Home Blog Page 29

சவேந்திர சில்வாவை தடை செய்ய தொடரும் பிரித்தானியாவில் தொடரும் முயற்சிகள்!

image_pdfPRINT

மதிப்பிற்குரிய சாரா சுல்தானா எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பு

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் கோவென்ட்ரி தெற்கு (Coventry South) பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சாரா சுல்தானா எம்.பி (Hon. Zarah Sultana) அவர்களுடன் இராஜதந்திர சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை (07/12/2023) மதியம் 12.00 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமாக சர்வதேச மையத்தின் (ICPPG) சார்பில் திரு. றோய் ஐக்‌ஷான் கலந்துகொண்டார். அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான பாவிலன் ஐயம்பிள்ளை, மால்ஷன் சுதர்ஷன், கனகசபாபதி கார்த்திகேசன், அமல்ராஜ் ஜெயக்குமார், மற்றும் ராஜேஸ்வரன் ஜனார்த்தனன் ஆகியோரும் கலந்து கொண்டு, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டையும் எடுத்துரைத்தார். ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு (FCDO) போதுமான ஆதாரங்களை சமர்பித்த போதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார்.

சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.

கருத்துக்களையும் உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் தனது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்துடன், ஈழத் தமிழர்களின் கோரிக்கையையும் ஆதங்கத்தையும், தனது பகுதியில் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தான் பிரித்தானிய அரசிற்கு எடுத்துரைப்பதாகவும், FCDO இதுவரை நடவடிக்கை எடுக்காமைக்கு காரணத்தை கேட்டு கடிதம் அனுப்புவதாகவும் வாக்களித்தார். அந்துடன் திரு. கீத் குலசேகரம் கேட்டுக்கொண்டபடி தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு (APPGT) மற்றும் மக்நெட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுக்களில் (APPG for Magnitsky Sanctions) இணையவும், FCDO விற்கு தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி தன்னாலான வகையில் அழுத்தம் கொடுப்பதாகவும் வாக்களித்தார்.

பாலியாறு பெருக்கெடுப்பு- மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது

image_pdfPRINT

மன்னாரில் நேற்றைய தினம் மதியம் முதல் இன்று அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ள துடன் மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது.

குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது .

அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் கடும் மழை காரணமாக ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், சாந்திபுரம் போன்ற கிராமங்களும் தீவுக்கு வெளியில் தேத்தாவட, தேவன் பிட்டி, மூன்றாம் பிட்டி போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகள் தின நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள்

image_pdfPRINT

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10.12.2023) இலண்டனின் பார்நெட் (Barnet) நகரில் இல் நடைபெற்றது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அவற்றினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் இந்த மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டன் பார்நெட் நகரில் அமைந்துள்ள Multi Cultural Community Centre இல் பிற்பகல் 2.00 மணிமுதல் 6.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பார்னட் நகர மேயர் கவுன்சிலர் நாகுஸ் நரேந்திரா அவர்களும் சிறப்பு விருந்தினராக பிரித்தானியாவின் பார்னட் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் துணைத்தலைவருமான மதிப்பிற்குரிய திரேசா வில்லியம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் மனித உரிமைகள் தொடர்பிலான சிறப்பு பேச்சாளர்களின் உரைகள் TIC யின் 2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் விருது மறைந்த இயக்குனர் திரு வரதகுமார் ஞாபகார்த்த விருது மற்றும் மனித உரிமைகள் சார்ந்த கலை நிகழ்வுகள் என பெருமளவிலான மக்களின் வருகையுடன் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில் மேற்படி நிகழ்வினை சிறப்பாக முன்னெடுப்பதற்கு பல வழிகளில் செயலாற்றிய TIC யின் செயற்பாட்டாளர்கள் நிகழ்வின் இறுதியில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அந்தவகையில் செயற்பாட்டாளர்களான றோய் ஜாக் ஷன் ஜேசுதாஸ், கஜானன் சுந்தரலிங்கம், அனுசன் பாலசுப்பிரமணியம், இன்பராஜ் பத்திநாதர், லக் ஷ்மன் திருஞானசம்பந்தர், டிலக்‌ஷன் மனோரஜன், விஜய் விவேகானந்த், புகழினியன் விக்டர் விமலசிங்கம், சிதம்பர சுப்பிரமணியம் திருச்செந்தில்நாதன், கோகுலன் குணசீலன், ரூபன் மத்தியாஸ், கனிஸ்டன் விமலதாசன், வசந்தி அரவிந்தன், சிந்துஜா ஜெயன், துஷானி ராஜவரோதயம், அஜய் குமார் கணேஸ் குமார், நிசாந்தன் நித்தியானந்தன், அனோஜன் சிவசிதம்பரம், றொனால்ட் அன்ரனி உதயகுமார், றொகான் அன்ரனீஸ் உதயகுமார், றொனிஸ்ரன் அன்ரனீஸ் உதயகுமார், நிலக்சன் சிவலிங்கம், லம்போதரன் நாகராசா, பவிஷன் போல் ராஜ், பவிஷன் போல்ராஜ், அருணோதயன் சுப்பிரமணியம், தர்சன் நிர்மல், அபிந்தன் சுப்பிரமணியம், முரளீதரன் விஜயசுந்தரம், செனவிரட்ண பண்டார, பிரியங்கன் அருமைராசா, கோகுலன் சிவ சிதம்பரம், பிரியதர்சன் கனகலிங்கம், சசீஸ்கண்ணா நடராஜா, தேவராசா கஜன், சர்வேந்தினி பேரின்பநாயகம், சுகன் விக்ணேஸ்வரன், எபிநேசர் கனேசலிங்கம், பிரசாந் இராசரத்தினம், தனுஷாத் மரியநேசன், டிலான் சசிகரன், கனகசபாபதி கார்த்திகேசன், தனபால் சுப்ரமணியம், அயுட்சன் அருள்தாஸ், இராசரட்ணம் டனிதன், இரட்ணசிங்கம் ஜனனன், மநுமயூரன் கிருபானந்த மநுநீதி, விதுரா விவேகானந்தன், சசிகரன் செல்வசுந்தரம், அழகேந்திரம் நிறோஜன், கணேசமூர்த்தி விதுஷன், நவரட்ணம் கிருஷாந், மால்சன் சுதர்சன், ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் மீட்பு!

image_pdfPRINT

தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்தே இந்த வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்தன.

இது தொடர்பான ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற கடலோர பொலிஸார், சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளில் மொத்த மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாயளவில் இருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tamil Information Center (TIC) Shines a Spotlight on Human Rights Advocacy in London: Celebrating World Human Rights Day 2023

image_pdfPRINT

Tamil Information Center (TIC) marked the annual celebration of World Human Rights Day 2023 in Barnet, London, on Sunday (10), aligning with the International Human Rights Day observed globally. This event has become a significant tradition for TIC, serving as a platform to acknowledge the United Nations’ designated World Human Rights Day and to shed light on the persistent human rights violations faced by the Tamil people in Sri Lanka, as well as various ethnic groups worldwide. The aim is to amplify voices against these injustices and bring them to the attention of the international community.

In recognition of the 75th year since the inception of Human Rights Day, TIC organized the event at the Multi-Cultural Community Center in Barnet, London, from 2:00 pm to 6:00 pm. Under the theme “Dignity, Freedom, and Justice for All,” the Human Rights Day proceedings commenced with the lighting of an auspicious lamp.

The event featured a Tamil language greeting song, drawn from Vibulananda Adikalar’s novel “Keerthimalai,” specifically resonating with Sri Lankan Tamils. Councillor Nagus Narendra, the Mayor of Barnet, graced the occasion as the Chief Guest, while Honourable Theresa William, British Member of Parliament for Barnet Constituency and Deputy Chairperson of the British All-Party Parliamentary Committee for Tamil People, was the distinguished special guest.

Keynote addresses were delivered by Dr. Andy Higginbottom, a professor of international politics at Kingston University, and Mr. Andy Bailey, director of the All-Party Parliamentary Committee for the Prevention of Genocide. The event saw the presence of religious leaders, political figures, human rights activists, academics, and TIC activists.

A significant highlight of the ceremony was the presentation of the Human Rights Awards 2023 by TIC to Frances Harrison, director of the International Truth and Justice Project (ITJP), and Bashana Abeyawardane, a journalist and human rights activist. Frances Harrison, a former journalist and UN consultant, has been a vocal advocate against ongoing human rights violations and military repression in Sri Lanka, particularly those targeting the Tamil people. Bashana Abeyawardane was recognized for his courageous efforts in confronting human rights abuses.

Dr. Siva Thiagaraja, an author and researcher in human genetics, received the prestigious late Varadakumar Memorial Award, honouring one of the founders and former operators of TIC.

The event also showcased a documentary advocating for the establishment of a Tamil Heritage Center in Britain. A project proposal and request were formally presented to the Mayor on behalf of TIC’s Cultural Department and CCD.

Adding to the cultural richness of the celebration, Alan Pradeepan’s RAB musical and a play titled “I Am Buried” by London’s Meiveli Theatre Artists captivated the audience. The proceedings included expressions of gratitude towards volunteers and a lucky draw.

Presided over by Mr. Geeth Kulasegaram, one of TIC’s directors, the event was skilfully hosted by activists  Dilakshan Manorajan and Subhamakisa Varadarasa, underscoring the commitment of TIC to promoting and safeguarding human rights for all.

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023

image_pdfPRINT

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டனின் பார்நெட் (Barnet) நகரில் இல் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை நினைவுகூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அவற்றினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி ஐ.நா. மனித உரிமைகள் தினத்தை அறிமுகப்படுத்தி 75 ஆவது ஆண்டான நடப்பாண்டில் TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டன் பார்நெட் நகரில் அமைந்துள்ள Multi Cultural Community Centre இல் பிற்பகல் 2.00 மணிமுதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

அனைவருக்குமான கண்ணியம் சுதந்திரம் மற்றும் நீதி (Dignity, Freedom and Justice for All) என்ற கருப்பொருளை மையமாக் கொண்ட TIC யின் மேற்படி மனித உரிமைகள் தின நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

விபுலானந்த அடிகளார் நாவலர் கீர்த்திமாலை என்னும் நூலில் தமிழ்மொழி வாழ்த்து என்று குறிப்பிடப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களுக்கே உரித்தான தமிழ் மொழி வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக பார்னட் நகர மேயர் கவுன்சிலர் நாகுஸ் நரேந்திரா அவர்களும், சிறப்பு விருந்தினராக பிரித்தானியாவின் பார்னட் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் துணைத்தலைவருமான மதிப்பிற்குரிய திரேசா வில்லியம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அதே வேளை இந் நிகழ்வின் சிறப்பு பேச்சாளர்களாக கிங்ஸரன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியரும் மனித உரிமை மற்றும் சமூக நீதியாளருமான கலாநிதி அன்டி கிகின்பொட்டம் (Dr Andy Higginbottom) அவர்களும் இனப்படுகொலைகளை தடுப்பதற்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் இயக்குனர் அன்டி பெய்லி (Mr Andy Bailey) அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அத்துடன் மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கல்வியலாளர்கள் மற்றும் TIC யின் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதான சிறப்பம்சமாக TIC யினால் வழங்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் விருதுகள் இம்முறை இருவருக்கு வழங்கப்பட்டது.

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் (ITJP) இயக்குனரும் முன்னாள் ஊடகவியலாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் ஐ.நா.வின் ஆலோசகருமான பிரான்சிஸ் ஹரிசன் (Frances Harrison) அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயலாற்றிவரும் ஊடகவியலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பாசனா அபேவர்த்த (Bashana Abeyawardane) அவர்களுக்கும் மேற்படி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

TIC யின் நிறுவனர்களில் ஒருவரும் முன்னாள் இயங்குனருமான மறைந்த வரதகுமார் அவர்களின் ஞாபகார்த்த விருது எழுத்தாளரும் மனித மரபியல் கல்வி ஆய்வாளருமான வைத்தியர் சிவா தியாகராஜா (Dr Siva Thiagaraja) அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் பிரித்தானியாவில் தமிழர் பண்பாட்டு மையம் (Tamil Heritage Centre) ஒன்றை உருவாக்குற்கான தேவை தொடர்பிலான ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதுடன், அதற்கான திட்ட முன்மொழிவும் கோரிக்கையும் நகர மேயரிடம், TIC மற்றும் CCDயின் பண்பாட்டு பிரிவின் சார்பில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் சிறப்பு கலைநிகழ்வாக, அலன் பிரதீபன் அவர்களின் மனிஉரிமைகள் தொடர்பிலான “றப்” இசையும், இலண்டன் மெய்வெளி அரங்க கலைஞர்களின் “நான் புதைக்கப்பட்டவன்” என்ற சிறப்பு நாடகமும் இடம்பெற்றன. அத்துடன் தொண்டர்களுக்கான மதிப்பளிப்பு மற்றும் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு என்பவையும் சிறப்புற இடம்பெற்றன.

இந்த நிகழ்வு TIC யின் பணிப்பாளர்களில் ஒருவரான திரு கீத் குலசேகரம் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றதுடன், செயற்பாட்டாளர்களான செல்வன் டிலக்‌ஷன் மனோரஜன் மற்றும் செல்வி சுபமகிசா வரதராசா ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் – அனுஷன் பாலசுப்பிரமணியம்

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023

image_pdfPRINT

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டன் பார்நெட் (Barnet) இல் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை நினைவுகூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அவற்றினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி TIC யின் இவ்வாண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டன் பார்நெட் (Barnet) நகரில் அமைந்துள்ள Multi Cultural Community Centre இல் பிற்பகல் 2.00 மணிமுதல்; 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

அனைவருக்குமான கண்ணியம் சுதந்திரம் மற்றும் நீதி (Dignity freedom and Justice for All) என்ற கருப்பொருளை மையமாக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த மனித உரிமைகள் தின நிகழ்வில், பிரதம விருந்தினராக பார்னட் நகர மேயர் Cllr.Nagus Narenthira அவர்களும் சிறப்பு விருந்தினராக பிரித்தானியாவின் பார்னட் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் துணைத்தலைவருமான Rt.Hon.Theresa Villiers உம் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அதேவேளை, இந் நிகழ்வின் சிறப்பு பேச்சாளர்களாக கிங்ஸரன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியரும் மனித உரிமை மற்றும் சமூக நீதியாளருமான DR Andy Higginbottom  அவர்களும் இனப்படுகொலைகளை தடுப்பதற்கான APPG யின் இயக்குனர் Andy Bailey அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.

இதனிடையே இந்நிகழ்வின் பிரதான சிறப்பம்சமாக TIC யினால் வழங்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் விருதுகள் இம்முறை இருவருக்கு வழுங்கப்படவுள்ளது. உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் (ITJP) இயக்குனரும் முன்னாள் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் ஐ.நா.வின் ஆலோசகருமான Frances Harrison அவர்களும், ஊடகவியலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான Bashana Abeywardane அவர்களும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

TIC யின் முன்னாள் இயங்குனர் மறைந்த வரதகுமார் ஞாபகார்த்த விருது எழுத்தாளரும் மனித மரபியல் கல்வி ஆய்வாளருமான Dr. Siva Thiagarajah அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

இதே வேளை மனித உரிமைகள் சார்ந்த கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உலகளாவிய ரீதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும் – எதிர்க்கட்சி

image_pdfPRINT

உக்ரைன் விவகாரத்தில் உடனடியாகப் பதிலளித்ததை போன்று பாலஸ்தீன விவகாரத்திலும் வெளிப்படையான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அக்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தவும், நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இரண்டு மாதங்களாக இஸ்ரேலிய விமானப்படை பாலஸ்தீனத்தில் குண்டுவீசி வருவதாகவும், வடக்கில் உள்ள பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த கிராமங்களையும் குடியிருப்புகளையும் விட்டு தெற்கே செல்வதாகவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலில் அனைத்து பாடசாலைகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் குறிப்பிட்டார்

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரி போராட்டம்!

image_pdfPRINT

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினரால் இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சம்பள உயர்வு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு கோரி அதிபர் ஆசிரியர் சங்கத்தினால் இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை மறித்து பொல்துவ சந்தியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆசிரியர் – அதிபர் சங்கப் பிரதிநிதிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பத்தரமுல்ல – பொல்துவ சந்தியில் ஆசிரியர் சங்கங்களினால் பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களுக்கான போதியளவு நிதி ஒடுக்கப்படாத காரணத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டம் காரணமாக பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவு வீதியும் முற்றாக தடைப்பட்டிருந்தது.

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை?

image_pdfPRINT

பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில்  2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்“ மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டில் திறமையானவர்கள் பலர் உள்ளனர்.

எனவே கிரிகெட், காற்பந்து, வலைப்பந்து போன்ற அனைத்து விளையாட்டுகளுக்குமான  மைதானங்களை புனரமைப்பு செய்வதற்கு நிதி தேவைப்படுகின்றது. இத்தேவையை பிரதேச, தொகுதி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு  மூலம் செயற்படுத்த  முடிந்த போதிலும் இவை திறமையுள்ளவர்களுக்குச் சென்றடையாமல் அரசியல்வாதிகளுடன் நட்புடன் இருப்பவர்களையே சென்றடைவதைக்  காணக்கூடியதாக உள்ளது.

எனவே திறமையானவர்களை இனங்காண்பதற்கு நாங்களும் உதவுகின்றோம். அவர்களை இனங்கண்டு அவர்களுடைய திறமைகளை விருத்தி செய்வதற்குரிய முயற்சிகள் நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும்.

பாடகி  யொஹாணிக்கு கொழும்பில் வீடொன்றினை அமைத்துக் கொடுத்துள்ள அரசாங்கம் பிலிப்பைன்ஸ் சென்று நாட்டுக்கு 2  தங்கப் பதக்கங்களை வென்றுகொடுத்த  71 வயதான முல்லைத்தீவினைச் சேர்ந்த அகிலத்திருநாயகிக்குச்  செய்யப்போவது என்ன?

அதுமட்டுமல்லாது கொழும்பைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் Under 19 கிரிக்கட் குழுவில் தெரிவாகியுள்ளார். இவர் மேலும் முன்னேறிச் செல்லத் தேவையான வசதிகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்கின்றேன். இவர் கொழும்பை சேர்ந்தவர் ஆகினும் தமிழர் என்னும் அடிப்படையில் புறக்கணிக்காது அவருக்கான இடம் வழங்கப்பட வேண்டும். வட கிழக்கை சேர்ந்த பல திறமையானவர்கள் காலம் காலமாக ஒதுக்கப்பட்டு வருகின்றார்கள் இனிவரும் காலங்களில் அவர்களுக்கான களம் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.

மற்றும் செல்வசேகரன் ரிஷுதன் எனும் இளைஞன் 6 விதமான பந்து வீசும் திறமையுடையவராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவரை “முத்தையா” எனவும் அழைக்கின்றனர். மேலும் இவர் 4 ஓவர் இல் எந்தவித ஓட்டங்களும் எடுக்கப்படாமல் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை ஒரு பெரிய சாதனையாகும். இவர்களைப் போன்ற எமது நாட்டின் பொக்கிஷங்களை உள்வாங்கி இவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் : மீண்டும் செயற்படுத்த பிரித்தானியா திட்டம்

image_pdfPRINT

புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்புவதற்கான திட்டத்தை மீளமைத்து புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் ருவாண்டா நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்திற்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அடிகளை புகாததாக மாற்றும் ரிஷி சுனக்கின் குறிக்கோளின் ஒரு பகுதியாக, உள்துறைச் செயலாளர் ஜேம்ஸ், ருவாண்டாவுடன் ஒரு ஒப்பந்தத்தை முடிப்பதற்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

ருவாண்டாவில் உள்ள சட்ட அமைப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய பிரித்தானிய அரசாங்கம் வழக்கறிஞர்களை அனுப்பும் யோசனையை உள்துறை அலுவலகம் மிகக் கவனமாக கவனித்து வருவதாக அமைச்சர் லூசி ஃப்ரேசர் கூறினார்.

ருவாண்டா நீதிபதிகளுக்கு ஆலோசனை வழங்க பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் அனுப்பப்படலாம் என டெய்லி டெலிகிராப் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், இந்த வாரத்தில் ஒப்பந்தம் கைசேதப்படும் என்றும் அதன்பின்னர் பிரிட்டனுக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆப்பிரிக்க தேசம் பாதுகாப்பான இடம் என பிரித்தானிய நாடளுமன்றில் வலியுறுத்த முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

image_pdfPRINT

திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 25, 27 ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அரசாங்கமே நினைவு கூறலாம் என தெரிவித்துவிட்டு வடக்கு கிழக்கிலே மூதூர் சம்பூரை தவிர தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிசார் முயற்சி எடுத்து போது அனைத்து நீதிமன்றங்களிலும் நினைவு கூறுவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதேவேளை விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில் அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் அந்த நினைவேந்தல் நடைபெறமுடியும் எனவும் கட்டளை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த நினைவேந்தலில் கலந்துகொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் நியாயமில்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தை தெரிந்து அதனுள் போகாது நடந்து கொண்ட போதும் அவர்கள் மீது குறிவைக்கப்படுகின்றது. இதனை தமிழத் தேசிய மக்கள் முன்னணியாக கடுமையாக எதிர்க்கின்றோம்.

இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாது நாங்கள் இதை எதிர்நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இதனை எதிர்கொள்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

error: Content is protected !!