SHARE

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சுகாதாரம் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தும் வகையில் தரம் 6இல் இருந்து தரம் 9வரை கட்டாய பாடமாக சுகாதாரம் உள்ளது. 2023ஆம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாராண தரப் பரீட்சையில் சுகாதாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கல்வீ மறுசீரமைப்புக் குழு முன்வைத்த யோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவால் முன்வைக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பில் சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் ஆண்டு தோறும் இடம்பெறும் உயிரிழப்புகளில் சுமார் 75 சதவீதமானவை தொற்றாநோயின் காரணமாக ஏற்படுவதாக புதிய புள்ளிவிவர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

72.5 சதவீதமான மக்கள் காய்கறி மற்றும் பழவகைகளை போதுமான அளவு உணவில் சேர்த்துக்கொள்வதில்லை என்றும் பெண்களில் சுமார் 44 சதவீதமானோர் உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சுகாதாரம் தொடர்பான சரியான அறிவின்மையே இதற்கான மிக முக்கிய காரணமாகும். இந்த நிலமையை தவிர்க்கும் வகையில் சுகாதார வாழ்க்கை முறையைக் கொண்ட நாடாக முன்னெடுப்பதற்கு சுகாதாரம் தொடர்பில் சரியான தெரிவு இருப்பது அவசியமாகும்.

இதனால் சுகாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவுறுத்துவது அத்தியாவசிய ஒன்றாக மாறியுள்ளது.
இதற்காக தற்பொழுது பாடசாலை கற்கைநெறி பரிந்துரைகளில் தரம் ஆறிலிருந்து தரம் 9 வரையில் மாத்திரம் சுகாதார பாடத்தினை கட்டாயக் கற்கைநெறியாக கற்பிக்கப்படவுள்ளதுடன் இப்பாடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் கட்டாயமாகக் கொள்ளப்பட மாட்டாது.

அதனடிப்படையில், சுகாதார பாடத்தை க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்ற வேண்டும் என்று சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மருத்துவர் ராஜித சேனாரத்ன முன்வைத்த யோசனைகளை 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பாடத்திட்ட சீர்த்திருத்தின் போது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கல்வி மறுசீரமைப்புக்கான அறிஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளையும் கவனத்திற் கொண்டு, பாடசாலை பாடப்பரப்பு திருத்தங்கள் தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தினை கொண்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபார்களையும் பெற்றுக் கொண்டதன் பின்னர் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Print Friendly, PDF & Email