Home Blog Page 15

Steve Tukwell MP இன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஈழத் தமிழ் இளையோர்

image_pdfPRINT

நிபந்தனைகயின் அடிப்படையில் பிரித்தானியாவின் கன்சர்வேர்ட்டி கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செயலாற்றிவரும் தமிழ் இளையோர் செயற்பாட்டாளர்கள் குழு அக்கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான Hon. Steve Tukwell MP அவர்களின் பிரச்சார பணியில் கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள பிரித்தானியாவின் பொதுத்தேர்தல் இஎதிர்வரும் யூலை மாதம் நடைபெறவுள்ளது. அந்தவகையில் ஆளும் கட்சியான கன்சர்வேர்ட்டிவ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் பெரும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொள்ள தமது பிரச்சார பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் புலம் பெயர் தமிழர்களும் வாக்குகளின் எண்ணிக்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளாக உள்ளனர் என்பது மறுப்பதுக்கில்லை.

இந்நிலையிலேயே இந்த சர்ந்தப்பத்தினைப்பயன்படுத்தி தமிழினப்படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழ் செயற்பாட்டாளர்கள் பலர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் கைகோர்த்துள்ளனர்.

சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொண்டு நீதி வழங்குவதோடு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானியா தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழர்களின் தனிநாட்டு தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரச்சார பணியில் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் பெருமாள் தலைமையில் சிவதீஸ்வரன் கஜந்த், துரைசிங்கம் துவாரகன், திரு சிவகாந்த், அலகரத்னம் நிரோஜன், சந்திரவர்மன் மேகலக்சன், நிலானி சந்திரபர்மன், யோகானந்தம் ஜெஸ்லின் உதயராணி, ரூபன் மதியாஸ், அன்ஜெலோ நிருசான், இன்பராஜ் பத்தினத்தார், பவானந்தன் தர்மகுலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளருக்கான ஆதரவுப் பிரச்சாரத்தில் முனைப்புடன் ஈடுபடும் தமிழ் இளையோர்!

image_pdfPRINT

பிரித்தானியாவில் பொதுத்தேர்தலில் முதல் தடவையாக களமிறங்கியுள்ள ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட வேட்பாளர் கிரிஷ்னி ரேஷேகரோன் (Chrishni Reshekaron) இற்கான தேர்தல பிரச்சாரத்தில் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.

எதிர் வரும் யூலை மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முதல் தடவையாக ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட இரு தமிழ் பெண் வேட்பாளர்கள் தொழிலாளர் கட்சி சார்பில் கமிறங்கியுள்ள நிலையில் அவர்களுக்கான ஆதரவுப் பிரச்சாரப்பணிகளை தமிழ் இளையோர் செயற்பாட்டாளர்கள் முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே பிரித்தானிய தொழில்கட்சி சார்பாக சட்டன் மற்றும் சீயாம் (Sutton and Cheam) பகுதியில் போட்டியிடவுள்ள கிரிஷ்னி ரேஷேகரோனிற்கhக கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் இளையோர் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

ஈழத்து பூர்வீக தமிழ் பெண் வேட்பாளரை பிரித்தானிய பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் ஈழுத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான நீதி மற்றும் தமிழீழு கொள்கைக்கான ஆதரவினை பிரித்தானிய அரசிடமிருந்து பெறமுடியும் என்ற நிபந்தனையுடன் ஆதரவுப் பிரச்சாரப்பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் பெருமாள் தலைமையில் சிவதீஸ்வரன் கஜந்த், துரைசிங்கம் துவாரகன், திரு சிவகாந்த், அலகரத்னம் நிரோஜன், சந்திரவர்மன் மேகலக்சன், நிலானி சந்திரபர்மன், யோகானந்தம் ஜெஸ்லின் உதயராணி, ரூபன் மதியாஸ் அன்ஜெலோ நிருசான், இன்பராஜ் பத்தினத்தார், பவானந்தன் தர்மகுலசிங்கம் ஆகிய செயற்பாட்டாளர்களே மேற்படி பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய மனித உரிமை செயற்பாட்டளர்கள் மற்றும் தமிழ் இளையோர்

image_pdfPRINT

பிரித்தானியாவின் பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகளில் தேர்தல் பரப்புரைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இதில் தமிழினப்படுகொலைக்கான நீதி மற்றும் தனித்தமிழீழ கொள்கைக்கு ஆதரவம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையில் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கான ஆதரவுப்பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையிலேயே எதிர்வரும் யூலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ; Devid Pinto Duschinsky இற்காக கடந்த சனிக்கிழமை (8) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் கீத்குலசேகரம் இளையோர் ஒருங்கிணைப்பாளர் லக்சன் தாமேதரன், மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பெருமாள் தலைமையிலான புகழினியன் விக்டர் விமலசிங்கம், சுபேக்கா வேலுமகிழும், அனுஷன் பாலசுப்ரமணியம் ஆகிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு பிரச்சாரப்பணியில் ஈடுபட்டனர்.

பொதுவேட்பாளராகும் தகுதி எனக்கு உள்ளது : அனந்தி சசிதரன் தெரிவிப்பு!

image_pdfPRINT

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பெண்வேட்பாளராக களமிறங்குவதற்கான தகுதி தனக்கு உள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், சிவில் அமைப்புக்கள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண் வேட்பாளரை களமிக்குவதற்கே முனைப்பு காட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் நாட்டின் வெற்றியாக அமைய வேண்டும்!

image_pdfPRINT

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கப்பெறுகின்ற இறுதித் தீர்மானமானது, தனிப்பட்ட நபரின் வெற்றி அல்ல எனவும் அது ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியாகவே அமையவேண்டும் எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற, நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இறுதி முடிவுகள் தனிப்பட்டவை அல்ல. மாறாக நாட்டின் வெற்றியாகும். நாட்டின் பொருளாதார ரீதியான வங்குரோத்து நிலையை பற்றி பலரும் பேசுகிறார்கள். அதனை நான் ஏற்றுகொள்ளப்போவதில்லை.

இந்த நாடு பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி அரசியல் ரீதியாகவும் வங்குரோத்தடைந்துள்ளது என்பதே உண்மையாகும். இவை இரண்டும் பிரித்துப் பார்க்க முடியாத பிரச்சினைகளாகும்.

நாட்டில் சரியான பொருளாதார முறைமை இன்மையே அதற்கு காரணமாகும். நாட்டில் இதுவரையிலும் இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதாரமே காணப்பட்டது.
யுத்தத்திற்கு பின்னர் துரிதமான பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடிப்பதற்கான வாய்ப்பு நாட்டுக்கு கிடைத்திருந்தது.

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களின் பின்பும் நாம் அந்த முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஒரு ஆசனத்தை வென்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் பிரதமர் அல்லது ஜனாதிபதியாக பதவியேற்றதில்லை.

ஆனால் இலங்கையில் அது நடந்தது. நாட்டின் அரசியல் வங்குரோத்து நிலையே அதற்கு காரணமாகும். இந்தத் தேர்தலில் தீர்மானிக்கப்படுவது எனது வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல.

நாடு தோற்கடிக்கப்படுமா? இல்லையா? என்பதையே இந்த தேர்தல் தீர்மானிக்கும்.
இன்று அரசியல் வாதிகள் பலதரப்பட்ட வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அவர்களில் எவரும் நாட்டின் முன்னேற்றுத்துக்கான கொள்கைகளை முன்மொழியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரும், அநுர குமார திசாநாயக்கவும் எந்த இடத்தில் விவாதம் செய்வது என்பது குறித்து ஒரு மாத காலமாக முரண்படுகின்றனர். இறுதியாக இன்னமும் ஒரு தீர்மானத்திற்கு வரவும் இல்லை.

இவர்களில் ஒருவரிடத்திலும் நாட்டின் முன்னேற்றத்திற்கான கொள்கைகள் இல்லை.
உங்கள் எதிர்காலத்தை பொறுப்பேற்க அவர்கள் தயாராக இல்லாத பட்சத்தில்
உங்களின் எதிர்கால முன்னேற்றத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளின் சேவைக் காலம் நீடிப்பு!

image_pdfPRINT

அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளின் சேவைக் காலத்தையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை நாட்டின் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை இலகுவாக பேணுவதற்கு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தின் அடிப்படையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் இந்த முடிவின் மூலம், டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் சேவைக் காலம் முடிவடையவுள்ள முப்படைத் தளபதிகள் மற்றும் அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொனீபா உலகக்கிண்ண தொடரில் இரண்டாம் இடத்தை பெற்றது தமிழீழ அணி

image_pdfPRINT

சம்பியனானது சாப்மி

கொனீபா உலகக்கிண்ண தொடரின் இறுதியாட்டத்தில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட தமிழீழ அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
சற்று முன்னர் நடைபெற்று முடிந்த இறுதியாட்டயத்தில் 2-1 என்ற கோல்க் கணக்கில் தமிழீழ அணியை வெற்றி கொண்ட சாப்மி அணி சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெற்று வரும் மகளீர் உலகக்கிண்ண தெடரின் இறுதியாட்டம் ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரான நோர்வேயில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறது.
இதில் தமிழீழ மகளீர் அணியும் சாப்மி மகளீர் அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் பந்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ அணி 1-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.

பின்னர் 2 ஆவது பாதி ஆட்டம் ஆரம்பமானதும் அதில் கிடைத்த பெனால்டி உதை வாய்ப்பை சதகமாக்கிய சாப்மி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலைப்படித்தியதுடன் மேலும் ஆட்ட நேர நிறைவை அண்மிக்க போது கிடைத்த மூலை உதை வாய்ப்பையும் கோலாக மாற்றி 2-1 என்ற கோல்க் கணக்கில் வெற்றியை உறுதி செய்து கொண்டனர்.

சாப்மி இனம் என்பது ஸ்கன்டிநேவியா தீபகற்பத்தின் வடக்கு பகுதியிலும் கோலா தீபகற்பத்தின் பெரும் பகுதியிலுமுள்ள பழங்குடியின் மக்கள் மற்றும் நோர்வே, ரஷ்யா, சுவீடன், பின்லாந்து ஆகியஸ்கன்டிநேவியா நாடுகளில் சிறுபான்மைக்குழுவாக அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இனத்தினிரின் ஒன்று சேர்ந்த அணியே சாப்மி அணியாகும்.

கொனீபா உலகக்கிண்ண இறுதியாட்ட முதல் பாதியில் தமிழீழ அணி முன்னிலை

image_pdfPRINT

கொனீபா மகளீர் உலகக்கிண்ண தொடரின் இறுதியாட்டத்தில் சற்று முன்னர் முதல் பாதி ஆட்ட நேர முடியிவில் 1-0 என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி முன்னிலையிலுள்ளது.

சாப்மி அணிக்கெதிராக ஆட்டத்தின் ஆரம்பம் முதலே பநதை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ அணி டிலக்சிக்காவின் அபார கோலுடன் சற்று முன்னர் நிறைவுக்கு வந்த முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

https://youtu.be/rIfKgK4IsHE?si=aId-Qup0XEmJkaUd

கொனீபா மகளீர் உலகக்கிண்ண தொடரின் இறுதியாட்டத்தில் களம் காணும் தமிழீழ அணி

image_pdfPRINT

கொனீபா மகளீர் உலக்கிண்ண தொடரின் இறுதியாட்டத்திறகு நுழைந்துள்ள தமிழீழ மகளீர் அணி இன்று சனிக்கிழமை (08.06.2024) நடைபெறவுள்ள கிண்ணத்துக்கான இறுதியாட்டத்தில் சாப்மி அணியை எதிர்கொள்கின்றது.

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெற்று வரும் மகளீரர் உலகக்கிண்ண தெடரின் இறுதியாட்டம் ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரான நோர்வேயில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறுகின்றது.

இதில் 6 சுற்றுக்கள் நிறையில் இறுதிப் போட்டிக்குள் நழைந்துள்ள தமிழீழ பெண்கள் அணியும் – சாப்மி அணியும் மோதுகின்றன.

சுhப்மி இனம் என்பது ஸ்கன்டிநேவியா தீபகற்பத்தின் வடக்கு பகுதியிலும் கோலா தீபகற்பத்தின் பெரும் பகுதியிலுமுள்ள பழங்குடியின் மக்கள் மற்றும் நோர்வே, ரஷ்யா, சுவீடன், பின்லாந்து ஆகியஸ்கன்டிநேவியா நாடுகளில் சிறுபான்மைக்குழுவாக அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இனத்தினிரின் ஒன்று சேர்ந்த அணியே சாப்மி அணியாகும்.

தொடரின் முதல் சுற்று நிலை போட்டிகளில் ஏற்கனவே இரு தடவைகள் மோதியுள்ள இரு அணிகளும் இன்று இறுதிப்போட்டியில் களம் காணுகின்றமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் உலகமெங்குமுள்ள தமிழர்களின் பார்வையை கொனீபா உலகக்கிண்ணம் நோக்கி திருப்பியுள்ளது.

இந்நிலையில் இன்றைய இறுதியாட்டம் தொடர்பில் தமிழீழ மகளீர் அணியின் தலைவி மற்றும் தலைமைப் பய்றுவிப்பாளர் உதவிப் பயிற்றுவிப்பாளர்கள் உடற்பயிற்சி பொறுப்பாளர் அணி முகாமையாளர்கள் நமது ஈழநாட்டுக்கு வழங்கிய நேர்காணல் பின்வருமாறு,

https://youtu.be/CgPBDHPC-8s

தமிழ் பொது வேட்பாளர் மூலோபாயம் பயனற்றது – சம்பந்தன்

image_pdfPRINT

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது என்றும் தென்னிலங்கை தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக தமது நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆணை வழங்கி வருகின்ற போதிலும் அதனை கருத்தில் கொள்ளாது ஆட்சியாளர்கள் செயற்படுகின்றனர்.

எனவே ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூகம் தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை அளிப்பதற்கு மாறாக தமிழ் மக்கள் வழங்கும் ஆணையை உறுதிப்படுத்துமாறு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும்  இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கவுன்சிலர் TOM DRUMMOND ன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள தமிழ் இளைஞர்கள்

image_pdfPRINT

பிரித்தானியாவில் நடக்கவிருக்கும் பொதுதேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல்வாதிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் தமிழின படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபத்தனையின் அடிப்படையில் அப்பிரச்சாரத்தில் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேர்ந்துத்துள்ளனர்.

இந்நிலையில் Sutton மற்றும் Cheam தொகுதிகளை பிரதிநிதிதுவப்படுத்தி ஆளும்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலர் CLLR TOM DRUMMOND அவர்களின் தேர்தல் பரப்புரையில் தமிழ் இளைஞர்கள் கலந்துகொண்டு அவருக்கானா பிரச்சார பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரச்சார பணியில் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் பெருமாள் தலைமையில் அனுஷன் பாலசுப்ரமணியம், திலீபன் அபிநாஷ், திராவிட் இராமகிருஷ்ணன் அனந்தகுமார்,தேவஜன்சன் சத்யதேவன் ஆகிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வேட்பாளர்!

image_pdfPRINT

கிறிஷ்னி ரேஷேகரோனுக்கு ஆதரவாக திரண்ட பெருந்தொகையான தமிழர்கள்

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுதேர்தலில் முதல் தடவையாக கிரிஷ்னி ரேஷேகரோன் (Chrishni Reshekaron) என்ற ஈழத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ்ப்பெண் போட்டியிடவுள்ளார்.

பிரித்தானிய தொழில்கட்சி சார்பாக, சட்டன் மற்றும் சீயாம் (Sutton and Cheam) பகுதியில் போட்டியிடவுள்ள கிரிஷ்னி ரேஷேகரோனிற்கு தமது முழுமையான ஆதரவை வழங்க பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து முன்வந்துள்ளனர்.

கிரிஷ்னி ரேஷேகரோனிற்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தை திரு. சென் கந்தையா தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) என்ற அமைப்பு, கடந்த ஞாயிறு (02 ஜூன் 2024) அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தது.

இதன்போது ஈழத்தை பூர்வீகமாக கொண்ட வைத்தியர்கள், சட்டத்தணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்ட தமிழ் மக்கள் பெருமளவில் தமிழர்கள் திரண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கும், இனப்படுகொலைக்கு நீதி கோரி இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பிரேரிக்கவும், போர்குற்றவாளிகளை பிரித்தானியா தடைசெய்யவும் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் கிரிஷ்னி ரேஷேகரோனிடம் தமிழர்களால் கோரிக்கை விடப்பட்டது.

தொழிலாளர் கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் அர்ப்பணிப்பானது சட்டன் மற்றும் சீயாம் பிரதேசங்களில் ஒற்றுமை மற்றும் வலிமையை எடுத்துக்காட்டுகிறது என்று கிறிஷ்னி ரேஷேகரன் தனது நன்றியுரையில் கூறினார். அரசியல் பங்கேற்பு மற்றும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நன்கு அறியப்பட்ட தொழிலாளர்களுக்காக தமிழர்கள் என்ற அமைப்பு, ரேஷேகரனின் கொள்கைகள் தங்கள் கொள்கைகளுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதை திரு சென் கந்தையா தனது பேச்சில் எடுத்துரைத்தார். பிரித்தானிய பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால், வாக்காளர்களை உற்சாகப்படுத்துவதிலும், நாடாளுமன்றத்தில் மாறுபட்ட பிரதிநிதித்துவத்திற்கு உத்தரவாதம் அளிப்பதிலும் இந்தக் கூட்டாண்மை இன்றியமையாததாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பிரச்சார ஆரம்பிப்பு நிகழ்வை தன்னார்வ தொண்டர்கள் முன்னின்று நடந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அரசியல் செயற்பாட்டாளராகிய விஸ்வா ரமேஸ் அவர்களின் தலைமையில், திருச்செல்வம் சிவகாந், செல்வராஜ் இலங்கநாதன், கோபிநாத் கந்தசாமி, தனுசன் ராசேந்திரம், ஏஞ்சலோ நிருஷன் கதிராமர், துரைராஜா நீதிராஜா, கனகசபாபதி கார்த்திகேசன் ஆகியோர் உள்ளிட்ட இளையோர் அணி முக்கிய பங்காற்றி இருந்தனர். அறிமுக பேச்சுக்களின் பின்னர் வீடு வீடாக சென்று கிரிஷ்னி ரேஷேகரனுக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்து, 10,000க்கு மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். அவர்களது அர்ப்பணிப்பான இந்த பிரச்சார பணி அப்பகுதியில் உள்ள மக்களின் மனதைக் கவர்ந்தது.

error: Content is protected !!