Home Blog Page 290

13 லட்சம் தபால்கள் நாடுமுழுவதும் தேக்கம்

image_pdfPRINT

தாபல் தொழிற்சங்கங்களின் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தால்டி 13 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் தேங்கிக்கிடப்பதாக தபால் மா அதிபர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன.

தபால் சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் தொழிற்சங்கத்தினர் கடந்த நான்கு நாள்களாக தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே தபால் விநியோக மத்திய நிலையம் உள்பட நாடுமுழுவதும் 13 இலட்சத்துக்கும் அதிகமான தபால்கள் தேங்கிக் கிடங்கின்றன என்று தபால் மா அதிபர் அலுவலம் சுட்டிக்காட்டியுள்ளது.

“எமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வை இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை. எமக்கான தீர்வு கிடைக்கும்வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்” என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

பதுளையில் கொடூரம் ; கடையில் பரவிய தீயில் சிக்கிய மூன்று பெண்கள் பலி

image_pdfPRINT

பதுளை – பசறை நகரின் கடையொன்றில் பரவிய தீயில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.

இன்று (14) அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ விபத்தில் கடையின் பின்புறமாக அமைந்துள்ள அறையொன்றில் தங்கியிருந்த கடை உரிமையாளரின் தாய், மகள் மற்றும் உறவுமுறை பெண் ஒருவர் ஆகிய மூவருமே பலியாகியுள்ளனர்.

திடீரென பரவிய தீயினில் சிக்குண்ட மூவரும் வெளியில் வரமுடியாத நிலையிலேயே இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீ விபத்திற்கு மின் ஒழுக்கு காரணமாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

போலி நியமனங்கள் வடக்கில் தாராளம் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

image_pdfPRINT

“யாழ்ப்பாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு 63 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு போலியான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் போலியான கையோப்பமிட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 3 இலட்சம் ரூபாவரை பணம் பெற்றே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன”

இந்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வடமராட்சி கரவெட்டி இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்களாக 63 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இன்று காலை அறிந்துகொண்டேன்.

அதனையிட்டு நான் சந்தோசமடைந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். அதனால் அவர் இந்த நியமனங்களை வழங்கியிருப்பார் என நினைத்தேன்.

ஆனால் அந்த நியமனங்கள் அனைத்தும் போலியானவை என நான் இப்போது அறிந்துகொண்டேன். போலியான ஆவணங்களை வழங்கி 63 பேருக்கு முகாமைத்துவ உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ளவர்கள் யாரோ 3 -4 லட்சம் ரூபாவரை பணத்தைப் பெற்றுக்கொண்டு, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் பதவி முத்திரையிட்டு அவரது போலியான கையொப்பத்துடன் நியமனம் வழங்கியுள்ளார்கள் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு 17 பேர், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு 15 பேர், யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் பாடசாலைக்கு 7 பேர் என மொத்தமாக 63 பேருக்கு போலியான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் புன்னியவான் எங்கிருக்கிறாரோ தெரியாது. அவர் இன்று கோடீஸ்வரன் என்பதை மறந்திடக் கூடாது.

அந்தப் பணத்தில் கல்வி இராஜாங்க அமைச்சருக்கும் ஒரு பகுதி கொடுத்தது என்று யாரும் சொல்லிடக் கூடாது.

யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் பலர் இருந்தாலும் ஏமாறுகிறார்கள்.இந்த ஏமாற்றும் இருக்கக் கூடாது” என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

தனியார் போக்குவரத்துச் சேவைகளுக்கான நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் வழங்கல்

image_pdfPRINT

வடக்கு மாகாண தனியார் போக்குவரத்துச் சேவைகளுக்கான நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழில் இன்று நடைபெற்றது.

யாழ் கிறீன் கிறாஸ் விடுதியில் இன்று காலை நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் நிரந்தர வழி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.
வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவரும் முன்னாள் மன்னார் மாவட்ட அரச அதிபருமான நீக்கிளாஸ்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் போக்குவரத்து அதிகாரசபையின் உறுப்பினர்கள் போக்குவரத்துச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவிகளை சீரழித்த ஆசிரியர் கற்பித்த கல்விநிலையம் கொழுத்தப்பட்டது.

image_pdfPRINT

வட்டுக்கோட்டைப் பகுதியில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் கற்பித்த
தனியார் கல்வி நிறுவனம் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் பயில வந்த பதின்ம வயதுச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச் சாட்டில் கணித பாட ஆசிரியர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் கல்விகற்பிக்கும் 41 வயதான கணிதபாட ஆசிரியரே கைதானார்.

இந்த நிலையிலேயே கல்வி நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு ஆறு மாத கடூழிய சிறை – நீதிமன்றம் அதிரடி

image_pdfPRINT

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு 50 ஆயிரம் நட்ட ஈடும், 3 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில், பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என நீதிமன்றால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதிமன்றால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

சிறுமிகளை சீரழித்த பிரபல பாடசாலை ஆசிரியர் யாழில் கைது

image_pdfPRINT

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்தமை மற்றும் சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான அவரை, பாடசாலை நிர்வாகமும் இடைநிறுத்தியுள்ளது.

“வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியரால், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் அலுவலகருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

அவர் தனது முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்“ என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் வட்டுக்கோட்டையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கின்றார். அவரை பாடசாலையிலிருந்து நீக்குமாறு பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கமும் பெற்றோரும் கடும் அழுத்தங்களை வழங்கினர்.

இந்த நிலையில் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னகர்வுகள் தொடர்பில் பொலிஸார், பாடசாலை அதிபருக்கு அறிவித்திருந்தனர்.

அதனையடுத்து ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்

கடற்படையினர் நீர் எடுப்பதைக் கட்டுப்படுத்தவேண்டும் – ஏகமனதாகத் தீர்மானம்

image_pdfPRINT

பொன்னாலையில் இருந்து கடற்படையினர் நன்னீர் எடுத்துச் செல்வதை உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலி.மேற்கு பிரதேச சபையின் நான்காவது கூட்டம் இன்று (13) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர் ந.பொன்ராசா, பொன்னாலையில் கடற்படை தண்ணீர் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பிரேரணை கொண்டுவந்தார். இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இப்பிரேரணையைச் சபையில் முன்வைத்து உரையாற்றிய பொன்ராசா, கடற்படை தினமும் 50 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 65 ஆயிரம் லீற்றர் வரையான நன்னீரை எடுத்துச் செல்கின்றனர் எனவும் இந்நிலை தொடர்ந்தால் பொன்னாலை மக்கள் குடிதண்ணீருக்காக அலையவேண்டிய நிலை ஏற்படும் எனச் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொன்னாலை நன்னீர் வளம் குறைந்த பிரதேசமாகும். கடலுக்கு மிகச் சமீபத்தில் இக்கிராமம் அமைந்துள்ளதால் கடல்நீர் மிக இலகுவாக நிலத்தடி நீரை மாற்றக்கூடிய அபாயம் உள்ளது.

இங்கு முன்னோர்கள் தமது ஆன்மீக, விஞ்ஞர்ன ஆய்வுகள் மூலம் கண்டறிந்த இடங்களில் அமைத்த ஒருசில கிணறுகளே இன்றும் நன்னீர் வளம் மிக்க கிணறுகளாக உள்ளன.

பொன்னாலை குடிநீர் விநியோகத் திட்டத்தில் உள்ள இரு கிணறுகளில் இருந்து கடற்படையினர் எடுத்துச் செல்லும் நன்னீரை சுழிபுரம் சம்பில்துறையில் முகாமிட்டுள்ள கடற்படையினர் குளிப்பதற்கும் அந்த கடற்படை முகாமிலும் அங்குள்ள பௌத்த விகாரையிலும் உள்ள மரக்கன்றுகளுக்கு ஊற்றுவதற்கும் பயன்படுத்துகின்றனர்.

தினமும் இவ்வாறு அதிகளவான நன்னீர் எடுத்துச் செல்லப்படுவதால் பொன்னாலையில் நன்னீர் வளம் அற்றுப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

பொன்னாலை குடிதண்ணீர் விநியோகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தினமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நீர் விநியோகிக்கப்படுகின்றது. ஆனால், கடற்படையினர் இரவு பகலாக நன்னீரைச் சுரண்டிச் செல்கின்றனர்.

இச்செயற்பாட்டால் பொன்னாலையில் உள்ள நன்னீர்க் கிணறுகள் உவர் நீராக மாற்றமடைந்து வருகின்றன. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மக்கள் நன்னீர் எடுத்துப் பருகிய சில கிணறுகள் இப்போது உவர் நீராக மாற்றமடைந்துள்ளன. இங்கு விவசாயச் செய்கை மற்றும் மரக்கறிப் பயிற்செய்கை என்பனவும் பாதிப்படைந்துள்ளன.

இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் பொன்னாலையில் அறவே குடிதண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். பொன்னாலை குடிதண்ணீர் விநியோகத் திட்டத்தையும் பிரதேச சபை கைவிடவேண்டிய நிலை வரும். மக்கள் தண்ணீருக்கு அலையவேண்டி ஏற்படும்.

கடற்படையின் இந்தச் செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்காக கடந்த சில வருடங்களாக தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், குறித்த கிணறுகள் அமைந்துள்ள காணியைக் கடற்படையினர் கொள்வனவு செய்துள்ளனர் எனக் காரணம் காட்டி அதிகாரிகள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

ஒரு காணியைக் கொள்வனவு செய்து வீடு கட்டினால் அங்கு நாம் வசிக்க முடியுமே தவிர விபச்சாரம் செய்ய முடியாது. அதுபோல், கடற்படையினர் அந்தக் காணியை வாங்கிவிட்டார்கள் என்பதற்காக எமது இயற்கை வளத்தைச் சுரண்டிச் செல்வதை அனுமதிக்க முடியாது.

இதேவேளை, கடற்படையினரின் நீர்ச்சுரண்டலுக்கான மின்சாரக் கட்டணத்தை எமது வலி.மேற்கு பிரதேச சபையே இதுவரை செலுத்திக்கொண்டிருக்கின்றது. அத்துடன், அங்கு படையினர் அமைத்துள்ள மினி முகாமுக்கும் 24 மணிநேர மின் விநியோகத்திற்கான கட்டணத்தையும் பிரதேச சபையே செலுத்துகின்றது.

பிரதேச சபை அதிகாரிகள் இதுவரை இச்செயற்பாட்டைத் தொடர்ந்தமை விசனத்திற்குரியது. பொன்னாலையில் வீதிகளுக்கு மின்விளக்குகளைப் பொருத்துவதற்கு நிதி இல்லை எனக் கூறுகின்ற எமது இந்தச் சபை, கடற்படைக்கு எவ்வாறு மின்கட்டணத்தைச் செலுத்த முடியும்?

எனவே, இது மக்களின் அடிப்படைத் தேவை என்ற ரீதியில், இதைத் தடுத்து நிறுத்தவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் வலி.மேற்கு பிரதேச சபைக்கு உண்டு. பிரதேச சபை உடனடியாக நீர்வளச் சபையைத் தொடர்புகொண்டு உரிய ஆய்வை மேற்கொள்ளவேண்டும். கடற்படை தினமும் 10 ஆயிரம் லீற்றருக்கு மேற்பட்ட நீரை எடுத்துச் செல்வதை அனுமதிக்கக்கூடாது.

கடற்படையினர் நீரைப் பெறுவதற்கான மின்சாரக் கொடுப்பனவு மற்றும் கடற்படை மினி முகாமுக்கான மின் விநியோகக் கொடுப்பனவு என்பவற்றை வலி.மேற்கு பிரதேச சபை இனிச் செலுத்தக்கூடாது.

இதுவரை பிரதேச சபையால் செலுத்தப்பட்ட மின் கட்டணத்தைக் கடற்படையினரிடம் இருந்து மீள அறவிட்டு பொன்னாலையில் மின் விளக்குகளைப் பொருத்த அந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும். – என்றார்.

இந்துக்களின் எதிர்ப்பால் பதவியை துறந்தார் மஸ்தான்

image_pdfPRINT

இந்துக் கலாசார பிரதி அமைச்சை தவிர்த்து மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

இந்து கலாசார அமைச்சை இந்து மதம் சாராத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிப்புக்கள் எழுந்த நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கசாதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

“இந்து கலாசார பிரதி அமைச்சுப் பொறுப்பை எனது கட்டுப்பாட்டிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூல கோரிக்கையை இன்று முன்வைத்தேன்.

அதுதொடர்பில் சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தருமாறு பதிலளித்துள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சை நான் கேட்டுப் பெற்றுக்கொண்டேன். அவற்றுடன் இணைந்து இந்து கலாசார அமைச்சும் உள்ளது. அதனால்தான் இந்துக் கலாசார அமைச்சுப் பொறுப்பும் என்னிடம் வந்தது.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சை மட்டும் நான் வைத்துக் கொள்வதற்காக மீளவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும்.

அதற்காக ஜனாாதிபதியை நாளை சந்திக்கின்றேன்” என்று பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்தார்.

பாவப்பட்ட பணப்பையிலிருந்த 963 ரூபாவைக் காணவில்லை!

image_pdfPRINT

வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசாவின் வீட்டு வாசலில் நேற்று வைக்கப்பட 7 ஆயிரம் ரூபா சில்லறைகள் நிறைந்த ‘பாவப்பட்ட பண’ ப்பையிலிருந்த 963 ரூபாய் பணத்தை காணவில்லை என யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை கறுப்பு சட்டை போட்ட சிலரே நடத்தினார்கள் வடமாகாண சபை நடத்தவில்லை. அதனால் நான் வடமாகாண சபைக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்பி தர வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா சபையில் கோரி இருந்தார்.

இதனையடுத்து கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் , எதிர்க்கட்சி தலைவர் கோரிய பணத்தினை திருப்பி கொடுக்க ‘பாவப்பட்ட பணம்’ எனும் பெயரில் ஆளுக்கு ஒரு ரூபா வீதம் சேகரித்து நேற்றைய தினம் (13) வடமாகண சபைக்கு குறித்த பணத்தினை ஒரு பையினில் கொண்டுவந்த போது அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

பின்னர்  “பாவப்பட்ட பணம் ” என எழுதப்பட்ட குறித்த பண பொதியினை கொக்குவிலில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் வீட்டுக்கு கொண்டு சென்ற மாணவர்கள் வீட்டு வாசலில் பண பொதியினை கட்டி விட்டு சென்றனர்.

இதனையடுத்து வீட்டு வாசலில் பொதி ஒன்று கட்டப்பட்டு உள்ளமையை கண்ட எதிர்கட்சி தலைவரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களான பொலிசார், யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதனையடுத்து  அங்கு சென்ற பொலிசார் பொதியினை மீட்டு ஆராய்ந்த போது பொதியினுள் 6 ஆயிரத்து 37 ஒரு ரூபாய் குற்றிகள் மட்டுமே காணப்பட்டன என தெரிவித்தனர்.

7 ஆயிரம் ரூபா குறித்த பொதியினுள் உள்ளன என்ற போதிலும் மீதி 963 ரூபாவை காணவில்லை என தெரிவித்துள்ளனர்.

யாழில் ஊடகவிலாளர் மீது அச்சுறுத்தல்

image_pdfPRINT

யாழில்.ஊடகவியலாளர் ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி உள்ளார் என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான த. வசந்தரூபன் என்பவரை இன்று காலை இனம் தெரியாத நபர் ஒருவர் இடைமறித்து இணையத்தளத்தில் பதிவேற்றி உள்ள செய்தி ஒன்றினை அகற்றகோரியுள்ளார்.
அதற்கு தனக்கும் அந்த இணையத்திற்கும் தொடர்பு இல்லை என கூறியுள்ளார். அதனை அடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடக்கு கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனின் தாயார் காலமானார்

image_pdfPRINT

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோரின் தாயார் கந்தையா நாகம்மா இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர் வரும் 15.06.2018 அன்று காலை 10 மணிக்கு கட்டப்பிராய் யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.என உறவினர் அறிவித்துள்ளனர்

error: Content is protected !!