SHARE

தபால் அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்ததால் தபால் திணைக்கள ஊழியர்களின் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார இன்று மாலை 6.15 மணிக்கு இதனைத் தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை முனவைத்து கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மத்திய விநியோகப் பகுதி உள்பட தபால் திணைக்கள ஊழியர்கள் 24 ஆயிரம் பேர் நாடுமுழுவதும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் தொடர் போராட்டத்தின் 9ஆவது நாளான இன்று தபால் அமைச்சின் அதிகாரிகளுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று மாலை பேச்சுக்கள் இடம்பெற்றன.

அந்தப் பேச்சுக்களின் போது தபால் ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வை வழங்க அமைச்சு அதிகாரிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே தபால் ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான 9 நாள்கள் போராட்டத்தால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட தபால்கள் மற்றும் பார்சல்கள் நாடுமுழுவதும் தேங்கிக் கிடக்கின்றன.

Print Friendly, PDF & Email