SHARE

டெங்­குத் தொற்­றால் கிளி­நொச்­சி­யில் ஒரு­வர் நேற்று உயிரிழந்­துள்ளார் என மருத்துவமனை தரப்­புத் தெரி­வித்­தது. மாவட்­டத்­தில் இந்­த­வ­ரு­டம் இது­வரை 126 பேர் டெங்கு நோய்த்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர் என்று புள்­ளி­வி­வ­ரம் தெரி­வித்­தது.

தரு­ம­பு­ரம் உழ­வ­னூ­ரைச் ச.கோவிந்­த­ராசா (வயது – 48) குடும்­பத் தலை­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­தார் .

10 நாள்­க­ளுக்கு முன்­னர் கொழும்­புக்­குச் சென்­றி­ருந்த இவர் கடந்த 5 நாள்­க­ளா­கக் காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்­டி­ருந்­தார். பிர­தே­சத்­தி­லுள்ள தனி­யார் மருந்­த­கம் ஒன்­றில் சிகிச்சை
பெற்­றார், குண­ம­டை­ய­வில்லை. அதன்­பின்­னரே நேற்­றுக்­காலை கிளி­நொச்சி பொது மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

சேர்க்­கும்­போது ஆபத்­தான நிலை­யில் அவர் இருந்­தார் என்று உற­வி­னர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது. எலிக்­காய்ச்­சல் கார­ண­மாக இருக்­க­லாம் என்­றும் பேசப்­பட்­டது. உறு­திப்­ப­டுத்தி அறி­விக்க இறந்­த­வ­ரின் குருதி மாதிரி பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்­டது.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் டெங்கு விழிப்­பு­ணர்வு மற்­றும் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் கடந்த சில மாதங்­க­ளா­கக் குறை­வ­டைந்­துள்­ளன. உயி­ரி­ழந்­த­வ­ரது பிர­தே­சத்­தில் புகை­யூட்­டலோ அல்­லது வேறு தடுப்பு நட­வ­டிக்­கை­களோ எடுக்­கப்­ப­ட­வில்லை. இது­வும் இந்த நிலைக்­குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதில் இனிக் கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று பிர­தேச மக்­கள் கோரு­கின்­ற­னர்.

தேசிய தொற்­று­நோய்த் தடுப்­புப் பிரி­வின் இணை­யத்­த­ளத்­தி­லுள்ள தர­வு­க­ளின்­படி கிளி­நொச்சி மாவட்­டத்­தில் இந்­த­வ­ரு­டம் இது­வரை 126 பேர் டெங்கு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

Print Friendly, PDF & Email