Home Blog Page 294

யாழில் பூனையால் ஏற்பட்ட களேபரம்

image_pdfPRINT

யாழ். சுன்னாகத்தில் இயங்கி வரும் உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்ட பூனையொன்றினால் இன்று புதன்கிழமை(06) முற்பகல் களேபரம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகம் இன்று(06) காலை முதல் வழமை போன்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் முற்பகல் -10.30 மணியளவில் உடுவில் பகுதியிலிருந்து கால்நடை வைத்திய அலுவலகத்துக்குப் பூனையொன்று சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

கூடையொன்றுக்குள் அடைத்துப் பாதுகாப்பான முறையில் பூனையைக் கொண்டு வந்த குடும்பப் பெண்மணி கால்நடை வைத்தியர் முன்னிலையில் பூனையை எடுத்து விட முற்பட்டுள்ளார்.

இதன்போது சற்றும் எதிர்பாராத வகையில் குறித்த பூனை அங்கிருந்து சடுதியாக ஓட்டம் பிடித்தது. பூனையைக் கொண்டு வந்த பெண்மணி பூனையைத் தேடி ஓட்டம் பிடிக்கவே அங்கு ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. குறித்த பெண்மணியுடன் இணைந்து அங்கு நின்ற வேறு பலரும் பூனையை வைத்திய அலுவலக வளாகத்தில் தேடியுள்ளனர்.

வைத்திய அலுவலகத்தில் கால்நடைக்குச் சிகிச்சை பெறும் நோக்குடன் வந்த இன்னொரு பெண்மணி குறித்த பூனை வைத்திய அலுவலகத்தின் மதில் பாய்ந்து வெளியே சென்றுள்ளதைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வைத்திய அலுவலகச் சுற்றுச் சூழலில் குறித்த பூனையை வலைவீசித் தேடிய போதும் குறித்த பூனை இறுதிவரை அகப்படவேயில்லை.

இந்நிலையில் பூனையைச் சிகிச்சைக்காகக் கொண்டுவந்த பெண்மணி ஓட்டம் பிடித்த பூனை இல்லாமல் தன்னால் வீடு செல்ல முடியாது எனக் கவலையுடன் தெரிவைத்துள்ளார்.

இதற்கான காரணம் தொடர்பில் அவரிடம் வினாவிய போது அவர் தெரிவித்த கருத்துக்கள் தான் என் மனதைத் தொட்டது.

குறித்த பூனையை யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றின் ஓய்வுநிலை ஆசிரியையொருவர் கடந்த ஒரு வருட காலமாக மிகுந்த செல்லத்துடன் வளர்த்து வருகிறார்.மேற்படி ஆசிரியை திருமணம் செய்து கொள்ளாத காரணத்தால் அவருக்குப் பிள்ளைகள் யாருமில்லை. இதுவே அவர் இந்தப் பூனை மீது அதிக பாசம் வைப்பதற்குக் காரணமாகும்.

மேற்படி ஆசிரியை தனது மாதாந்த ஓய்வூதியச் சம்பளத்தில் பெரும் பகுதியைக் குறித்த பூனை வளர்ப்புக்குச் செலவிடுகிறார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாகப் பூனைக்கு ஏற்பட்ட ஒருவித நோய்த் தாக்கம் காரணமாக கடந்த நான்கு நாட்களாகப் பூனை உணவுப் பொருட்கள் எதுவும் உண்ணவில்லை.

இதனால் மனமுடைந்த ஓய்வுநிலை ஆசிரியை தானும் உரிய வேளைகளில் உணவுண்ணாமல் அடிக்கடி அழுதவாறும்,கவலைப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் தான் குறித்த ஓய்வுநிலை ஆசிரியையின் மச்சாள் முறையான பெண்மணி உடுவில் பகுதியிலிருந்து முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்திக் குறித்த பூனையை சிகிச்சைக்காகக் கொண்டு வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களை ஏமாற்ற முற்பட்ட ஆசாமி மாட்டினார்

image_pdfPRINT

தன்னையொரு கிராம சேவகர் எனவும், சமாதான நீதவான் எனவும் அடையாளப்படுத்திப் பொதுமக்களை ஏமாற்ற முயன்ற நபரொருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு பதவிகளையும் கூறிப் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு இந்த நபர் முற்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட சிலர் கையும் மெய்யுமாகப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

யாழ். கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரைத் தடுத்துவைத்துப் பொலிஸார் விசாரணைகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்ட சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்

image_pdfPRINT

மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அந்தச் சிறுவன் உயிரிழந்தான் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (5) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் ஸ்ரீ மனோகரன் மர்வின் என்ற சிறுவனே உயிரழந்தார்.

“மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் சிறுவனின் தந்தை வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்று வீடு திரும்பிய போது, தான் கொண்டு வந்த பையில் சொக்லெட் வகைகள் உள்ளதாகவும் அதனை எடுத்து சாப்பிடுமாறும் தனது மகனுக்கு கூறியுள்ளார்.

சிறுவன் தனது தந்தை கொண்டு வந்த பையினுள் சொக்லெட்டுக்களை தேடும் பொழுது சிறுவனது கையில் மருந்துவில்லைகள் காட் ஒன்றே கிடைத்துள்ளது. அந்த மருந்து வில்லைகளை சொக்லெட் என நினைத்து சிறுவன் உட்கொண்டுள்ளான்.

இதனை அறிந்து கொண்ட வீட்டார் சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, மஸ்கெலியா வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டு பின்னர், கிளங்கன் வைத்தியசாலையில் இருந்து கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையிலேயே சிறுவன் உயிரிழந்தான்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடம் கட்டாயம்

image_pdfPRINT

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சுகாதாரம் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தும் வகையில் தரம் 6இல் இருந்து தரம் 9வரை கட்டாய பாடமாக சுகாதாரம் உள்ளது. 2023ஆம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாராண தரப் பரீட்சையில் சுகாதாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கல்வீ மறுசீரமைப்புக் குழு முன்வைத்த யோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவால் முன்வைக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பில் சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் ஆண்டு தோறும் இடம்பெறும் உயிரிழப்புகளில் சுமார் 75 சதவீதமானவை தொற்றாநோயின் காரணமாக ஏற்படுவதாக புதிய புள்ளிவிவர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

72.5 சதவீதமான மக்கள் காய்கறி மற்றும் பழவகைகளை போதுமான அளவு உணவில் சேர்த்துக்கொள்வதில்லை என்றும் பெண்களில் சுமார் 44 சதவீதமானோர் உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சுகாதாரம் தொடர்பான சரியான அறிவின்மையே இதற்கான மிக முக்கிய காரணமாகும். இந்த நிலமையை தவிர்க்கும் வகையில் சுகாதார வாழ்க்கை முறையைக் கொண்ட நாடாக முன்னெடுப்பதற்கு சுகாதாரம் தொடர்பில் சரியான தெரிவு இருப்பது அவசியமாகும்.

இதனால் சுகாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவுறுத்துவது அத்தியாவசிய ஒன்றாக மாறியுள்ளது.
இதற்காக தற்பொழுது பாடசாலை கற்கைநெறி பரிந்துரைகளில் தரம் ஆறிலிருந்து தரம் 9 வரையில் மாத்திரம் சுகாதார பாடத்தினை கட்டாயக் கற்கைநெறியாக கற்பிக்கப்படவுள்ளதுடன் இப்பாடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் கட்டாயமாகக் கொள்ளப்பட மாட்டாது.

அதனடிப்படையில், சுகாதார பாடத்தை க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்ற வேண்டும் என்று சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மருத்துவர் ராஜித சேனாரத்ன முன்வைத்த யோசனைகளை 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பாடத்திட்ட சீர்த்திருத்தின் போது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கல்வி மறுசீரமைப்புக்கான அறிஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளையும் கவனத்திற் கொண்டு, பாடசாலை பாடப்பரப்பு திருத்தங்கள் தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தினை கொண்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபார்களையும் பெற்றுக் கொண்டதன் பின்னர் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ் மொழி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? இனி முறையிடலாம்

image_pdfPRINT

தமிழ் மொழியில் எழுதப்படவில்லையா, தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளதா? அவை தொடர்பில் அறிவிக்குமாறு அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்கள் தமது மொழி தொடர்பில் இழைக்கப்படும் தவறுகளை பின்வரும் சமூக ஊடகங்கள் ஊடாக அறிவிக்க முடியும் என அரச கரும மொழிகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தொலைபேசியில் 1956 என்ற துரித இலக்கத்துக்கும் வைபர், வட்சப் மற்றும் இமோ அகிய சமூக ஊடகங்களில் 0714854734 என்ற இலக்கத்துக்கும் அறிவிக்க முடியும்.

ஜேசிபி வாகனத்தில் பவனி வந்த சாமி – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்

image_pdfPRINT

தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது.

சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது.

சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தச் சம்பவம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை பலராலும் வியப்பாகப் பேசப்படுகிறது.

கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளால் ஆளுநர் செயலகம் முற்றுகை

image_pdfPRINT

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆளுநர்  செயலகத்திற்கு முன்பாக முற்றுகையிட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொண்டராசிரியர் நேர்முகப் பரிட்சையில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் பெயர்கள் வெளியிடப்பட்ட போதும்  அவர்களுக்கான நிரந்த நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் மற்றும் ஆசிரிய போட்டியில் சித்தியடைந்தவர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்கக் கோரியே திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் படுகொலை வழக்கு ; சந்தேக நபர்கள் விடுதலையாகவுள்ளதாக தகவல்

image_pdfPRINT

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலை வழக்கின் சந்தேக நபர்களான ஐந்து பொலிசாரில் மூவர் வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

யாழ்.பல்கலைகழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் , நடராஜா கஜன் ஆகிய இரு மாணவர்கள் மீது  கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி அன்று யாழ்.பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரு மாணவர்களும் உயிரிழந்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் 11 மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
குறித்த வழக்கு எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அந்நிலையில் சந்தேக நபர்கள் ஐந்து பேரில் மூவர் மீது குற்றசாட்டுக்கள் இல்லை என அவர்களை முற்றாக வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் , ஏனைய இருவர் மீது குற்றப்ப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
அதேவேளை மாணவர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி யாழ்.பல்கலை கழக மாணவர்கள் போராட்டம் நடாத்திய போது , மாணவர் ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட மாணவ பிரதிநிதிகளை கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்புக்கு அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மாணவர்கள் படுகொலை தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு மூன்று மாத கால பகுதிக்குள் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுன்னாகத்தில் அதிகாலையில் கொள்ளை

image_pdfPRINT

யாழ்.சுன்னாகம் பகுதியில் காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது. 

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள கால் நடை மருத்துவ மனையில் காவலாளியாக கடமையாற்றும் காவலாளியிடம் இருந்தே நகை பணம் என்பவ கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெயரியவருவதாவது ,
நான்கு பேர் கொண்ட கொள்ளைக்குழு இன்று புதன்கிழமை அதிகாலை கால் நடை மருத்துவ மனைக்குள் அத்துமீறி உள்நுழைந்து அங்கு கடமையில் ஈடுபட்டு இருந்த காவலாளியின் சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்வற்றை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து தப்பி சென்று உள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளபப்ட்டு உள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு

image_pdfPRINT

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்களுக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு வவுனியா ஈரப்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் இலங்கை தேசியக் கொடியை ஏற்றாமை தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர் வரும் 20 ஆம் திகதி இந்த விசாரணை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரின் தலைமையகத்தில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கான அழைப்பாணையை பயங்கரவாத தடுப்புப்பிரிவின் யாழ் பிராந்திய அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சரை நேரில் சென்று அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கியுள்ளனர். அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள போதும் அன்றைய திகதியில் அமைச்சருக்கு வேறு வேலைகள் இருப்பதால் பிறிதொரு திகதியில் தனது முறைப்பாட்டை வழங்க முடியும் என அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கான திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தியாகி பொன்.சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்

image_pdfPRINT
தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 44ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் நடைபெற்றது.
யாழ். உரும்பிராய் சந்திக்கருகில் அமைந்துள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் காலை 09.30 மணியளவில் நடைபெற்றது.
தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார்.
அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1984ஆம் ஆண்டு ஜீன் மாதம் 05ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்ட போது சயனைட் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் அருந்தி உயிர் நீர்த்த மாவீரர் இவர் என்பது குறிப்படத்தக்கது.

‘சட்டத்தில் சிறு திருத்தம் போதுமானது’

image_pdfPRINT

சி.தவராசாவின் கருத்துக்கு பலர் மறுப்பு

மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கு மகாவலி அதிகாரசபையில் சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதுமானது என எதிர்கட் சி தலைவர் சி.தவராசா கூறிய கருத்தை, பலரும் மறுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை கடந்த 4ம் மாதம் 10ம் திகதி வடமாகாணசபை உறுப்பினர்கள் 22 பேர்
நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இதன் தொடர் நடவடிக்கையாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து பேசி தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடை யிலான கலந்துரையாடல் வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை  மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.
இதன்போது மாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கையில் ,
திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பதற்கு அடிப்படை பிரச்சினைகளுக்கு த் தீர்வினை காணவேண்டும். அதாவது மகாவலி அதிகாரசபை சட்டத்தில் சிறு மாற்றம் ஒன்றை கொண்டுவந்தாலே போதுமானது. இங்கு பேசப்படும் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என தெரிவித்தார். 
அதனை அடுத்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றில் 50 வீத ஆதரவு தேவை. அதனை சிங்களவர்கள் தருவார்களா? என கேள்வி எழுப்பினார். 
அதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் சி.தவராசா நீங்கள் அரசுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். உங்களுக்கு தரமாட்டார்களா? என கேள்வி எழுப்பினார்.
அதனை அடுத்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இன்றைக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் அவர்கள் ஆதரவு தரமாட்டார்கள். 
ஆகவே 50 வீதமான ஆதரவு பெறுவதென்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. மேலும் சிங்கள குடியேற்றங்களை வெறுமனே மகாவலி அதிகாரசபையில் பணியாற்றும் ஒரு ஊழியர் செய்யவில்லை. இந்த குடியேற்றங்களின் பின்னால் அரசாங்கத்தின் பாரிய திட்டமிடல்கள் உள்ளன என்றார். 
அதனை தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், முன்னாள் ஆளுநர் பளிகக்காரவுடன் ஒருதடவை பேசியிருந்தபோது மகாவலி அதிகாரசபை சட்டத்தில் சிறு மாற்றம் செய்தால் போதுமானது என அவர் தமக்கு கூறியிருந்ததாக கூறினார்.
error: Content is protected !!