Home Blog Page 286

அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்

image_pdfPRINT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறினாலும் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தினை வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியதனால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் அமையப் போவதில்லை. காரணம் ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்க விலகுவதாக கூறியபோதிலும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து தமது நடவடிக்கைகளை கையாள்வதாக தெரிவித்துள்ளது.

ஆகவே அமெரிக்கா முன்னெடுத்த பணிகளை அவர்களின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் பலம்பொருந்திய மற்றொரு நாடு இலங்கை தமிழர் விடயங்களை கருத்திற் கொண்டு மனித உரிமைகள் பேரவையில் அழுத்தம் கொடுக்கும் என்றார்.

கைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் – எரான்

image_pdfPRINT

யுத்தத்தின்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி கைப்பற்றிய பொது மக்களின் காணிகளை படிப்படியாக உரிய மக்களுக்கு பெற்றுத் தருவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று 1990 சுவசெரிய மன்றம் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் வடக்கு தெற்கு என்ற பேதம் இல்லாது அனைவருக்குமான சேவைகள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தேசிய பாதுகாப்பு கருதி காணிகளை கைப்பற்ற வேண்டிய தேவை இருந்தது. எனினும் பொது மக்களின் காணிகளை படிப்படியாக உரிய மக்களுக்கு பெற்றுத் தருவோம். காணிவிடுவிப்பது குறித்து இந்த வாரமும் நிதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது என்றார்.

புதிய முறைமையில் தேர்தலை நடத்த விரும்பும் ஜனாதிபதி

image_pdfPRINT

மாகாண சபை தேர்தலை புதிய முறைமையின் பிரகாரம் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பான முக்கியமான கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் போதே அமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய முறைமையின் பிரகாரம் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக உள்ளார். இதன் பிரகாரம் விரைவில் எல்லை நிர்ணய அறிக்கை விவாதத்திற்கு எடுக்கப்படும் என்றார்.

எனினும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் புதிய முறைமையின் பிரகாரம் தேர்தல் நடத்துவது சிறுப்பான்மை இனத்தவர்களுக்கு பெரும் அநீதியாகும். சிறுப்பான்மை இன மக்களுக்கு சாதகமான தேர்தல் முறைமைக்கு ஆதரவளிப்போம். ஆகவே இந்த விவகாரத்தை இழுத்தடிப்பு செய்து தேர்தல் தாமதப்படுத்தாமல் பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை உடன் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் புதிய முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்த முடியாவிடின் பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை உடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினரும் வலியுறுத்தினர்.

ஆகவே மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக இணக்கம் இல்லாத நிலைமையை அடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளையில் விவாதம் நடத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த விவாதத்தின் போது அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை அறிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தமிழர்கள் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழைய தடை விதிப்பு

image_pdfPRINT

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 ஈழத் தமிழர்களின் பெயர் பட்டியலை சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெறும் 86 தனிநபர்கள் பட்டியலுடன் இந்த 14 ஈழத் தமிழர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (ரிஆர்ஓ), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (ரிசிசி) உள்பட 8 அமைப்புகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிடப்படும் புலம்பெயர் நாடுகளில் வாழும் 86 தனி நபர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே புலம்பெயர் நாடுகளில் வாழும் 100 பேர் இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

G 27901 (T) I-I Aikkiya Nadukal. Gov. Noti..pmd

மொட்டையடித்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள்

image_pdfPRINT

வவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர்.

வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றிலேயே குறிப்பிட்ட 25 மாணவர்களும் மொட்டையடிக்க சென்றுள்ளனர்.
சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் ஒரு மொட்டைக்கு 500 ரூபா கேட்ட நிலையில் குறித்த மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை மொட்டையடிக்காமல் பல்கலைக்கழகம் சென்றால் கனிஸ்ட மாணவிகளின் முன்னால் அரை நிர்வாணமாக நிறுத்தி சிரேஸ்ட மாணவர்கள் அடிப்பார்கள் என தெரிவித்த நிலையில் குறித்த சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் மனிதாபிமான அடிப்படையில் 50 ரூபாவிற்கு மொட்டையடித்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கருத்து தெரிவிக்கையில் ,

யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வவுனியா வளாகத்தின் சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை என்ற பெயரில் மனித உரிமை மீறல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
கல்வி கற்பதற்காக பல்கலைக்கழகம் வரும் கனிஸ்ட மாணவர்களை பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தின் மீது வெறுப்புணர்வையே ஏற்படுத்தும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

மைத்திரிபால எதையுமே செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் சாடல்

image_pdfPRINT

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சீர்திருத்த அரசு மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும், நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும், வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும், பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் என்று பலர் கருதிய போதிலும், அவர் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட போதிலும், சமூகங்கள் மத்தியில் பிணைப்பை அதிகரிக்க சிறிலங்கா அதிபர் எதனையும் செய்யவில்லை”

இவ்வாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் மனித உரிமைகள் கரிசனைகள்” என்ற தலைப்பில் நடந்த அமெரிக்க காங்கிரஸின் உப குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழுவின், ஆபிரிக்க, பூகோள சுகாதார, பூகோள மனித உரிமைகள், மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான உபகுழு, நேற்று “இலங்கையின் மனித உரிமைகள் கரிசனைகள்” என்ற தலைப்பில் அமர்வு ஒன்றை நடத்தியது.

இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கிய, உபகுழுவின் தலைவரான, கிறிஸ் ஸ்மித், தனது உரையில் தெரிவித்ததாவது:

“இலங்கையில் உள்நாட்டுப் போர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது, 25 ஆண்டு கால போரால், ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தனர்.

பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான கொடூரமான இன மோதல்களாக இந்த உள்நாட்டுப் போர் இடம்பெற்றது.

போரில் ஈடுபட்ட இருதரப்புகளான இலங்கை அரசின் ஆயுதப் படைகளும், தமிழ்ப் புலிகளும் கற்பனை செய்து பார்க்க முடியாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னமும் நீதி என்பது கண்ணிற்கு தென்படாத விடயமாகவே உள்ளது.

இரு சமூகங்கள் மத்தியிலான, அரசியல் துருவமயப்படுத்தல் அதிகரித்துள்ளது – என்றார்.

வடக்கு வீதிகள் சீரமைப்பு பற்றி ஆராய இந்திய நிபுணர் குழு வருகிறது

image_pdfPRINT

வடக்கு மாகாணத்தின் வீதி சீரமைப்பு தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசின் நிபுணர் குழுவொன்று விரைவில் வரவுள்ளது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய வாய்மூல கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்.

வடக்கில் மறுசீரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொடர்பாக தீர்மானிப்பதற்காக இந்திய நிபுணர்களின் குழு விரைவில் வரவுள்ளது.

இந்தச் செயற்பாட்டில் பங்கெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

முல்லைத்தீவையும், திருகோணமலையையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்படும்” என்று அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்தார்.

யாழில் ஆரம்பமாகிறது பட்டதாரிகளின் காலவரையற்ற போராட்டம்

image_pdfPRINT

“பட்டதாரிகளுக்குப் பட்ட இறுதித் திகதி அடிப்படையில் நியமனம் வழங்குதல் வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து வடமாகாணத்தில் நேர்முகத்தேர்வை எதிர்கொண்ட வடமாகாணப் பட்டதாரிகள் நாளை வெள்ளிக்கிழமை(22) முதல் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்றுப் புதன்கிழமை(20) யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக முக்கிய கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் இறுதியிலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை முற்பகல்-10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக யோகா தினம் யாழ்ப்பாணத்தில்..

image_pdfPRINT

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

யாழில் திருடனுக்கு கருணை காட்டிய தென்னந்தோட்ட உரிமையாளர்: நெகிழ்ச்சிச் சம்பவம்

image_pdfPRINT

யாழ். தென்மராட்சியில் தென்னம் தோட்டமொன்றில் திருட்டுத் தனமாகத் தேங்காய்கள் களவாடிய நபரொருவருக்கு தென்னந் தோட்ட உரிமையாளர் பெருமனதுடன் மன்னிப்பு வழங்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(20)பகல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பட்டப்பகல் வேளையில் சைக்கிளில் வந்த நபரொருவர் யாழ்.தென்மராட்சி கனகம் புளியடிச் சந்தியிலுள்ள தென்னந் தோட்டமொன்றில் தேங்காய்களைப் பறித்துக் கொண்டிருந்ததைத் தற்செயலாக அவ்விடத்திற்கு வருகை தந்த காணி உரிமையாளர் அவதானித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் ஒன்றுகூடிய இளைஞர்களின் உதவியுடன் தேங்காய் பறித்த திருடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இது தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் திருட்டில் ஈடுபட்ட நபரின் குடும்பக் கஷ்ர நிலைமையை அறிந்த காணி உரிமையாளர் அவருக்கு மன்னிப்பு வழங்கினார்.

பேச்சுக்கள் தோல்வி: தபால் ஊழியர்களின் போராட்டம் தொடரும்

image_pdfPRINT

தபால் அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்ததால் தபால் திணைக்கள ஊழியர்களின் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார இன்று மாலை 6.15 மணிக்கு இதனைத் தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை முனவைத்து கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மத்திய விநியோகப் பகுதி உள்பட தபால் திணைக்கள ஊழியர்கள் 24 ஆயிரம் பேர் நாடுமுழுவதும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் தொடர் போராட்டத்தின் 9ஆவது நாளான இன்று தபால் அமைச்சின் அதிகாரிகளுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று மாலை பேச்சுக்கள் இடம்பெற்றன.

அந்தப் பேச்சுக்களின் போது தபால் ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வை வழங்க அமைச்சு அதிகாரிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே தபால் ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான 9 நாள்கள் போராட்டத்தால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட தபால்கள் மற்றும் பார்சல்கள் நாடுமுழுவதும் தேங்கிக் கிடக்கின்றன.

மாவீரர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் யோசனையை மீண்டும் நிராகரித்தது அமைச்சரவை

image_pdfPRINT

மாவீரர் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை மூன்றாவது தடவையாகவும் நேற்று நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் சிங்கள நாளிதழில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி, இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சரவையில் இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது, ஜனாதிபதியும் அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்தமையால், நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று (19) மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட போது, அமைச்சர்கள் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த அமைச்சரவைப் பத்திரம், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக, பொதுமக்கள், வழிபாட்டு இடங்கள் மற்றும் போரில் இறந்த விடுதலைப் புலிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்களுக்கும் வழிபாட்டு இடங்களுக்கும் இழப்பீடு வழங்குவதை தாம் எதிர்க்கவில்லை என்றும், ஆனால், போரில் இறந்த விடுதலைப் புலிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!