழங்காது தடைசெய்ய வேண்டும்

image_pdfPRINT
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர் கடல் அட்டை பிடிக்கும் தொழிலை கால அவகாசம் வழங்காது உடனடியாக தடைசெய்ய வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அதில் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில், தென்பகுதி மீனவர்கள்  கடல் அட்டை பிடிக்கும் தொழில் செய்வதனால்,  உள்ளுர் மீனவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறர்கள். குறித்த தொழிலை  தடைசெய்ய வேண்டும் என்றும் அதை மீறி தொடர்சியாக இத்தொழிலை மேற்கொண்டால்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் கேட்டுக்கொண்டார்.
அதற்கமைய அப்பகுதியின் தற்போதைய நிலை தொடர்பாக மருதங்கேணி பிரதேச செயலர் கருத்து தெரிவிக்கையில்,
வடமராட்சி கிழக்கில் 1500 மீனவர் வாடி அமைத்து தொழில் செய்கிறார்கள். கடல் அட்டை அனுமதி  கடற்தொழில் நீரியில் வளத்துறை பணிப்பாளரால்  வழங்கப்பட்டு உள்ளது. நிபந்தனை அடிப்படையில் வழங்கப்படுகிறது, அதாவது 5 கிலோ மீற்றருக்கு அப்பால் கடலில் அட்டை பிடிக்க வேண்டும்.  இரவில் பிடிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி தங்கி உள்ளார்கள். 
ஆனால்  தங்கி நின்று வாடி அமைத்து தொழில் செய்வது அந்தந்த  பிரதேச செயலரால் தான் அனுமதி வழங்கப்பட வேண்டும். நான் அனுமதி வழங்கவில்லை. ஆனால் தனிப்பட்டவர்கள் மற்றும் சில மீனவ சங்கங்கள் அனுமதி கடிதத்தை கொடுக்கிறார்கள். பணத்தினை பெற்று அனுமதி கொடுக்கிறார்கள் அந்த வகையில் ஏராளமானவர்கள் தற்போது தங்கியுள்ளார்கள்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் முறையற்ற முறையில் செயற்படுவதால் பல்வேறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  உள்ளுர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே  அப்பகுதியை விட்டு வெளியேற 30 நாட்கள்  அவகாசம் கொடுத்துள்ளோம் அதன் பின்னர்  நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இது கட்டாயம்  தடுக்கப்பட வேண்டிய விடயம் என தெரிவித்தார்
ஒரு கிழமைக்குள் வெளியேற்றுங்கள். 
30 நாள் அவகாசம் வழங்கத் தேவையில்லை ஒரு கிழமை கால அவகாசம் கொடுத்து அவர்களை வெளியேற்ற வேண்டும்.அத்துடன்  தனிநபர் கடிதங்களை ஏற்றுக்கொள்ளமால் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
சட்ட நடவடிக்கை எடுப்போம். 
மேலும் கடற்தொழில் நீரியல் வளத்துறை உத்தியோகத்தார். கடல் அட்டை பிடிப்பதற்கான அனுமதி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் தங்கி நின்று பிடிக்கும் செயற்பாட்டை செய்யவில்லை, தற்போது தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். நாம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
அண்மைக்காலமாக அப்பகுதி மக்கள் யாருடைய அனுமதியும் இல்லாமல் தமது சொந்த காணிகளை அவர்களிடம் கொடுத்துள்ளார்கள். தற்போது 6 பேர் தமது காணிகளை கொடுத்துள்ளார்கள். அத்துடன் 2 மீனவ சங்கங்கள் அனுமதி வழங்கியுள்ளன.
எமது மீனவர்களுக்கு பயிற்சி இல்லை. 
அதனால் தான் தங்கி நின்று தொழில் செய்கிறார்கள்.
எமது பகுதி மீனவர்களுக்கு குறித்த தொழில் தொடர்பான  பொறிமுறையை கற்பித்து இந்த தொழிலை செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அப்போது தென்னிலங்கையில் இருந்து வருபவர்கள் தடுக்கப்படலாம் எமது பகுதி மீனவர்களுக்கு தொழில்வாய்பப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக தடை செய்யுங்கள். 
இந்த விடயத்தில் பல தரப்பினர் உரிய முறையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.. தனி நபர் இதில் சம்பந்தப்பட்டு நடைபெறவில்லை பல்வேறு தரப்பினர் தொடர்புபட்டுள்ளார்கள். எனவே சட்டத்தின் படி செயற்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அங்குள்ள உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த தொழில் முறையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசுடன் பேசி சரியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இனவாதியாக நோக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்க படுகின்றது. 
அதேவேளை  சட்ட ரீதியாகச் செயற்பட்டு வருகின்ற பிரதேச செயலாளரை இனத்துவேசமாக தென்னிலங்கையிலுள்ளவர்கள் நோக்குவதாக அரச அதிபர் தெரிவித்தார்.
அதேவேளை பல்வேறு அச்சுறுத்தல்கள் பிரதேச செயலருக்கு விடுக்கப்பட்டு வருவதாக பருத்திதுறை பிரதேச சபைத் தவிசாளரும் தெரிவித்தார்.

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் விசேட பொலிஸிற்கு தொடர்பு?

image_pdfPRINT

-நீதிமன்று சிறப்பு கவனம்

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்ட போதைப் பொருள் சிறப்பு பொலிஸ் அணியால் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படாத விவகாரம் தொடர்பில் நீதிமன்று சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

அதுதொடர்பில் நீதிமன்றின் உத்தரவில் அறிக்கை ஒன்றை யாழ். பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் இன்று சமர்ப்பித்தார்.

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பது என்ற தொனிப் பொருளில் கடந்த மே 31ஆம் திகதிவரையான காலப் பகுதியில் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்றை அமைத்தார்.

போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் பொது மக்கள் தகவல் வழங்கும் வகையில் தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் யாழ். மாநகர சபைக்குட்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையிலான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த போதுஇ மாணவர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் இடமொன்று தொடர்பில் பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டது.

அந்த தகவலை யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியால் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் தேடுதலில் ஈடுபட்ட பொலிஸார் ஒரு தொகை மாவா போதைப் பொருள் 5 உரப் பையிலிடப்பட்ட பொதிகளைக் கைப்பற்றினர். அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மாவா போதைப் பொருள் பொதிகளையும் சந்தேகநபர்களையும் பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றதை சுகாதார மருத்துவ அதிகாரி உள்ளிட்டவர்கள் அவதானித்ததுடன்இ அந்த நடவடிக்கையை ஒளிப்படங்களையும் எடுத்திருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற மறுநாள் மாவா போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவேறு வழக்குகளில் 2 சந்தேகநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

ஆனால் சுகாதார மருத்துவ அதிகாரியின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்றில் முற்படுத்தப்படவில்லை. அவரிடம் மீட்கப்பட்ட மாவா போதைப் பொருள் தொடர்பிலும் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இது தொடர்பில் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்திய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுஇ பொலிஸாரிடம் விளக்கம் கேட்டிருந்தது.

அதனையடுத்து மாவா போதைப் பொருளைத் தயாரிக்கும் புகையிலை உள்ளிட்ட மூலப்பொருள்கள் அடங்கிய 2 உரப் பை பொதிகளை பொலிஸார் கடந்த வாரம் மன்றில் முன்வைத்தனர்.

மேலும் அதுதொடர்பில் யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இன்று மன்றில் முன்னிலையாகி அறிக்கை ஒன்றை முன்வைத்தார். அதனால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பின்புலத்தில் அரச அதிகாரி; வடக்கு மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மீது அதிகார முறைகேடு குற்றசாட்டு

image_pdfPRINT
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது அதிகார முறைகேடு குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள காணி ஒன்றை வாங்கிய குடும்பம் ஒன்றுக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகி ஆதாரங்களுடன் உண்மையை எடுத்துரைத்த சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன், இந்த குற்றச்சாட்டை மன்றில் முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள காணி ஒன்றை குடும்பம் ஒன்று வாங்கியுள்ளனர். அந்தக் காணிக்கு மற்றொரு காணி ஊடாகச் செல்வதற்கு பாதை விடப்பட்டிருந்தது. அந்தப் பாதையை காணியின் உரிமையாளர்  மூடியுள்ளார்.
இந்த நிலையில் காணியை வாங்கியவர்கள் அந்தப் பாதையை மூடிப் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து தமது காணிக்குச் சென்றுள்ளனர்.
தம்மால் போட்டப்பட்ட பூட்டை உடைத்து தமது காணி ஊடாக அத்துமீறினர் என்று அந்தக் குடும்பத்தின் தாயார் மற்றும் மகனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாதையை மூடியவர் முறைப்பாடு வழங்கினார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பூட்டை உடைத்து காணிக்குள் அத்துமீறினர் குற்றச்சாட்டில் தாயாரும் மகனும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் அண்மையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
பொலிஸாரின் அறிக்கையை விசாரணை செய்த நீதிவான் நீதிமன்று, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் பிணையில் விடுவித்தது.
அத்துடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் காணிக்குச் செல்வதற்கான பாதை தொடர்பில் நேரில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர். அவர்கள் சார்பில் சர்மினி விக்னேஸ்வரன் முற்பட்டார்.
“காணிக்கான பாதையை இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் மூடி வைத்துள்ளார். அந்தப் பாதையை தெளிவாகக் காட்டும் ஒளிப்படங்களை மன்று கவனத்தில் எடுக்கவேண்டும்” என்று அவற்றை மன்றிடம் சமர்ப்பித்தார் சட்டத்தரணி.
“இந்த வழக்கின் அரச உயர் மட்டத்தில் பதவி வகிக்கும் அதிகாரி ஒருவர் செல்வாக்குச் செலுத்துகின்றார். அவருக்கு ஆதரவாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிகார முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மாண்புமிகு மன்றின் உத்தரவுக்கு அமைய நேரில் விசாரணை செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம் வழங்கியுள்ளார்.
அந்த பொலிஸ் அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு அஞ்சியே பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த நீதிமன்றின் கட்டளையை நிறைவேற்றத் தவறியியுள்ளனர்” என்று சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் மன்றில் சமர்ப்பணம் செய்தார்

தேடிக்கொண்டிருப்போரின் அபிலாசைகளை OMP பூர்த்தி செய்யுமா?

image_pdfPRINT

வீரகேசரியின் முன்னாள் நிருபர்- ப.சுகிர்தன்

காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென கடந்த 1994 இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாக திருப்தி கொள்ளப்படவில்லை.

இது இவ்வாறு இருக்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கையும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கமைய காணாமல்போனோர்கள் தொடர்பிலான நிரந்தரமான அமைப்பு ஒன்றை நிறுவி அவ்வகையிலானோரைத் தேடிக்கண்டு கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகம் (OMP) நிறுவப்பட்டுள்ளது.

இதற்கான சட்டம் கடந்த 2016 இல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் கடந்த மே மாதம் மன்னாரில் நடந்த கலந்துரையாடல் ஒன்றைத் தொடர்ந்து இதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த அமைப்பிற்கான ஏற்பாடுகள் காணாமல் போனோரைத் தேடிக்கொண்டிருப்பவரின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடியதாக இருக்குமா என்பதே எனது கேள்வியாக உள்ளது.

தமிழர்கள் மீது பாரிய இன அழிப்பு யுத்தத்ததை மேற்கொண்ட இலங்கை அரசு கடந்த 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த பின்னர் தம்மவர்கள் பலரைக் காணவில்லை என்பது தொடர்பிலும் யுத்தத்திற்கு பின்னர் முகாம்களில் வாழ்ந்து வந்த பலரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு வீடு திரும்பியவர்கள் பலரும் காணாமல் போயுள்ளார்கள் என்று அவர்களைத் தேடும் முயற்சி தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் சிங்கள பேரினவாதம் பாரிய யுத்தக்குற்றத்தை புரிந்திருந்த நிலையில் இம்முயற்சிகளின் தீவிரத்தைத் தணிப்பதற்கென 2013 ஆகஸ்ட் மாதத்தில் ‘பரணகம ஆணைக்குழு’ என்று அழைக்கப்படும் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. ஆனால் அவ்விசாரணைகளால் எந்தப் பயனும் கிட்டாததால் காணாமல்போனோரைத் தேடும் முயற்சி தொடர்ந்துஇ தீவிரமடையத்தொடங்கியது.

தம் கண்முன்னே இராணுவத்தினரிடம் உறவுகளைப்பறிகொடுத்தவர்கள் வீதிகளில் இறங்கி தம்மவர்களை தேடி பொராட்டங்களை நடத்தத்தொடங்கினார்கள். ஆனால் காணமால் போனவர்கள் குறித்து அரசோ சம்பந்தப்பட்டவர்களோ பொறுப்புகூற முன்னவராது இருந்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே உறவுகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவென குறித்த OMP அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்புக்கான சட்ட வரைவு 2016 இல் முன்வைக்கப்பட்டிருந்த பொழுது அதன் ஏற்பாடுகளை மையமாகக் கொண்டு அவ்வமையம் அரசினால் நிமிக்கப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த Consultaion Task Force என்ற மக்கள் கருத்துக்களைத் திரட்டும் செயலணிக்கு காணாமல் போனோர்களின் எதிர்பார்ப்புக்களின் கருத்துக்கள் குறுகிய காலத்தில் தயாரித்து ஒரு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த பல அபிலாசைகளில் ஒரு சில வருமாறு:
• பலாத்காரமாக காணாமல் போகச் செய்தலை OMP சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் அதனை ஒரு குற்றவியல் செயலாக தண்டனைக்கோவையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
• புதைகுழிகள் தொடர்பில் தகவல் இருப்பின் அவை தொடர்பில் புலனாய்வுகள் நடத்தப்படுதல் வேண்டும்.
• காணாமல்போனோர் சம்பந்தமாக விசாரணை செய்யவென காலத்துக் காலம் நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களுக்குப் புலனாய்வு செய்வதற்கென வழங்கப்பட்டிருந்த சகல அதிகாரங்களும் பொறிமுறைகளும் அரச அமைப்புக்களிலிருந்து பதிவேடுகளைப்பெற்று பரிசோதனை செய்ய வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களும் OMP க்கு வழங்கப்படுதல் வேண்டும்.
• காணாமல்போனோர் தொடர்பில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த விசாரணைக்குழுக்களிற்கு வழங்கப்பட்ட தகவல்களை OMP யும் ஏற்றுக்கொள்ளச் செய்யப்படுதல் வேண்டும்.
• OMP யிற்கு வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். எனினும்இ அவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்கள் மூலம் நியாயம் பெறுவதற்குத் தடை இருக்கலாகாது.
• OMP யின் புலனாய்வுகளின்போது பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களத்தினையோ (TID) குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினரையோ (CID) பங்கு கொள்ளச் செய்தல் ஆகாது.
• OMP யின் விசாரணையின் போது பெற்றுக் கொள்ளும் தகவல் யாவற்றையும் நீதித்துறை மூலம் நியாயம் பெற்றுக்கொள்ள ஏதுவாக வழக்கு தொடரும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
• சம்பந்தப்பட்ட காணாமல் போனவர்களைக் கண்டுகொள்ள முடியாதுள்ளது. தொடபிலான அத்தாட்சிப்பத்திரம் ஒன்றினை ழுஆP வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். எனினும்இ அதனை முறைப்பாட்டுக்காரர் ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாததாக இருத்தல் வேண்டும்.
• OMP க்கு சாட்சியமளிப்பவர்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை அது செய்தல் வேண்டும்.
• OMP யின் செயற்பாடுகளிற்கு உதவும் முகமாக ஜ.நா. மனித உரிமை ஆணையாளரின் அனுசரணையுடன் ஆளணியினரையோஇ ஆலோசகர்களையோ OMP யின் ஆளணியினருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேற்கூறியவற்றில் இருந்து காணாமல் போனவர் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் அபிலாசைகள் எந்த அளவிற்கு இருந்ததென்பதை ஓரளவிற்கு கணித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

எனினும், குறித்த சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குள்ளாகிய பொழுது இவ் அபிலாசைகளிற்கு போதிய அளவு கவனம் செலுத்தப்படவில்லை. பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதிகளில் இருந்த ஏற்பாடுகளுக்கு எதிராக கருத்துக்களைக் கூறியதுடன்இ சர்வதேச அழுத்தங்களிற்கு இடமளித்து விடுதலைப்புலிகளை வெற்றிகொண்ட இராணுவ வீரர்களைத் தண்டிப்பதற்காகவே இந்த சட்ட வரைபை முன்வைத்ததாகக் குற்றம்சாட்டினார்கள்.

இந்த குற்றச்சாட்டு அழுத்தங்களுக்கு இசைந்த அரசும் தமது இராணுவ வீரர்களை காப்பாற்றவும் சிங்கள மக்களிடமிருந்து நம்பிக்கை வாக்கு வாங்கியை நிரப்பிக்கொள்ளவும் OMP யின் விசாரணையினால் இராணுவம் எந்த வகையிலும் பாதிப்புற இடமளிக்காத வகையில் திருத்தங்களை செய்து நிறைவேற்றியது.

இதன் விளைவாக OMP என அழைக்கப்படும் இந்தக் காரியாலயம் பாதிக்கப்பட்டவர்களின் அபிலாசைகளை ஓரளவேனும் நிறைவேற்றக்கூடிய வகையில் அமையாது என்பது புலனாகியுள்ளது.

இத்தறுவாயில் முன்னொரு காலத்தில இலங்கைக்கு அழைக்கப்பட்டிருந்த சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழு 2007இல் செயற்பாடுகளை இடையில் நிறுத்திச் செல்லும் போது சமர்ப்பித்த ஒரு கூற்று ஞாபகம் வருகின்றது. “மனித உரிமைகளை மேம்படுத்துவதிலோ பாதுகாப்பதிலோ அப்போதைய அரசாங்கத்திற்கு ஆர்வமோ திடமான மனநிலையோ இருக்கவில்லை” எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கமும் OMP தொடர்பான சட்டத்தை நிறைவேற்றியதில் மேற்படி நிபுணர்குழு கூறியவாறான அத்தகைய நிலையில் இருந்ததோ என எண்ணத் தோன்றுகின்றது.

இவற்றை எல்லாம் பார்க்குமிடத்து தொலைந்த தம் உறவுகளை தேடி நாளாந்தம் கண்ணீரும் கம்ளையுமாய் ஓடிக்கொண்டிருக்கும் உறவுகளின் அபிலாசைகளை OMP நிறைவேற்றுமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு விரைவில்

image_pdfPRINT

தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு நாளை மறுநாள் 05ம் திகதி இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இளைஞர் மாநாடு தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்களிற்கிடையிலான சந்திப்பு இன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இளைஞர் மாநாடு தொடர்பாக இதில் ஆராயப்பட்டு, யூலை மாதம் நடுப்பகுதியில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை விடுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நாளை மறுநாள் 05ம் திகதி, 12.30 மணிக்கு யாழ் பொதுநூலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவுள்ளார்.

யாழ் முஸ்லீம்கள் கௌரவமானவர்கள் – மாவை

image_pdfPRINT

யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு முன்மாதிரியான மக்களாகவும் அவர்கள் இருந்தார்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் முஸ்லிம் மக்களின் விஷேட இப்தார் ஒன்றுகூடல் “சகவாழ்வே சக்தி தரும்” என்னும் மகுடத்தில் 02-06-2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஜனாப் அப்துல் கபூர் நௌபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது; இந்நிகழ்வில் விஷேட விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சோ.சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலே முஸ்லிம் மக்கள் மிகவும் கௌரவமான வாழ்வுமுறையைக் கொண்ட சமூகமாக வாழ்ந்தார்கள், இலங்கையின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு முன்மாதிரியான மக்களாகவும் அவர்கள் இருந்தார்கள், இப்போது இங்கே உரை நிகழ்த்திய மௌலவி அவர்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றுகின்ற மக்களாகவே அவர்கள் இருந்தார்கள். தந்தை செல்வா அவர்கள் முஸ்லிம் மக்களை ஒரு தனித்துவமான சமூகமாகவே அடையாளம் செய்தார்கள், அதற்காகவே அவர்களுக்கும் ஒரு தனியான சுயாட்சி அலகு ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கருத்தை சொல்லிலும் செயலிலும் செய்துகாட்டினார்.

இப்போது தமிழ் முஸ்லிம் உறவு நலிவுற்றிருக்கின்றது, இதனைக் குழப்புவதற்கு பல சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால் இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது; தமிழ் மக்கள் ஒரு தீர்வை எதிர்பார்த்து முன்னோக்கி நகர்கின்றார்கள், இதனை முஸ்லிம் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள், இன்னும் அதிகமான புரிந்துணர்வுகள் அவசியப்படுகின்றன. உலக நாடுகளிலே முஸ்லிம் மக்கள் பலவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள், சிரியா, பர்மா போன்ற நாடுகளிலே இன்று நடப்பதை நாம் பார்க்கின்றோம், அன்று புத்தளத்தில் இனக்கலவரம் ஏற்பட்டது, அளுத்கம, கண்டி என அது தொடர்கின்றது; புத்தள முஸ்லிம்களுக்காக அன்று தந்தை செல்வா குரல் கொடுத்தார், இன்றும் முஸ்லிம் மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்கின்றது; அது எமது தார்மீகப் பொறுப்பாகும்.

இன்று உங்களை எல்லாம் இந்த இடத்திலே சந்திப்பது மிகுந்த மனமகிழ்வைத் தருகின்றது; தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இவ்வாறு ஒற்றுமையாக இருப்பது காலத்தின் கட்டாயமாகவும் அமைந்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டார், இந்நிகழ்விலே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மின், எம்.கே.சிவாஜிலிங்கம், கஜதீபன், பரஞ்சோதி, ஜெயசேகரம் மற்றும் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட், உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள். வடக்கு மாகாண ஆளுனர் அவர்களின் செயலர் இளங்கோவன், மாவட்ட செயலர் என்.வேதநாயகன் உட்பட உயர் அதிகாரிகள், மற்றுமம் இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் மீளாய்வு ஆரம்பம்

image_pdfPRINT

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கிடப்பில் போடப்பட்ட சித்திரவதைகள் தொடர்பான ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் மீளாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் பல ஆயிரக் கணக்ககில் ஆணைக்குழுவுக்கு கிடைத்தன. அவை ஏழு தொடக்கம் எட்டு ஆண்டுகள் கடந்தவை. சில அதற்கு மேற்பட்ட காலப் பகுதியைக் கொண்டவை என்று அவர் கொழும்பு ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸுக்கு தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு வரை கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக் கோவைகள் ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளன. அலுவலகத்தை சுத்தப்படுத்த பணிக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களால் அவை மீட்கப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது.

காணாமல் ஆக்கப்படுதல், தடுப்புக் காவல் சித்திரவதை, தடுத்துவைத்தல் மற்றும் காரணமின்றிய கைதுகள் ஆகியன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பெறப்படுகின்றன பொதுவான முறைப்பாடுகளாகும் காணாமற்போனோர் அலுவலகம் நிறுவப்பட்ட பின்னர், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் அந்த அலுவலகத்தால் விசாரணை நடத்தப்படும். எனினும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே கையாளும் என்று கலாநிதி தீபிகா உடகம மேலும் தெரிவித்தார்.

மாவீரன் பொ.சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல்

image_pdfPRINT

தமிழ் இனத்தின் விடுதலைக்காக முதல் முதல் சயனைட் அருந்தி வீர காவியமான மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ம் ஆண்டு நினைவேந்தல் 5ம் திகதி உரும்பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது.

1974ம் ஆண்டு தமிழ் இனத்தின் விடுதலைக்காக வீரகாவியமான பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் 5ம் திகதி காலை 9. 30 மணிக்கு உரும்பிராய் சந்தியில் உள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்.பல்கலையின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் 8 ஆம் திகதி – பட்டம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்

image_pdfPRINT

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 33வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் ஜுன் மாதம் 8ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.

இப்பட்டமளிப்பு வைபவத்தில் நேரடியாகப் பட்டம் பெறுவோருக்கு கீழ்குறிப்பிட்ட திகதிகளில் பட்டமளிப்பு அங்கிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விக்கிளையில் வழங்கப்படும். பட்டமளிப்பு வைபவத்திற்கான அங்கிகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடியதான பல்கலைக்கழக அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையினைக் காண்பித்தல் வேண்டும்.

பட்டமளிப்பு விழாவின்போது புகைப்படம் மற்றும் DVD யினை எடுப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட புகைப்படப்பிடிப்பாளரிடம் பட்டமளிப்பு அங்கி பெற்றுக்கொள்ளும் தினமன்றே புகைப்படம் மற்றும் DVD பிரதிகளுக்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு பட்டதாரி மாணவா;கள் வேண்டப்படுகின்றனர். குறித்த புகைப்படம் மற்றும் DVD பிரதிகளுக்கான கட்டண விபரங்களையூம் தமக்காக குறித்தொதுக்கப்பட்ட பட்டமளிப்பு அமா;வூ விபரங்களையூம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விக்கிளையின் விளம்பரப் பலகையில் பாh;வையிடலாம். மேற்குறித்த விபரங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத்தளத்திலும் பாh;வையிடலாம்.

05.06.2018 (செவ்வாய்க்கிழமை) மு. ப. 09.00 – 12.00, பி. ப. 02.00 – 04.00

• விவசாய விஞ்ஞானமாணி
• மருத்துவமாணிஇ சத்திரசிகிச்சைமாணி
• மருத்துவ விஞ்ஞானமாணி
• பொறியியல் விஞ்ஞானமாணி
• விஞ்ஞானமாணி(சிறப்புஃபொது)
• கணணி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி
• பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி
• கலைமாணி(சிறப்பு)

06.06.2018 (புதன்கிழமை) மு. ப. 09.00 – 12.00, பி. ப. 02.00 – 04.00
• கலைமாணி(பொது)
• நுண்கலைமாணி (சங்கீதம்இநடனம்இ சித்திரமும் வடிவமைப்பும்)
• பட்டப்பின்படிப்பு பட்டதாரிகள்

குறிப்பு: பட்டதாரிமாணவர்கள் கல்விக்கிளையினால் வழங்கப்படும் தொழில் பெறு இயலுமைக்கான கேள்விக் கொத்தினைப் பெற்று முறையாகப் பூரணப்படுத்தி பட்டமளிப்பு அங்கிகளை பெறுவதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

பதிவாளர்

டெங்கு காய்ச்சலால் கிளிநொச்சியில் ஒருவர் உயிரிழப்பு

image_pdfPRINT

டெங்­குத் தொற்­றால் கிளி­நொச்­சி­யில் ஒரு­வர் நேற்று உயிரிழந்­துள்ளார் என மருத்துவமனை தரப்­புத் தெரி­வித்­தது. மாவட்­டத்­தில் இந்­த­வ­ரு­டம் இது­வரை 126 பேர் டெங்கு நோய்த்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர் என்று புள்­ளி­வி­வ­ரம் தெரி­வித்­தது.

தரு­ம­பு­ரம் உழ­வ­னூ­ரைச் ச.கோவிந்­த­ராசா (வயது – 48) குடும்­பத் தலை­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­தார் .

10 நாள்­க­ளுக்கு முன்­னர் கொழும்­புக்­குச் சென்­றி­ருந்த இவர் கடந்த 5 நாள்­க­ளா­கக் காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்­டி­ருந்­தார். பிர­தே­சத்­தி­லுள்ள தனி­யார் மருந்­த­கம் ஒன்­றில் சிகிச்சை
பெற்­றார், குண­ம­டை­ய­வில்லை. அதன்­பின்­னரே நேற்­றுக்­காலை கிளி­நொச்சி பொது மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

சேர்க்­கும்­போது ஆபத்­தான நிலை­யில் அவர் இருந்­தார் என்று உற­வி­னர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது. எலிக்­காய்ச்­சல் கார­ண­மாக இருக்­க­லாம் என்­றும் பேசப்­பட்­டது. உறு­திப்­ப­டுத்தி அறி­விக்க இறந்­த­வ­ரின் குருதி மாதிரி பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்­டது.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் டெங்கு விழிப்­பு­ணர்வு மற்­றும் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் கடந்த சில மாதங்­க­ளா­கக் குறை­வ­டைந்­துள்­ளன. உயி­ரி­ழந்­த­வ­ரது பிர­தே­சத்­தில் புகை­யூட்­டலோ அல்­லது வேறு தடுப்பு நட­வ­டிக்­கை­களோ எடுக்­கப்­ப­ட­வில்லை. இது­வும் இந்த நிலைக்­குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதில் இனிக் கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று பிர­தேச மக்­கள் கோரு­கின்­ற­னர்.

தேசிய தொற்­று­நோய்த் தடுப்­புப் பிரி­வின் இணை­யத்­த­ளத்­தி­லுள்ள தர­வு­க­ளின்­படி கிளி­நொச்சி மாவட்­டத்­தில் இந்­த­வ­ரு­டம் இது­வரை 126 பேர் டெங்கு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

எம்முடன் இருப்பதே மைத்திரிக்கு பாதுகாப்பானது – ரணில்

image_pdfPRINT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முரண்பாடுகள் மீண்டும் தீவிரமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் , நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரதமர் தங்களுடனான கூட்டணியைத் தொடர்வதே ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பான அணுகுமுறையாக அமையும் என்று கூறியதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசணையை கொண்டிருப்பதாக தெரிகின்றது.

ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைத்து கொள்வதிலும் ஜனாதிபதி நாட்டம் காட்டுகின்றார் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இவ்வாறு அவர் செய்வாரேயானால் , அது அவருக்கு பாதகமானதாகவே இறுதியில் முடியும் என்றும் பிரதமர் விக்ரமசிங்க குறிப்பிட்டதாக தெரியவருகின்றது.

கடந்தவாரம் கொழும்பு – இலங்கை மன்ற கல்லூரியில் நடைப்பெற்ற காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் நினைவுதின வைபத்திற்கு அழைப்பில்லாது சென்று கலந்துகொண்ட ஜனாதிபதி சிறிசேன தன்னைப்பற்றியே கூடுதலாக விமர்சித்திருந்தமை குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்திய விக்ரமசிங்க , அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து காலத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் 2020 வெற்றி இலக்கை மையப்படுத்திய 18 மாதகால திட்டவியூகம் வகுக்கப்பட்டிருப்பதால் அதற்காக நாம் எல்லோரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதே இன்று முக்கியமானது என்றும் ஊடகவியலாளர்களிடம் கூறியதாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

கோத்தபாய ராஜபக்ஷ தீவிரமான பிரசாரங்களில் இறங்கியிருக்கின்றார். களத்தில் அவரது பிரவேசத்தை பருவம் முந்தியதாகவே நான் கருதுகின்றேன். அவர் இவ்வாறு செய்வதற்கு பிரதான காரணம் அவரது இளைய சகோதரர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலாகும் என்று நம்புகின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை அது எமக்கு எவ்விதத்திலும் பிரச்சினையில்லை. நாட்டுமக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியே எம்மை தெரிவு செய்தார்கள். அந்த மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்மை அர்ப்பணிப்பதே அவசியமானது. இதற்காகவே 18 மாதகால திட்டவியூகம் வகுத்திருக்கின்றோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டதாக கூறப்படுகின்றது.

தனது கடந்த வாரத்தைய யாழ்ப்பாண விஜயம் குறித்து கருத்து வெளியிடுகையில் , அரசியல் நோக்கங்களுக்காக வடக்கு அரசியல்வாதிகள் மத்தியல் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை நிராகரிக்க கூடாது. அவ்வாறு செய்வதால் மக்களின் வாழ்வாதாரத்தை அது மிகவும் மோசமாக பாதிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

error: Content is protected !!